கார்களில் உள்ள இந்த அம்சங்களை எல்லாம் வேண்டாம்னு தவிர்த்துவிடுங்கள்... இதெல்லாம் வீண் செலவு தான்

கார்களில் இன்று பல அம்சங்கள் தேவையில்லாமல் இருக்கிறது. இந்த அம்சங்களால் பெரிய அளவில் சௌகரியம் இல்லை.

Recommended Video

மஹிந்திரா அட்வென்ச்சர் ஆஃப் ரோடு பயிற்சி மையம்-தற்போது மங்களூருவில்

ஆனால் செலவு தான் அதிகமாக இருந்து வருகிறது. இது குறித்த விபரங்களைக் காணலாம்.

கார்களில் உள்ள இந்த அம்சங்களை எல்லாம் வேண்டாம்னு தவிர்த்துவிடுங்கள் . . . இதெல்லாம் வீண் செலவு தான் . . .

இன்று இந்தியாவில் ஏகப்பட்ட கார்கள் புதிது புதிதாக அறிமுகமாகிறது. மக்கள் பல ஒவ்வொரு காரிலும் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது எனப் பார்த்துப் பார்த்து வாங்குகின்றனர். ஒவ்வொரு காரையும் மற்ற கார்களுடன் ஒப்பீடு செய்கின்றனர்.

கார்களில் உள்ள இந்த அம்சங்களை எல்லாம் வேண்டாம்னு தவிர்த்துவிடுங்கள் . . . இதெல்லாம் வீண் செலவு தான் . . .

இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் கார் மார்கெட்டில் உள்ள கார்களிலிருந்து எக்ஸ்ட்ராவாக என்னென்ன

அம்சங்களைப் பொருத்தலாம் எனப் பார்த்துப் பார்த்து வடிவமைக்கின்றனர்.

கார்களில் உள்ள இந்த அம்சங்களை எல்லாம் வேண்டாம்னு தவிர்த்துவிடுங்கள் . . . இதெல்லாம் வீண் செலவு தான் . . .

இப்படியாக இன்று மார்கெட்டில் கார்களில் இருக்கும் சில அம்சங்கள் உண்மையில் தேவையில்லாத அம்சங்களாக இருக்கின்றன. இதற்காக கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகம் செலவு செய்கிறது.

கார்களில் உள்ள இந்த அம்சங்களை எல்லாம் வேண்டாம்னு தவிர்த்துவிடுங்கள் . . . இதெல்லாம் வீண் செலவு தான் . . .

இதனால் காரின் விலையும் அதிகமாகிறது. இப்படியாக இன்று மார்கெட்டில் உள்ள கார்களில் இருக்கும் தேவையில்லாத அம்சங்கள் என்ன என்பதைத் தான் இந்த பதிவில் விரிவாகக் காணப்போகிறோம்.

கார்களில் உள்ள இந்த அம்சங்களை எல்லாம் வேண்டாம்னு தவிர்த்துவிடுங்கள் . . . இதெல்லாம் வீண் செலவு தான் . . .

கீ லெஸ் புஷ் பட்டன்

இன்று கார்களில் சாவி போட்டுத் திருகி ஸ்டார்ட் செய்வது பழைய நடைமுறையாகிவிட்டது. சாவி இல்லாமலேயே ஒரு பட்டனை அழுத்தி ஸ்டார்ட் செய்ய முடியும். இப்படி இருந்தால் கார் திருடப்பட்டு விடுமே என நீங்கள் நினைக்கலாம். இதற்காக ஒரு கீ கொடுக்கப்படுகிறது. அந்த கீ ஓட்டுநரிடம் இருந்தால் மட்டுமே காரை ஸ்டார்ட் செய்ய முடியும். கீ லெஸ் காரிலும் கீ என ஒன்று வைக்க வேண்டும். இது முற்றிலும் தேவையில்லாத அம்சம் தான். கீ என ஒன்று இருக்கக்கூடாது என்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட தொழிற்நுட்பதிலும் கீ இருக்கிறது. இதனால் இந்த கண்டுபிடிப்பிற்குப் பலனே இல்லை. இருந்தாலும் இந்த அம்சத்தை கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களின் பிரிமியம் ஃபீல்காக வைக்கின்றனர். இதனால் கார் தயாரிப்பு விலை அதிகமாகி காரின் விலையும் அதிகமாவது தான் மிச்சம்.

கார்களில் உள்ள இந்த அம்சங்களை எல்லாம் வேண்டாம்னு தவிர்த்துவிடுங்கள் . . . இதெல்லாம் வீண் செலவு தான் . . .

ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்

நாம் கார்களில் பயணிக்கும் போது சில நேரம் இருட்டாக இருந்தாலும் ஹெட்லைட் போட மறந்திருப்போம். சில காரம் பகலில் ஹெட்லைட் போட்டுப் பயணித்திருப்போம். இப்படியான சூழ்நிலைகளில் காரின் ஹெட்லைட்டை தானாக ஆன் ஆஃப் செய்யும் தொழிற்நுட்பம் தற்போது கார்களில் பொருத்தப்படுகிறது. இதுவும் முற்றிலும் தேவையில்லாத ஒரு அம்சம் தான். இரவில் ஹெட்லைட் போட மறந்தால் நமக்கே தெரிந்து சில நொடிகளில் ஹெட்லைட்டை ஆன் செய்து விடுவோம். இந்த தொழினுட்பத்திற்காகச் செலவு செய்யும் பணம் காரின் விலையை அதிகமாக்கி விடுகிறது.

