மைலேஜ் எல்லாம் சும்மா பிச்சுக்கும்... வெளியீட்டிற்காக வரிசை கட்டி நிற்கும் ஹைபிரிட் கார்கள்...

இந்தியாவில் அதிக மைலேஜ் கொண்ட கார்களாக தற்போது ஹைபிரிட் கார்கள் மாறி வருகிறது. அதன்படி இந்தியாவில் வரவுள்ள ஹைபிரிட் கார்களின் பட்டியலைக் காணலாம் வாருங்கள்.

மைலேஜ் எல்லாம் சும்மா பிச்சுக்கும் . . . வெளியீட்டிற்காக வரிசை கட்டி நிற்கும் ஹைபிரிட் கார்கள் . . .

இந்தியாவில் முக்கியமான கார் தயாரிப்பாளர்கள் எல்லாம் வழக்கமான தங்கள் பாணியிலிருந்து மாற்றி வேறு வேறு திசையில் பயணிக்கத் துவங்கிவிட்டனர். டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் முழுவதும் எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகிறது. இன்று டாடா நிறுவனம் தான் எலெக்ட்ரிக் காரில் சிறப்பான விற்பனையைப் பெற்று வருகிறது. அதே நேரத்தில் மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் ஹைபிரிட் காரை தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறது.

மைலேஜ் எல்லாம் சும்மா பிச்சுக்கும் . . . வெளியீட்டிற்காக வரிசை கட்டி நிற்கும் ஹைபிரிட் கார்கள் . . .

எலெக்ட்ரிக் கார்கள் தயாரிப்பு தற்போது ஆரம்பக் கட்டத்தில் தான் இருக்கும் நிலையில் ஹைபிரிட் கார்கள் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. அந்த வரிசையில் இப்பொழுது நாம் அடுத்தடுத்து இந்தியாவிற்குள் வரவிருக்கும் ஹைபிரிட் கார்களின்பட்டியலை தான் இந்த பதிவில் காணப்போகிறோம். அதிக மைலேஜ் உள்ள கார்களை விரும்புபவர்களுக்கு இந்த ஹைபிரிட் கார்கள் எல்லாம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதம் தான்.

மைலேஜ் எல்லாம் சும்மா பிச்சுக்கும் . . . வெளியீட்டிற்காக வரிசை கட்டி நிற்கும் ஹைபிரிட் கார்கள் . . .

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

டொயோட்டா நிறுவனம் இன்னோவா காரில் ஹைகிராஸ் என்ற புதிய காரை அடுத்த மாதம் சர்வதேச அளவில் இந்தோனேஷியாவில் வைத்து அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் வரும் 2023ம் ஆண்டு ஆரம்பத்திலேயே இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் பிரிமியம் எம்பிவி காராக விற்பனைக்கு வரும் டிஎன்ஜிஏ-சி மோனோக்யூ பிளாட்ஃபார்மில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்க வீல் டிரைவ்வில் வரும் இந்த கார் ஸ்டிராங்க் ஹைபிரிட் காராக இருக்கும். இந்த காரில் வயர்லெஸ் சார்ஜர்,பானரோமிக் சன்ரூஃப் ஆகிய பல முக்கியமான அம்சங்கள் இருக்கிறது.

மைலேஜ் எல்லாம் சும்மா பிச்சுக்கும் . . . வெளியீட்டிற்காக வரிசை கட்டி நிற்கும் ஹைபிரிட் கார்கள் . . .

நிஸான் எக்ஸ்-டிரைல்

நிஸான் நிறுவனம் இந்த எக்ஸ்-டிரைல் காரை சர்வதேச அளவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அறிமுகப்படுத்தினார்கள். இந்த கார் சோதனையில் இருக்கும் போது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த கார் புதிய வெளிப்புறத் தோற்றம் மேம்படுத்தப்பட்ட உட்புற கட்டமைப்பு என பல முக்கியமான அம்சங்களைக் கொண்டிருந்தது. இந்த கார் இ-பவர் டெக்னாலஜியில் இயங்கும் திறன் கொண்டது. இதுவும் ஹைபிரிட் தொழிற்நுட்பம் தான். இந்த கார் இந்தியாவில் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி க்ளோஸ்டர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் களம் இறங்குகிறது.

மைலேஜ் எல்லாம் சும்மா பிச்சுக்கும் . . . வெளியீட்டிற்காக வரிசை கட்டி நிற்கும் ஹைபிரிட் கார்கள் . . .

