சூப்பரான முதல் எஸ்யூவி காரை வெளியீடு செய்தது லோட்டஸ்... தோற்றம், சிறப்பம்சம் என அனைத்தும் தரமோ தரமா இருக்குது!

லோட்டஸ் (Lotus) நிறுவனம் அதன் முதல் எஸ்யூவி மற்றும் எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்திருக்கின்றது. இக்காரின் சிறப்புகள் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சூப்பரான முதல் எஸ்யூவி காரை வெளியீடு செய்தது லோட்டஸ்... தோற்றம், சிறப்பம் என அனைத்தும் தரமோ தரமா இருக்குது!

பிரபல சூப்பர் கார் உற்பத்தி நிறுவனமான லோட்டஸ் எலெட்ரே (Lotus Eletre) எனும் புதுமுக காரை வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் மின்சார எஸ்யூவி ரக காராகும். இதுவே நிறுவனம் உற்பத்தி செய்யும் முதல் மின்சாரம் மற்றும் எஸ்யூவி ரக கார் மாடலாகும். ஆகையால், இக்காரின் வெளியீடு வாகன பிரியர்கள் மத்தியில் பெருத்த ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

சூப்பரான முதல் எஸ்யூவி காரை வெளியீடு செய்தது லோட்டஸ்... தோற்றம், சிறப்பம் என அனைத்தும் தரமோ தரமா இருக்குது!

இது ஓர் சாதாரண மின்சார எஸ்யூவி ரக கார் என நினைத்துக் கொள்ள வேண்டாம். இக்கார் ஓர் ஹைப்பர் எஸ்யூவி ரக வாகனமாகும். இதனால்தான் எலெட்ரேவின் வெளியீடு பலரை ஈர்த்திருக்கின்றது. இக்காரை லோட்டஸ் நிறுவனம் அதன் புதிய ஸ்கேட்போர்டு ஆர்கிடெக்சர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கியிருக்கின்றது.

சூப்பரான முதல் எஸ்யூவி காரை வெளியீடு செய்தது லோட்டஸ்... தோற்றம், சிறப்பம் என அனைத்தும் தரமோ தரமா இருக்குது!

லோட்டஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக நான்கு மின்சார கார் மாடல்களை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றது. அதில் ஒன்றே தற்போது வெளியீட்டைப் பெற்றிருக்கும் எலெட்ரே மின்சார எஸ்யூவி ரக ஹைப்பர் காராகும். மேலும், இதுவரை இல்லாத வகையிலான ஓர் புதிய தோற்றத்தில் இந்த காரை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

சூப்பரான முதல் எஸ்யூவி காரை வெளியீடு செய்தது லோட்டஸ்... தோற்றம், சிறப்பம் என அனைத்தும் தரமோ தரமா இருக்குது!

புதுமையான தோற்றத்தில் அக்கார் உருவாக்கப்பட்டிருப்பதை நாம்மாலும் காண முடிகின்றது. இதற்காக புதிய பாடி பேனல்கள் மற்றும் புதிய அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவற்றை லோட்டஸ் பயன்படுத்தியிருக்கின்றது. அந்தவகையில் நிறுவனம் பயன்படுத்தியிருக்கும் அட்டகாசமான அம்சங்களில் ஒன்றாக காரின் முகப்பு பகுதியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் பகல்நேர எல்இடி மின் விளக்கு காட்சியளிக்கின்றது.

சூப்பரான முதல் எஸ்யூவி காரை வெளியீடு செய்தது லோட்டஸ்... தோற்றம், சிறப்பம் என அனைத்தும் தரமோ தரமா இருக்குது!

இதனை நிறுவனம் மிருகங்களின் மூக்கு போன்ற அமைப்பில் வடிவமைத்திருக்கின்றது. மேலும், அது மிகவும் மெல்லியதாக காட்சியளிக்கின்றது. இதையடுத்து, ஹெட்லைட்டுகளும் கண்களைக் கவரும் வகையில் உள்ளன. அது, கருப்பு நிறத்தில் உள்ள க்ரில்-லில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த க்ரில் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. காரில் இடம் பெற்றிருக்கும் ஹைலைட்டான அம்சங்களில் இதுவும் ஒன்று.

சூப்பரான முதல் எஸ்யூவி காரை வெளியீடு செய்தது லோட்டஸ்... தோற்றம், சிறப்பம் என அனைத்தும் தரமோ தரமா இருக்குது!

காரின் மின் மோட்டார் இருக்கும் பகுதிக்கு அதிகப்படியான காற்றைக் கடத்திச் செல்லும் வகையில் இந்த க்ரில்லில் இரு வெண்டுகள் (துளைகள்) கொடுக்கப்பட்டுள்ளன. இது மோட்டாரை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். அதேநேரத்தில் இந்த துளைகளை தேவைக்கேற்ப திறந்து, மூடிக் கொள்ள முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துளைகள் லோட்டஸ் நிறுவனத்தின் முந்தைய ஸ்போர்ட்ஸ் கார்களை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

சூப்பரான முதல் எஸ்யூவி காரை வெளியீடு செய்தது லோட்டஸ்... தோற்றம், சிறப்பம் என அனைத்தும் தரமோ தரமா இருக்குது!

தொடர்ந்து, இக்காரின் மேற்கூரை பகுதி கூபே ரக கார்களைப் போன்று காட்சியளிக்கின்றது. இத்துடன், ஸ்பிளிட் ரக ஸ்பாய்ளர் மேற்கூரையின் பின் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் காரின் பின்னழகை பல மடங்கு கூட்டும் வகையில் உள்ளது. இந்த அழகை மேலும் மெருகேற்றும் வகையில் மெல்லிய இழை போன்ற ஸ்டாப் லைட் மற்றும் அதற்கு கீழே லோட்டஸ் நிறுவனத்தின் பெயர் எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன.

