முழு சார்ஜில் 590கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை நாளை வெளியீடு செய்கிறது பிரபல நிறுவனம்... அட்டகாசமான கார்!

முழுமையான சார்ஜில் 590 கிமீ பயணிக்கக் கூடிய மின்சார காரை பிரபல கார் உற்பத்தி நிறுவனம் நாளை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

முழு சார்ஜில் 590 கிமீ பயணிக்க கூடிய எலெக்ட்ரிக் காரை நாளை வெளியீடு செய்கிறது பிரபல நிறுவனம்... கார் அட்டகாசமா இருக்கு!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு கிடைப்பதைப் போல மிக சூப்பரான வரவேற்பு எலெக்ட்ரிக் கார்களுக்கும் கிடைத்து வருகின்றது. இதன் விளைவாக இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் பிராண்டின்கீழ் தொடர்ச்சியாக மின்சார கார்களைக் களமிறக்கி வருகின்றனர்.

முழு சார்ஜில் 590 கிமீ பயணிக்க கூடிய எலெக்ட்ரிக் காரை நாளை வெளியீடு செய்கிறது பிரபல நிறுவனம்... கார் அட்டகாசமா இருக்கு!

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ-வும் இந்த பணியில் தீவிரமாக காட்டி வருகின்றது. நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் ஐஎக்ஸ் ( iX) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதனைக் கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து நிறுவனம் விற்பனைக்குக் வழங்கு வருகிறது.

முழு சார்ஜில் 590 கிமீ பயணிக்க கூடிய எலெக்ட்ரிக் காரை நாளை வெளியீடு செய்கிறது பிரபல நிறுவனம்... கார் அட்டகாசமா இருக்கு!

இந்த நிலையில் இரண்டாவதாக ஓர் மின்சார கார் மாடலையும் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர பிஎம்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய காரையே நாளை (ஏப்ரல் 28) இந்தியாவில் வெளியீடு செய்ய இருக்கின்றது, பிஎம்டபிள்யூ. ஐ4 எனும் செடான் ரக எலெக்ட்ரிக் காரையே நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

முழு சார்ஜில் 590 கிமீ பயணிக்க கூடிய எலெக்ட்ரிக் காரை நாளை வெளியீடு செய்கிறது பிரபல நிறுவனம்... கார் அட்டகாசமா இருக்கு!

நிறுவனம் முதல் கட்டமாக ஐ4 செடான் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்டை மட்டும் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, இரு வீல் இயக்கம் திறன் கொண்ட இடிரைவ்40 (eDrive40) ட்ரிம்மை நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் யூகிக்கப்படுகின்றது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் நாளையே வெளியிடப்பட உள்ளது.

முழு சார்ஜில் 590 கிமீ பயணிக்க கூடிய எலெக்ட்ரிக் காரை நாளை வெளியீடு செய்கிறது பிரபல நிறுவனம்... கார் அட்டகாசமா இருக்கு!

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காரை போலவே அதிக சிறப்பு வசதிகள் கொண்ட மின்சார காராக ஐ4 காட்சியளிக்கின்றது. சொகுசு வசதியிலும் இந்த கார் மிக சூப்பரான தயாரிப்பாக உள்ளது. இதுமட்டுமின்றி அதிக கவர்ச்சியான தோற்றம் மற்றும் மிக சிறந்த திறனை வெளியேற்றக் கூடிய காராகவும் அது இருக்கின்றது.

முழு சார்ஜில் 590 கிமீ பயணிக்க கூடிய எலெக்ட்ரிக் காரை நாளை வெளியீடு செய்கிறது பிரபல நிறுவனம்... கார் அட்டகாசமா இருக்கு!

கவர்ச்சி விஷயத்தை பொருத்தவரை ஐ4 காரில் உயரமான மற்றும் பிளாங்கான கிட்னி க்ரில் முகப்பு பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், எல்இடி மின் விளக்குகள், பின் பக்கத்தில் எல் வடிவ மின் விளக்கு, கூபே தோற்றம் ஆகிய சிறப்புகள் கொண்ட காராகவும் ஐ4 காட்சியளிக்கின்றது. இத்துடன், காரின் உட்பகுதியில் 12.3 அங்குல டிரைவருக்கான திரை, 14.9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய ஐடிரைவ் ஓஎஸ் ஆகிய அம்சங்கள் ஐ4இல் கொடுக்கப்பட்டுள்ளன.

