ஆடி ஏ6 சொகுசு காருக்கு ஆப்பு வைக்கணுமாம்! செல்ஃப் சார்ஜ் வசதியுடன் லெக்சஸ் இஎஸ் 300எச் சொகுசு செடான் அறிமுகம்!

லெக்சஸ் (Lexus) நிறுவனம் அதன் இஎஸ் 300எச் (ES 300h) சொகுசு செடான் காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஆடி ஏ6 சொகுசு காருக்கு ஆப்பு வைக்கணுமாம்... செல்ஃப் சார்ஜ் வசதியுடன் அப்டேடட் லெக்சஸ் இஎஸ் 300எச் சொகுசு செடான் அறிமுகம்!

லெக்சஸ் (Lexus) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் இஎஸ் 300எச் (ES 300h)-ம் ஒன்று. இந்த காரையே அப்டேட் செய்து லெக்சஸ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. புதுப்பித்தலின்கீழ் பல்வேறு மாற்றங்களையும், புதிய அம்சங்களையும் இக்காரில் நிறுவனம் புகுத்தியிருக்கின்றது. இந்த கார் எக்ஸ்க்யூசைட் மற்றும் லக்சூரி என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஆடி ஏ6 சொகுசு காருக்கு ஆப்பு வைக்கணுமாம்... செல்ஃப் சார்ஜ் வசதியுடன் அப்டேடட் லெக்சஸ் இஎஸ் 300எச் சொகுசு செடான் அறிமுகம்!

விலை விபரம்:

  • இஎஸ் 300எச் எக்ஸ்க்யூசைட் வேரியண்டிற்கு ரூ. 59.71 லட்சமும்,
  • இஎஸ் 300எச் லக்சூரி வேரியண்டிற்கு ரூ. 65.81 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மேலே பார்த்த இரு விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். பழைய வெர்ஷனைக் காட்டிலும் சற்று அதிக விலையில் இரு கார்கள் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதை இந்த விலைகள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.

    ஆடி ஏ6 சொகுசு காருக்கு ஆப்பு வைக்கணுமாம்... செல்ஃப் சார்ஜ் வசதியுடன் அப்டேடட் லெக்சஸ் இஎஸ் 300எச் சொகுசு செடான் அறிமுகம்!

    முன்னதாக இஎஸ் 300எச் எக்ஸ்க்யூசைட் ரூ. 56.65 லட்சத்திற்கு விற்கப்பட்டு வந்தது. இதேபோல், இதன் லக்சூரி வேரியண்ட் ரூ. 61.85 லட்சத்திற்கு விற்கப்பட்டு வந்தது. இந்த விலையிலேயே ரூ. 3.06 லட்சம் மற்றும் 3.96 லட்ச ரூபா வரை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. புதுப்பித்தலின் காரணத்தினால் விலை சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஆடி ஏ6 சொகுசு காருக்கு ஆப்பு வைக்கணுமாம்... செல்ஃப் சார்ஜ் வசதியுடன் அப்டேடட் லெக்சஸ் இஎஸ் 300எச் சொகுசு செடான் அறிமுகம்!

    என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?

    காரின் முகப்பு பகுதி தொடங்கி உட்பக்கம் வரையில் பல பகுதிகளில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், புதிய ஸ்டைலிலான லோகோ காரின் முன் மற்றும் பின் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காரின் உட்பகுதியில் மிக முக்கியமான மாற்றமாக சென்ட்ரல் கன்சோல் பகுதியிலும் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    ஆடி ஏ6 சொகுசு காருக்கு ஆப்பு வைக்கணுமாம்... செல்ஃப் சார்ஜ் வசதியுடன் அப்டேடட் லெக்சஸ் இஎஸ் 300எச் சொகுசு செடான் அறிமுகம்!

    இத்துடன், கூடுதல் இட வசதியை வழங்கும் வகையில், காரின் உட்பக்கத்தின் பிரீமியம் தோற்றத்தை மேலும் மெருகேற்றும் வகையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சில புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. குரலை அடையாளம் காணும் அம்சம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய அம்சங்களே புதிதாக வழங்கப்பட்டுள்ளன.

    ஆடி ஏ6 சொகுசு காருக்கு ஆப்பு வைக்கணுமாம்... செல்ஃப் சார்ஜ் வசதியுடன் அப்டேடட் லெக்சஸ் இஎஸ் 300எச் சொகுசு செடான் அறிமுகம்!

    இந்த அம்சங்கள் வாயிலாக ஹேண்ட்ஸ் ஃப்ரீ மற்றும் பன்முக சுவாரஷ்யமான அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, புதிய பயன்பாட்டாளருக்கான சுயவிபரத்தை உருவாக்கும் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் தற்போதைய புதிய வெர்ஷன் லெக்சஸ் இஎஸ் 300எச் கார் மிகுந்த அலாதியான பயண அனுபவத்தை வழங்கும் என்பது மிக தெளிவாக தெரிகின்றது.

    ஆடி ஏ6 சொகுசு காருக்கு ஆப்பு வைக்கணுமாம்... செல்ஃப் சார்ஜ் வசதியுடன் அப்டேடட் லெக்சஸ் இஎஸ் 300எச் சொகுசு செடான் அறிமுகம்!

    அப்டேட்டின் வாயிலாக சிறப்பம்சங்கள் சேர்த்தல் மற்றும் கணிசமான அலங்கார வேலை மட்டுமே செய்யப்பட்டிருக்கின்றது. குறிப்பாக, மோட்டார் விஷயத்தில் நிறுவனம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. தானாக சார்ஜ் செய்து கொள்ளும் ஹைபிரிட் தொழில்நுட்பம் மற்றும் 2.5 லிட்டர் பெட்ரோல் மோட்டாருடனேயே இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

    ஆடி ஏ6 சொகுசு காருக்கு ஆப்பு வைக்கணுமாம்... செல்ஃப் சார்ஜ் வசதியுடன் அப்டேடட் லெக்சஸ் இஎஸ் 300எச் சொகுசு செடான் அறிமுகம்!

    இவையிரண்டும் சேர்ந்து 218 பிஎஸ் பவர் வரை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேலையில், பெட்ரோல் மோட்டார் மட்டும் தனியாளாக 175 பிஎச்பி பவரையும், 221 என்எம் டார்க்கையும் வழங்கும். இதன் இயக்கத்தை சுலபமானதாக மாற்றும் விதமாக இ-சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது.

    ஆடி ஏ6 சொகுசு காருக்கு ஆப்பு வைக்கணுமாம்... செல்ஃப் சார்ஜ் வசதியுடன் அப்டேடட் லெக்சஸ் இஎஸ் 300எச் சொகுசு செடான் அறிமுகம்!

    இந்த லக்சூரி செடான் காரின் வருகை பிற சொகுசு செடான் கார்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, ஆடி ஏ6, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் மெர்சிடிஸ் இ-கிளாஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏற்கனவே இவற்றிற்கு நல்ல டஃபை இந்த கார் கொடுத்து வந்தநிலையில், இந்த போட்டியை இன்னும் பல மடங்கானதாக மாற்றும் வகையில் அப்டேட்டுகளுடன் இஎஸ் 300எச் சந்தையில் களமிறங்கியிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 12, 2022, 19:37 [IST]
English summary
Luxury car maker lexus launched updated es 300h in india at inr 59 71 lakh
மேலும்... #லெக்சஸ் #lexus
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+