சூப்பரான முதல் எஸ்யூவி காரை வெளியீடு செய்தது லோட்டஸ்... தோற்றம், சிறப்பம் என அனைத்தும் தரமோ தரமா இருக்குது!

இதேபோல் பக்கவாட்டு பகுதியை பன் மடங்கு கவர்ச்சியானதாகவும், கட்டுமஸ்தானகாவும் காட்டும் வகையில் காரின் கதவுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒளிரக் கூடிய ஹேண்டில்கள் மற்றும் காற்றுக்கான துளைகள் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன. இந்த கைப்பிடிகள் மிகவும் ஸ்மார்ட்டானவை ஆகும்.

சூப்பரான முதல் எஸ்யூவி காரை வெளியீடு செய்தது லோட்டஸ்... தோற்றம், சிறப்பம் என அனைத்தும் தரமோ தரமா இருக்குது!

சார்ஜ் ஏறுவதற்கு ஏற்ப வெவ்வேறு விதமான வண்ணத்தில் அது ஒளிரும் என கூறப்படுகின்றது. லோட்டஸ் நிறுவனம் இந்த காரை அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட வாகனமாகவும் உருவாக்கியிருக்கின்றது. இதற்கேற்ப பன்முக சிறப்பு வசதிகளை எலெட்ரே-வில் லோட்டஸ் வழங்கியிருக்கின்றது. மிக முக்கியமான அம்சமாக 15.1 என்ற பிரமாண்ட அளவிலான சென்ட்ரல் டச்ஸ்கிரீன் இருக்கின்றது.

சூப்பரான முதல் எஸ்யூவி காரை வெளியீடு செய்தது லோட்டஸ்... தோற்றம், சிறப்பம் என அனைத்தும் தரமோ தரமா இருக்குது!

இது டேஷ்போர்டில் பொருத்தப்பட்டுள்ளது. வழக்கமான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் இருந்து இது பல மடங்கு மாறுபட்டு காட்சியளிக்கும். இதுதவிர, முன் பக்க பயணிக்கென பிரத்யேக திரை ஒன்றும் இக்காரில் வழங்கப்படும். மேலும் ஹெட்ஸ் அப் திரை, பின் பக்கத்தை பார்ப்பதற்கு கண்ணாடிகளுக்கு பதிலாக கேமிரா (இது காருக்கு பின்னால் நடைபெறும் அனைத்தையும் காருக்குள் இருக்கும் ஓர் திரை வாயிலாக காண்பிக்கும்), லிடார் தொழில்நுட்பம் (தானியங்கி இயக்கத்திற்கு இது உதவும்), யுஐ சப்போர்ட்டுடன் 5ஜி இணைப்பு உள்ளிட்ட பன்முக சிறப்பம்சங்கள் எலெட்ரே காரில் இடம் பெற இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூப்பரான முதல் எஸ்யூவி காரை வெளியீடு செய்தது லோட்டஸ்... தோற்றம், சிறப்பம் என அனைத்தும் தரமோ தரமா இருக்குது!

காரின் தோற்றத்தைப் ஏற்ப காருக்குள் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆம், ஸ்போர்ட்ஸ் கார்களில் கொடுக்கப்படுவதைப் போன்ற அதிக மிருதுவான மற்றும் நீண்ட பயணத்திற்கு ஏற்ற இருக்கைகளே இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், முன் பக்கத்திற்கு மட்டுமே ஸ்போர்ட்ஸ் ரக இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. பின் பக்கத்திற்கு வழக்கமான கார்களில் கொடுக்கப்படும் இருக்கைகளே கொடுக்கப்பட்டுள்ளன.

சூப்பரான முதல் எஸ்யூவி காரை வெளியீடு செய்தது லோட்டஸ்... தோற்றம், சிறப்பம் என அனைத்தும் தரமோ தரமா இருக்குது!

இது ஓர் ஐந்திருக்கை அமைப்புடைய எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த காரில் இரு விதமான மின் மோட்டார் செட்-அப்பை நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இவை அனைத்து வீல்களையும் இயங்க செய்யும். இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மோட்டார் 592 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதுமட்டுமில்லைங்க, மணிக்கு உச்சபட்சமாக 260 கிமீ வேகத்தில் செல்லும் திறனையும் இது வழங்கும்.

சூப்பரான முதல் எஸ்யூவி காரை வெளியீடு செய்தது லோட்டஸ்... தோற்றம், சிறப்பம் என அனைத்தும் தரமோ தரமா இருக்குது!

மேலும், 0-100 kmph எனும் சூப்பரான வேகத்தை வெறும் 3 செகண்டுகளிலேயே அது தொட்டுவிடும். இவற்றுடன் சேர்த்து ஒரு முழமையான சார்ஜில் 600 கிமீ ரேஞ்ஜை வழங்கக் கூடிய பேட்டரி பேக் இக்காரில் வழங்கப்பட இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை 350 kW திறன் கொண்ட சார்ஜிங் பாயிண்டில் வைத்துகூட சார்ஜ் செய்து கொள்ள முடியும். இத்தகைய சூப்பரான அம்சங்கள் கொண்ட காரையே லோட்டஸ் நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரை சீனாவில் தனக்கு சொந்தமான உற்பத்தி ஆலையில் வைத்தே லோட்டஸ் தயாரிக்க இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 30, 2022, 19:24 [IST]
English summary
Lotus unviels first electric suv car eletre
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+