புதுசா கார் வாங்கப்போகிறீர்களா? இந்த 9 கார் அடுத்த மாசம் வரப்போகுது... இதை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க...

வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள கார்களின் பட்டியலை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம். இதில் மாருதி சுஸூகி ஆல்டோ முதல் பென்ஸ் கார் வரை ஏகப்பட்ட கார்கள் உள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

புதுசா கார் வாங்கப்போகிறீர்களா ? இந்த 9 கார் அடுத்த மாசம் வரப்போகுது . . . இதை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க . . .

இந்த 2022ம் ஆண்டு முதல் பாதியில் இந்தியாவில் புதிது புதிதாக ஏராளமான கார்கள் அறிமுகமாகின. இந்நிலையில் இரண்டாம் பாதி ஏராளமான பண்டிகைகள் வரவுள்ளன. இதையொட்டி ஏராளமான கார்கள் அடுத்தடுத்து அறிமுகத்திற்காகத் தயாராகி வருகின்றன. அந்த வகையில் இந்த பதிவில் நாம் இந்தியாவில் அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் வெளியாகியுள்ள டாப் 5 கார்கள் மற்றும் எஸ்யூவிகளின் பட்டியலைத் தான் காணப்போகிறோம்.

புதுசா கார் வாங்கப்போகிறீர்களா ? இந்த 9 கார் அடுத்த மாசம் வரப்போகுது . . . இதை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க . . .

ஹூண்டாய் டூஸான்

ஹூண்டாய் நிறுவனம் தனது சர்வதேச மார்கெட்டில் நல்ல விற்பனையில் இருந்த டூஸான் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்தது. இதற்கான புக்கிங்கையும் துவங்கியது. இந்த காரை புக் செய்ய நினைக்கும் வாடிக்கையாளர்கள் ரூ50 ஆயிரம் முன்பணம் கொடுத்து புக் செய்யலாம். சர்வதேச அளவில் 70 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில் இந்தியாவிலும் இந்த காருக்கு நல்ல மவுசு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுசா கார் வாங்கப்போகிறீர்களா ? இந்த 9 கார் அடுத்த மாசம் வரப்போகுது . . . இதை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க . . .

புதிய டூஸான் காரை பொருத்தவரை ஸ்போர்ட்டியர் டிசைன் மொழியை கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கம் பெரிய கிரில் முக்கோண வடிவ எல்இடி டிஆர்எல்கள், பின்பக்கம் T வடிவ டெயில் லைட், பின்பக்க விண்ட் ஸ்கிரினிற்கு கீழே ஹூண்டாய் எம்பிளம், என டிசைன் அம்சங்களைப் பெற்றுள்ளது. டூஸான் காரில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின் மெண்ட் சிஸ்டம், அத்துடன் இணைக்கப்பட்ட போஸ் பிரிமியர் சவுண்ட் சிஸ்டம், ப்ளு லிங்க் கின் 60 அம்சங்கள் நிறைந்த கனெக்ட்டெட் கார் தொழிற்நுட்பம், பல மொழி UI சப்போர்ட், பின்பக்க ரெக்லைட் சீட்கள், 64 நிலற அம்பியன்ஸ் லைட்டிங், ஆலெக்ஸா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டென்ட், பவர்டு டெயில் கேட், வயர்லெஸ் சார்ஜ் , டிரைவர் பவர் சீட் மெமரி பங்சன்,ரெயின் சென்சிங் வைப்பர்கள், 18 டைமண்ட் கட் அலாய் வீல் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது.

புதுசா கார் வாங்கப்போகிறீர்களா ? இந்த 9 கார் அடுத்த மாசம் வரப்போகுது . . . இதை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க . . .

இந்த ஹூண்டாய் டூஸான் காரில் 2.0 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் இன்ஜின் 186 பிஎச்பி பவரையும் 417 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், பெட்ரோல் இன்ஜின் 156 பிஎஸ் பவரையும் 192 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. டீசல் இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் இன்ஜின் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஹூண்டாய் டூஸான் காரில் HTRAC ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

புதுசா கார் வாங்கப்போகிறீர்களா ? இந்த 9 கார் அடுத்த மாசம் வரப்போகுது . . . இதை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க . . .