மாருதி சுஸூகி சி-எம்பிவி

மாருதி நிறுவனம் டொயோட்டா நிறுவனத்துடன் கூட்டு வைத்து இவரும் தங்கள் தொழிற்நுட்பத்தை பகிர்ந்து கொள்கின்றனர். இப்படியாக பாலேனோ-கிளான்ஸா, அர்பன் க்ரூஸர் ஹைரைடர் - கிராண்ட் விட்டாரா ஆகிய கார்கள் எல்லாம் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த கட்டமாக டொயோட்டா நிறுவனம் வெளியிடும் ஹைகிராஸ் காரின் தொழிற்நுட்பத்தில் மாருதி நிறுவனம் புதிதாக சி-செக்மெண்ட் எம்பிவி காரை அறிமுகப்படுத்தவுள்ளது.

மைலேஜ் எல்லாம் சும்மா பிச்சுக்கும் . . . வெளியீட்டிற்காக வரிசை கட்டி நிற்கும் ஹைபிரிட் கார்கள் . . .

இந்த கார் பேட்ஜ்டு இன்ஜினியரிங் முறையில் உருவாக்கப்படவுள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் ஸ்டிராங்க் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இன்னோவாவிற்கு போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்

மைலேஜ் எல்லாம் சும்மா பிச்சுக்கும் . . . வெளியீட்டிற்காக வரிசை கட்டி நிற்கும் ஹைபிரிட் கார்கள் . . .

ஹோண்டா மிட்-சைஸ் எஸ்யூவி

ஹோண் நிறுவனம் தற்போது 5 சீட்டர் மிட் சைஸ் எஸ்யூவி கார் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 3RA என்ற கோட் பெயரில் அழைக்கப்படும் இந்த கார் 5ம் தலைமுறை சிட்டி காரின் பிளாட்ஃபார்மிலேயே தான் இயக்கப்படுகிறது.

மைலேஜ் எல்லாம் சும்மா பிச்சுக்கும் . . . வெளியீட்டிற்காக வரிசை கட்டி நிற்கும் ஹைபிரிட் கார்கள் . . .

இதே இன்ஜின் தான் சிட்டி ஹைபிரிட் வேரியன்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மிட் சைஸ் எஸ்யூவி 2024ம் ஆண்டு தான் அறிமுகப்படுத்தப்படும். அதற்கு முன்னதாக ஒரு காம்பேக்ட் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்படும். இதில் மிட் சைஸ் எஸ்யூவி மட்டும் தான் ஹைபிரிட் காராக வெளியாக இருக்கிறது.

மைலேஜ் எல்லாம் சும்மா பிச்சுக்கும் . . . வெளியீட்டிற்காக வரிசை கட்டி நிற்கும் ஹைபிரிட் கார்கள் . . .

மாருதி சுஸூகி பலேனோ க்ராஸ்

மாருதி நிறுவனம் வரும் 2023 ஜனவரி மாதம் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் பலேனோ க்ராஸ் காரை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கனவே உள்ள பலேனோ காரை கூபே வடிவ ரூஃப் லைன்களுடன் மாற்றியமைக்கப்பட்டு 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பூஸ்டர் ஜெட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் மைல்டு ஹைபிரிட் கே15சி பெட்ரோல் இன்ஜின் ஆகிய 2 வேரியின்ட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைலேஜ் எல்லாம் சும்மா பிச்சுக்கும் . . . வெளியீட்டிற்காக வரிசை கட்டி நிற்கும் ஹைபிரிட் கார்கள் . . .

டொயோட்டா எஸ்யூவி கூபே

டொயோட்டா நிறுவனம் தற்போது ஒரு எஸ்யூவி கூபே காரை வடிவமைத்து வருவதாக பேச்சு இருக்கிறது. இது குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. இது புதிய தலைமுறை அர்பன் க்ரூஸர் காரா அல்லது மாருதி பலேனோ க்ராஸ் காரின் ரீபேட்ஜ் வெர்ஷனா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் இந்த காரும் 2023ம் ஆண்டே வெளியாகிவிடும் எனக் கூறப்படுகிறது.

மைலேஜ் எல்லாம் சும்மா பிச்சுக்கும் . . . வெளியீட்டிற்காக வரிசை கட்டி நிற்கும் ஹைபிரிட் கார்கள் . . .

இந்த கார்கள் எல்லாம் ஹைபிரிட் கார்கள். இந்தியாவில் மாசுக் கட்டுப்பாடு காரணமாக பிஎஸ்6 நடைமுறையில் இருப்பதால் அதற்குத் தகுந்தார் போல டீசல் இன்ஜினை வடிவமைக்கச் சிரமப்பட்ட நிறுவனங்களுக்கு ஹைபிரிட் கார்கள் சிறந்த மாற்றாகத் தெரிகிறது. இந்த இன்ஜின் அதிகமான மைலேஜை தருவதால் இந்த கார்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்த கார்களில் நீங்கள் எதை வாங்கும் ஐடியாவில் இருக்கிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Saturday, October 22, 2022, 10:22 [IST]
English summary
List of upcoming hybrid cars seen in India
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+