பள்ளம், மேடு எதுல வேணாலும் ஏத்தி இறக்கலாம்! இந்த கார் எல்லாம் விலையும் சல்லிசு, கிரவுண்ட் கிளியரன்ஸூம் ஜாஸ்தி
இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் (Ground Clearance) கொண்ட குறைந்த விலை கார்களின் பட்டியல் இதோ உங்களுக்காக.
இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த பகுதிகளில் செல்ல அதிக கிரவுண்ட் கிரியரன்ஸ் கொண்ட கார்கள் தான் தேவை. இந்த பதிவில் நாம் குறைந்த விலையில் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்களை பற்றித் தான் காணப்போகிறோம்.

மாருதி எஸ்-பிரஸ்ஸோ (Maruti S-Presso)
மாருதி நிறுவனத்தின் மைக்ரோ எஸ்யூவி காரான எஸ்-பிரஸ்ஸோ கார் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட குறைந்தவிலை காராக இருக்கிறது. இந்த காரில் 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது. இதனால் கரடு முரடான சாலைகளையும் இந்த காரில் எளிதாகக் கடந்து விட முடியும். இந்த காரின் விலை ரூ4.25 லட்சமாகும்
ரெனால்ட் க்விட் (Renault Kwid)
ரெனால்ட் நிறுவனம் பல சிறப்பம்சங்களுடன் குறைந்த விலையில் க்விட் காரை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது. இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸை பொருத்தவரை 184 மிமீ இருக்கிறது. இந்த காரின் விலை ரூ4.64 லட்சம்
மாருதி இக்னீஸ் (Maruti Ignis)
மாருதி நிறுவனம் தனது இக்னீஷ் காரை நெக்ஸா ஷோரூம்களில் விற்பனை செய்து வருகிறது. இந்த காரிலும் 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால் எளிதாக பள்ள மேடுகள் நிறைந்த சாலைகளிலும் பயணிக்க முடியும். இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 82 பிஎச்பி பவரையும் 113என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரின் விலை ரூ5.35 லட்சம்.
ரெனால்ட் டிரைபர் (Renault Triber)
ரெனால்ட் நிறுவனம் டிரைபர் காரை குறைந்த விலை எம்பிவி காராக விற்பனை செய்துவருகிறது. இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸை பொருத்தவரை 182 மிமீ இருக்கிறது. இந்த காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் கிராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த காரின் விலை ரூ 5.92 லட்சம்
டாடா பஞ்ச் (Tata Punch)
டாடா நிறுவனம் மினி எஸ்யூவியாக பஞ்ச் காரை விற்பனை செய்து வருகிறது. இது சிறப்பாக விற்பனையாகும் காராகஇரகு்கிறது. இந்த கார் உயரமாக கார் என்பதால் இந்த பட்டியலிலேயே அதிகமாக 187 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது. இந்த கார் மினி எஸ்யூவி செக்மெண்டிலேயே பாதுகாப்பு நிறைந்த காராக இருக்கிறது. இந்த காரின் விலையைப் பொருத்தவரை ரூ5.99 லட்சம்
டாடா டியாகோ என்ஆர்ஜி (Tata Tiago NRG)
டாடா நிறுவனத்தின் டியாகோ என்ஆர்ஜி காரின் கிரவுண்ட் கிளியரன்ஸூம் அதிகம். இந்த காரில் 181 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது. இந்த காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் 1199 சிசி 3 சிலிண்டர் இன்ஜினை கொண்டது. இது 86 பிஎஸ் பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரின் விலை ரூ6.5லட்சம்.


Click it and Unblock the Notifications