5 மஹிந்திரா எலெக்ட்ரிக் எஸ்யூவிகள்

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தனது 5 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கான டீசரை வெளியிட்டது. அதன்படி இந்த கார்கள் எல்லாம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்பு அறிமுகமாகவுள்ளது. இந்த டீசல் மொத்தம் 5 எஸ்யூவி கார்களின் சில்லவுட்கள் வெளியானது இதில் 4 எஸ்யூவிகள் கூபே எஸ்யூவிகளாகவும், கடைசியாக இருப்பது எக்ஸ்யூவி 700 போன்ற தோற்றத்தையும் தருகிறது.

புதுசா கார் வாங்கப்போகிறீர்களா ? இந்த 9 கார் அடுத்த மாசம் வரப்போகுது . . . இதை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க . . .

மஹிந்திரா நிறுவனம் லண்டனில் தனது கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இது போக இந்நிறுவனம் எக்ஸ்யூவி 400 காரை வரும் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த எக்ஸ்யூவி 400 கார் தற்போது மார்கெட்டில் உள்ள டாடா நெக்ஸான் இவி, எம்ஜி ZS இவி, ஹூண்டாய் கோனா இவி ஆகிய கார்களுடன் போட்டிப் போடுகிறது.

புதுசா கார் வாங்கப்போகிறீர்களா ? இந்த 9 கார் அடுத்த மாசம் வரப்போகுது . . . இதை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க . . .

மாருதி சுஸூகி ஆல்டோ

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனம் சமீபத்தில் தனது ஆல்டோ காரின் புதிய தலைமுறை காரை வரும் ஆகஸ்ட் 18ம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த காரின் விளம்பர சூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி புதிய ஆல்டோ கார் சைஸ் பெரியதாகவும் அதாவது நீளத்திலும், உயரத்திலும் பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் வேறு மாதிரியாக டிசைனில் ஸ்டைலிங் செய்யப்பட்டுள்ளது. இதன் டெயில் லைட் கிட்டத்தட்ட 2022 செலிரியோ காரின் டெயில் லைட் டிசைனிலேயே இருக்கிறது.

புதுசா கார் வாங்கப்போகிறீர்களா ? இந்த 9 கார் அடுத்த மாசம் வரப்போகுது . . . இதை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க . . .

ஆல்டோ காரை பொருத்தவரை 796 சிசி 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். புதிய காரில் இதில் ஏதாவது ட்வீக் செய்யப்பட்டோ அப்டேட் செய்யப்பட்டோ வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. மாருதி சுஸூகி நிறுவனம் ஆல்டா கே 10 இன்ஜினையும் இந்த காரில் பொருத்த வாய்ப்புள்ளது. ஆனால் 2022 எஸ்-பிரஸ்ஸொ காரில் இதே இன்ஜின் தான் பொருத்தப்பட்டு 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷனலாக வருகிறது. செலிரியோ காரிலும் ஏஜிஎஸ் (ஏஎம்டி)கியர் ஆப்ஷனாக வருகிறது.

புதுசா கார் வாங்கப்போகிறீர்களா ? இந்த 9 கார் அடுத்த மாசம் வரப்போகுது . . . இதை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க . . .

டொயோட்டா ஹைரைடர்

டொயோட்டா நிறுவனம் மாருதி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய காரை ஹைரைடர் என்ற பெயரில் வெளியிடுகிறது. இந்த காரை அந்நிறுவனம் கடந்த ஜூலை1ம் தேதி மக்களுக்கு காட்டிய நிலையில் இதை வரும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் விற்பனைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்கான புக்கிங் தற்போது ரூ25000 முன்பணத்துடன் நடந்து வருகிறது.

புதுசா கார் வாங்கப்போகிறீர்களா ? இந்த 9 கார் அடுத்த மாசம் வரப்போகுது . . . இதை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க . . .

இந்த கார் சுஸூகியில் குளோபல் சில பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு கர்நாடக மாநிலம் பிடரியில் உள்ள ஆலையில் தயாரிக்கப்படுகிறது. இந்த காரின் வெளிப்புற தோன்றத்தை பொருத்தவரை மஸ்குலர் பேனட், கிளான்சா காரை போன்ற முன்பக்க கிரில், ஸ்பிலிட் எல்இடி டிஆர்எல், 17 இன்ச் மல்டி ஸ்போக் அலாய் வீல், முன்பக்க டோரில் ஹைபிரிட் பேட்ஜ் பாடி கிளாடிக் ஸ்கிட் பிளேட் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

புதுசா கார் வாங்கப்போகிறீர்களா ? இந்த 9 கார் அடுத்த மாசம் வரப்போகுது . . . இதை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க . . .