கார்களில் உள்ள இந்த அம்சங்களை எல்லாம் வேண்டாம்னு தவிர்த்துவிடுங்கள் . . . இதெல்லாம் வீண் செலவு தான் . . .

சன்ரூஃப்

கார்களில் சன்ரூஃப் இன்று பொருத்தப்படுவது ஃபேஷன் ஆகிவிட்டது. இப்படியாக சன்ஃரூப்கள் பொதுவாக கார்களில் ஏசி கிளைமேட்டை விட வெளிப்புறத்தில் கிளைமேட் சிறப்பாக இருந்தால் அதை கார்களில் பயணிக்கும் போதே அனுபவிக்கும் வகையில் தான் கார்களில் சன்ஃரூப்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்தியாவில் அப்படியான கிளைமேட் வெகு சில இடங்களில் தான் இருக்கிறது. பெரும்பாலும் தூசு டிராபிக், போன்ற சூழல் தான் காணப்படும். இந்த இடத்தில் சன்ரூஃபை திறந்தால் காருக்குள் தூசுகள் வந்துவிடும். சிலர் இந்த சன்ரூஃபை ஏதோ காரிலிருந்து சிலர் வெளியே எட்டிப் பார்க்க அமைக்கப்பட்ட இடம் போல கருதி கார் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் போது வெளியே எட்டிப் பார்க்கின்றனர். இது முற்றிலும் ஆபத்தான செயல் கார் திடீரென பிரேக் பிடித்தால் இப்படியாக நிற்பவருக்குக் காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த அம்சமும் இந்தியாவில் தேவையில்லாத அம்சம் தான்.

கார்களில் உள்ள இந்த அம்சங்களை எல்லாம் வேண்டாம்னு தவிர்த்துவிடுங்கள் . . . இதெல்லாம் வீண் செலவு தான் . . .

பேட்ஜ் கலர்

கார்களின் உட்புறத்தைப் பொருத்தவரை பல கார்களில் பேட்ஜ் கலர் கொடுக்கப்படுகிறது. இது காருக்கு பிரிமியம் ஃபீலை தருவதாக கார் தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி அதிகமான பராமரிப்பு செலவையும் தரும். இந்த நிறம் சுலபமாக அழுக்காகிவிடும் என்பதால் இதை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இதனால் காரின் உட்புறத்தில் டார்க் நிற சீட் கவர்களை பொருத்துவது தான் சிறந்த தேர்வு, பேட்ஜ் நிற பிரிமியம் தேவையில்லாத ஆணி தான்.

கார்களில் உள்ள இந்த அம்சங்களை எல்லாம் வேண்டாம்னு தவிர்த்துவிடுங்கள் . . . இதெல்லாம் வீண் செலவு தான் . . .

கேபாசிட்டிவ் கண்ட்ரோல்கள்

முன்னர் காருக்கான ஏசி, ரேடியோ, உள்ளிட்ட சென்றால் கன்சோலில் இருக்கும் கண்ரோல்கள் எல்லாம் பட்டன் அல்லது நாம் வடிவிலிருந்தது. இதனால் ஓட்டுநர் சாலையிலிருந்து கண்ணை எடுக்காமலேயே இதையெல்லாம் கண்ட்ரோல் செய்ய முடியும். ஆனால் இன்று தொழிற்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் இந்த கண்ரோல்கள் எல்லாம் டச் ஸ்கிரினிற் மாற்றி வருகின்றனர். இதனால் டிரைவர் இதை கண்ட்ரோல் செய்வது சிரமம். இந்த கண்ட்ரோல்கள் எல்லாம் ஃபிசிக்கல் பட்டன்களாக இருப்பதே சிறந்தது. டச் ஸ்கிரீன் தேவையில்லாத டார்ச்சர் தான்.

கார்களில் உள்ள இந்த அம்சங்களை எல்லாம் வேண்டாம்னு தவிர்த்துவிடுங்கள் . . . இதெல்லாம் வீண் செலவு தான் . . .

புரோக்ஸிமிட்டி சென்சார்

இந்த கருவி காரின் முன்புறம் மற்றும் பின்புறம் பொருத்தப்பட்டிருக்கும் நீங்கள் பம்பர் டு பம்பர் டிராஃபிக்கில் செல்லும் போது உங்கள் கார் மற்ற காரை இடிக்காமல் இந்த சென்சார் பாதுகாத்துக்கொள்ளும். இதைக் கேட்டும் போது அட சிறப்பான அம்சமாக இருக்கிறதே என்று தான் தோன்றும். ஆனால் இதை ரியல் லைஃப்பில் நீங்கள் ஓட்டிப்பார்க்கும் போது உங்களுக்கு பெரும் எரிச்சலைத் தான் தரும். இந்த அம்சம் இல்லாமல் இருப்பதே சிறந்தது எனத் தோன்றும். இந்த அம்சத்தாலும் காரின் விலை அதிகமாகிறது.

