இந்த காரெல்லாம் பட்ஜெட் கம்மி, சேஃப்டி ஜாஸ்தி! டாப் 5ல 3 டாடா கார் தான்!
இந்தியாவில் மிடில் கிளாஸ் குடும்பங்கள் வாங்கக்கூடிய கார்கள் என்றால் அது பட்ஜெட் கார்கள் தான். ரூ10 லட்சத்திற்குக் குறைவான விலையில் உள்ள கார்கள் தான் அவர்களின் குறி. இவர்களின் விருப்பம் விலையும் குறைவாக இருக்கவேண்டும். குடும்பத்தோடு செல்லும் போது பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் அப்படிப் பட்ட கார்களை தான் அதிகம் தேர்வு செய்கிறார். இந்த பதிவில் ரூ10 லட்சத்திற்குக் குறைவான விலையில் இந்தியாவில் விற்பனையாகும் அதிக பாதுகாப்பான கார்களை பற்றித் தான் காணப்போகிறோம்.
சமீபத்தில் மஹிந்திராவின் ஸ்கார்பியோ என் மற்றும் மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட், இக்னீஷ், எஸ்-பிரெஸ்ஸோ ஆகிய கார்கள் குலோபல் NCAP கிராஷ் டெஸ்டில் ஈடுபடுத்தப்பட்டன. இதில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் 5 ஸ்டார் ரேட்டிங்கும், மாருதி நிறுவனத்தின் கார்கள் 1 ஸ்டார் ரேட்டிங்கும் பெற்றது. இந்த செய்தி வெளியான பிறகு இந்த கிராஷ் டெஸ்ட் குறித்த விவாதங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மக்களுக்குக் குறைந்த விலையில் அதிக பாதுகாப்பு தரம் கொண்ட கார்கள் குறித்து தெரியப்படுத்தவே இதை எழுதியுள்ளோம்.

டாடா பஞ்ச்
கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட குறைந்த விலை காரில் டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் இருக்கிறது. இது பெரியவர்களுக்கான ரேட்டிங்கில் 5 ஸ்டார்களும், சிறுவர்களுக்கான ரேட்டிங்கில் 4 ஸ்டார்களையம் வழங்குகிறது. இந்த காரில் டூயல் ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் ஸ்வே கண்ட்ரோல், லோ ட்ராக்ஷன் மோட், சீட் பெல்ட் ரிமைன்டர், ஹை ஸ்பீடு அலர்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்டு மவுண்ட் சிட்கள் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. இந்த கார் மார்கெட்டில் ரூ6 லட்சம் முதல் ரூ9.54 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.
மஹிந்திரா எஸ்யூவி300
மஹிந்திரா நிறுவனத்தின் சப் காம்பேக்ட் எஸ்யூவி கார் இது. இந்த கார் குலோபல் NCAP கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெரியவர்களுக்காகவும், 4 ஸ்டார் ரேட்டிங்கை குழந்தைகளுக்காகவும் பெற்றுள்ளது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள், 4 டிஸ்க் பிரேக், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் பார்க்கிங் சென்சார்கள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்பி, ஐஎஸ்ஓ ஆங்கர்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.இந்த கார் மார்கெட்டில் ரூ8.41 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.
டாடா ஆல்ட்ராஸ்
ஹேட்ச் பேக் செக்மெண்டில் பாதுகாப்பான கார்களில் இதுவும் ஒன்று. இந்த கார் கிராஷ் டெஸ்டில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங்கையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. இந்த காரில் ட்வின் ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் கேமரா, சீட் பெல்ட் ரிமைன்டர், ஐஎஸ்ஓ சைல்டு சீட் மவுண்ட் ஆகிய அம்சங்கள் இருகு்கிறது. இந்த கார் மார்கெட்டில் ரூ6.34 லட்சம் முதல் ரூ10.25 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.
டாடா நெக்ஸான்
இந்த பட்டியலில் உள்ள 3வது டாடா நிறுவனத்தின் கார் இது. இந்த காரின் பாதுகாப்பு தரத்திற்காகச் சிறப்பான விற்பனையைப் பெற்றுவரும் கார். இந்த கார் கிராஷ் டெஸ்டில் பெரியவர்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங்கும், குழந்தைகளுக்கு 3 ஸ்டார் ரேட்டிங்கும் பெற்ற கார். இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர்பேக்கள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் கேமரா, டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், பிரேக் டிஸ்க் வைப்பிங், ஐஎஸ்ஓ சைல்டு-சீட் மவுண்ட் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இந்த கார் மார்கெட்டில் ரூ7.70 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனையாகிறது.
ஹோண்டா ஜாஸ்
ஹோண்டா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் இது. இந்த கார் கிராஷ் டெஸ்டில் பெரியவர்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங்கையும், குழந்தைகளுக்கு 3 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்ற கார். இந்த கார் மார்கெட்டில் ரூ8.11 லட்சம் முதல் ரூ10.41 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த காருக்கு எனத் தனி ரசிகர்களே இருக்கின்றனர். இந்த காரின் டிசைனே பல ரசிகர்களை தன் வசம் இழுத்தது.


Click it and Unblock the Notifications