முழு சார்ஜில் 590 கிமீ பயணிக்க கூடிய எலெக்ட்ரிக் காரை நாளை வெளியீடு செய்கிறது பிரபல நிறுவனம்... கார் அட்டகாசமா இருக்கு!

இது ஓர் ப்யூர் எலெக்ட்ரிக் காராகும். இக்காரில் 83.9kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலக சந்தையில் இந்த கார் தற்போது இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இடிரைவ்40 மற்றும் எம்50 எக்ஸ்டிரைவ் (உயர் திறன் வெளிப்படுத்தக் கூடியது) ஆகிய தேர்வுகளிலேயே அது கிடைத்து வருகின்றது.

முழு சார்ஜில் 590 கிமீ பயணிக்க கூடிய எலெக்ட்ரிக் காரை நாளை வெளியீடு செய்கிறது பிரபல நிறுவனம்... கார் அட்டகாசமா இருக்கு!

இதில், இடிரைவ்40 வேரியண்ட் 335 பிஎச்பி மற்றும் 430 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 493 கிமீ முதல் 590 கிமீ வரை ரேஞ்ஜ் திறனை வெளியேற்றும். இதேபோல், அதிக ரேஞ்ஜை வழங்கக் கூடிய ஓர் தேர்வாக எம்50 உள்ளது. 461 கிமீ முதல் 521 கிமீ வரையிலான ரேஞ்ஜை வழங்கக் கூடிய இத்தேர்வு இருக்கின்றது.

முழு சார்ஜில் 590 கிமீ பயணிக்க கூடிய எலெக்ட்ரிக் காரை நாளை வெளியீடு செய்கிறது பிரபல நிறுவனம்... கார் அட்டகாசமா இருக்கு!

ரேஞ்ஜ் வெளிப்பாட்டில் சற்று குறைவானதாக இந்த கார் காட்சியளித்தாலும் செயல்திறனில் அதிக பவர் கொண்டதாக எம்50 வேரியண்ட் காட்சியளிக்கின்றது. இது 536 பிஎச்பி பவர் மற்ரும் 795 என்எம் டார்க்கை வெளியேற்றும். மேலும், வெறும் 3.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ எனும் வேகத்தை எட்டக் கூடிய திறனையும் அது கொண்டுள்ளது.

முழு சார்ஜில் 590 கிமீ பயணிக்க கூடிய எலெக்ட்ரிக் காரை நாளை வெளியீடு செய்கிறது பிரபல நிறுவனம்... கார் அட்டகாசமா இருக்கு!

ஆனால், ஐ4 தேர்வு இந்த வேகத்தை எட்ட 5.7 செகண்டுகளை எடுத்துக் கொள்ளும். இரு தேர்வுகளையும் ஏசி மற்றும் டிசி என இரு விதமான சார்ஜிங் பாயிண்டில்வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். உயர் வேக சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும் போது 34 நிமிடங்களிலும், வீட்டு பிளக் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது 13 மணி நேரங்களையும் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை அடைய அது எடுத்துக் கொள்ளும்.

முழு சார்ஜில் 590 கிமீ பயணிக்க கூடிய எலெக்ட்ரிக் காரை நாளை வெளியீடு செய்கிறது பிரபல நிறுவனம்... கார் அட்டகாசமா இருக்கு!

இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட மின்சார காரையே நாளைய தினம் பிஎம்டபிள்யூ இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் விலை மற்றும் புக்கிங் பணிகள் தொடங்கும் நாள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் நாளைய தினமே வெளியிடப்பட இருக்கின்றது. ஆகையால், இதன் வருகையை சொகுசு கார் பிரியர்கள் பெரிய ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 28, 2022, 14:02 [IST]
English summary
Luxury car maker bmw debutes 2022 i4 electric sedan in india tomorrow
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+