கார்களில் உள்ள இந்த அம்சங்களை எல்லாம் வேண்டாம்னு தவிர்த்துவிடுங்கள் . . . இதெல்லாம் வீண் செலவு தான் . . .

அம்பியன்ட் லைட்டிங்

இன்று கார்களில் ஆம்பியன்ட் லைட்டிங் என்ற அம்சம் ஒன்று கொடுக்கப்படுகிறது. அதன்படி காருக்குள் ஒரே தீமில் கலர் கலராக லைட்டிங் கொடுப்பது தான் இதன் முக்கியமான அம்சம். இது குறைந்த தூரப் பயணத்திற்குச் சிறப்பாக இருக்கலாம். ஆனால் நீண்ட தூரப் பயணத்தில் பயணிகளுக்குத் தலைவலியை ஏற்படுத்திவிடும். இந்த அம்சம் காசு கொடுத்து தலைவலியை வாங்கிய அனுபவத்தைத் தான் தரும்.

கார்களில் உள்ள இந்த அம்சங்களை எல்லாம் வேண்டாம்னு தவிர்த்துவிடுங்கள் . . . இதெல்லாம் வீண் செலவு தான் . . .

ரூஃப் ரெய்ல்ஸ்

பொதுவாக ரூஃப் ரெயில்கள் உங்கள் காரின் பூட் பகுதியில் வைக்க முடியாத அளவிற்கு உள்ள அதிகமா லக்கேஜ்களை காரின் மேலே வைத்துக் கட்டிக்கொண்டு செல்ல பயன்படுத்துவது தான். ஆனால் இன்று அவ்வளவு எடையைத் தாங்கும் அளவிற்கு ரூஃப் ரெயில்கள் இல்லை. மாறாக இன்று வெறும் காரை பெரியதாகவும் பல்கி லுக்கிற்காகவும் தான் கார் தயாரிப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் அதற்காகச் செலவு செய்யும் தொகை வீண் தான் அதில் பயனில்லை.

கார்களில் உள்ள இந்த அம்சங்களை எல்லாம் வேண்டாம்னு தவிர்த்துவிடுங்கள் . . . இதெல்லாம் வீண் செலவு தான் . . .

வாய்ஸ் கமெண்ட்ஸ்

கார்களில் செல்லும் போது வாய்ஸ் கமெண்ட்ஸ் மூலம் சில விஷயங்களைச் செய்வதற்காக இந்த வசதி செய்யப்படுகிறது. ஆனால் இன்று மார்கெட்டில் உள்ள வாய்ஸ் கமெண்ட்ஸ்களை உள்வாங்கும் கருவிகள் குறிப்பிட்ட ஆக்ஸன்டில் பேசினால் மட்டுமே புரிந்து கொள்ளும். இந்தியாவில் பெரும்பாலும் ஆங்கிலத்தை ஒவ்வொருவரும் வேறு வேறு ஆக்ஸன்டில் பேசுகின்றனர்.

கார்களில் உள்ள இந்த அம்சங்களை எல்லாம் வேண்டாம்னு தவிர்த்துவிடுங்கள் . . . இதெல்லாம் வீண் செலவு தான் . . .

இந்த வசதிக்காகச் சிலர் சில காலம் வெளிநாட்டு ஆக்ஸன்ட்களில் பேசுவர். ஆனால் நாளடைவில் கைவிட்டு இந்த வசதியைப் பயன்படுத்தாமலேயே விட்டு விடுவார்கள். அந்த வசதியும் வீண் தான்.

கார்களில் உள்ள இந்த அம்சங்களை எல்லாம் வேண்டாம்னு தவிர்த்துவிடுங்கள் . . . இதெல்லாம் வீண் செலவு தான் . . .

ஆட்டோமெட்டிக் வைப்பர்கள்

நாம் காரில் செல்லும் போது மழை பெய்தால் வைப்பர்கள் தானாக வேலை செய்யும் தொழிற்நுட்பம் இன்று பயன்படுத்தப்படுகிறது. இதுவும் முற்றிலும் வீண் தான். காரில் செல்லும் போது மழை பெய்தால் டிரைவருக்கு இந்த வைப்பரை ஆன் செய்வது வெறும் ஒரே நொடியில் செய்யும் வேலை தான் இதை மச்சம் செய்ய ஆட்டோமெட்டிக் கருவியை பொருத்துவது செலவைத் தான் அதிகரிக்குமே தவிர உங்கள் வேலையைச் சுலபமாக்காது. ஆட்டோமெட்டிக் ஹெட்லைட் போல இதுவும் வீண் தான்.

More from DriveSpark

Article Published On: Monday, August 22, 2022, 12:22 [IST]
English summary
List of unwanted features in car which is totally waste of money
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+