இந்த காரின் உட்புறத்தைப் பொருத்தவரை டொயோட்டாவின் 55 அம்சங்கள் கொண்ட ஐ- கனெக்ட் வசதி, ஸ்மார்ட் வாட்ச் கனெக்டிவிட்டி, 9 இன்ச் ஸ்மார்ட் பிளே கேஸ்ட் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வாய்ஸ் கண்ட்ரோல், ரிமோட் ஏசி ஆன் மற்றும் ஆஃப், ரிமோட் வாகன ரககனேஷன், வயர்லெஸ் சார்ஜிங், பானரோமிக் சன் ரூப், எச்யூடி ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

புதுசா கார் வாங்கப்போகிறீர்களா ? இந்த 9 கார் அடுத்த மாசம் வரப்போகுது . . . இதை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க . . .

இந்த டொயோட்டா அர்பன் க்ரூஸியர் ஹைரைடர் கார் இரண்டு பவர்டெரைய் ஆப்ஷன்களுடன் இருக்கிறது. நியோ டிரைவ் மற்றும் செல்ஃப் சார்ஜிங் ஸ்டிராங்க் ஹைபிரிட் எலெக்டரிக் பவர் டெயரைனில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 105 எச்பி பவரையும் 122 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 59KW மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. து 141 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இது மொத்தமாக 114 எச்பி பவரையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் ஆல் வில் டிரைவ் சிஸ்டத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு ஆட்டோமெடிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனும் உள்ளது. இந்த கார் ரூ10.5 லட்சம் என்ற விலையில் மார்கெட்டில் உள்ள கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், எம்ஜி அஸ்டர், மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது.

புதுசா கார் வாங்கப்போகிறீர்களா ? இந்த 9 கார் அடுத்த மாசம் வரப்போகுது . . . இதை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க . . .

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஈக்யூஎஸ் 53 4மேடிக் +

மெர்சிடீஸ் - பென்ஸ் இந்தியா நிறுவனம் வரும் ஆகஸ்ட் 24ம் தேதி தனது ஈக்யூஎஸ் எலெக்ட்ரிக் செடான் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இது ஈக்யூஎஸ் பெர்ஃபாமென்ஸ் ஏஎம்ஜி வெர்ஷனாக வெளியாகவுள்ளது.இந்த மெர்சிடிஸ்- ஏஎம்ஜி ஈக்யூஎஸ் 53 4 மேடிக்+ காரை பொருத்தவரை 2 எலெக்டரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒன்று ஆக்ஸிலிலும், மற்றொன்று ஏஎம்ஜி ஃபெர்பாமென்ஸ் 4மேடிக்+ ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் அதிகபட்சமாக 658 பிஎச்பி பவரையும், 950 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.4 நொடிகளில் பிக்கப் செய்துவிடும். அதிகபட்சமாக 250 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

புதுசா கார் வாங்கப்போகிறீர்களா ? இந்த 9 கார் அடுத்த மாசம் வரப்போகுது . . . இதை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க . . .

இந்த மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஈக்யூஎஸ் 53 4மேடிக்+ காரில் டைனமிக் செலெக்ட் டிரைவிங் மோட்கள் - ஸ்லிப்பரி, கம்ஃபோர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட்+ மற்றும் இன்டிவிஜூவல் ஆகிய மோட்கள் உள்ளது. அது போக இந்த காரில் ஏஎம்ஜி ரைடு கண்ட்ரோல் + சஸ்பென்சன் அம்சம் உள்ளது. இது முழுமையாக எலெக்ட்ரிக்கலில் கண்ட்ரோல் செய்யப்படும். அட்ஜெஸ்டபுள் ரியர் ஆக்ஸில் ஸ்டீரிங் வசதியை வழங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 28, 2022, 12:02 [IST]
English summary
List of top 5 SUVs in planning to launch in august 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+