லக்சரி கார்கள் விற்பனையில் மொத்தமாக ஓரம் ஒதுங்கிய ஆடி!! தொடர்ந்து கர்ஜித்து கொண்டிருக்கும் மெர்சிடிஸ்!

ஃபடா (FADA) எனப்படும் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு 2022 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட லக்சரி கார்கள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

லக்சரி கார்கள் விற்பனையில் மொத்தமாக ஓரம் ஒதுங்கிய ஆடி!! தொடர்ந்து கர்ஜித்து கொண்டிருக்கும் மெர்சிடிஸ்!

இந்தியாவில் லக்சரி கார்கள் விற்பனை என்றாலே மெர்சிடிஸ் நிறுவனத்தின் கை தான் எப்போதும் ஓங்கி இருக்கும். அது கடந்த பிப்ரவரி மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 964 கார்கள் மெர்சிடிஸ்-பென்ஸ் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன.

லக்சரி கார்கள் விற்பனையில் மொத்தமாக ஓரம் ஒதுங்கிய ஆடி!! தொடர்ந்து கர்ஜித்து கொண்டிருக்கும் மெர்சிடிஸ்!

இது இந்த நிறுவனத்தின் 2021 பிப்ரவரி மாத விற்பனை உடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய 250 யூனிட்கள் குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 690 கார்களையே மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. பிப்ரவரி மாதம் என்பதால் மெர்சிடிஸ் கார்களின் விற்பனை எண்ணிக்கை சற்று குறைவாக உள்ளது. ஏனெனில் வழக்கமாக ஒவ்வொரு மாதத்திலும் இந்தியாவில் பென்ஸ் கார்களின் விற்பனை ஆயிரத்தை கடந்துவிடும்.

லக்சரி கார்கள் விற்பனையில் மொத்தமாக ஓரம் ஒதுங்கிய ஆடி!! தொடர்ந்து கர்ஜித்து கொண்டிருக்கும் மெர்சிடிஸ்!

இதற்கடுத்து இரண்டாவது இடத்திலும் மற்றொரு ஜெர்மன் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ உள்ளது. இந்த லக்சரி கார் பிராண்டில் இருந்து மொத்தம் 697 கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2021 பிப்ரவரி மாதத்திலும் கிட்டத்தட்ட இதற்கு இணையாக 663 பிஎம்டபிள்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்தியாவில் அதிகளவில் சொகுசு கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களாக மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி -ஐ பெரும்பாலும் அனைவரும் கூறுவர்.

லக்சரி கார்கள் விற்பனையில் மொத்தமாக ஓரம் ஒதுங்கிய ஆடி!! தொடர்ந்து கர்ஜித்து கொண்டிருக்கும் மெர்சிடிஸ்!

ஆனால் தற்போதைக்கு மெர்சிடிஸ் & பிஎம்டபிள்யூ பிராண்ட்கள் மட்டுமே பிரதான லக்சரி கார் பிராண்ட்களாக உள்ளன ஏனெனில் இவற்றிற்கு அடுத்துள்ள பிராண்ட்களின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 100க்கும் குறைவானதாகவே உள்ளது. அதிகப்பட்சமாக வால்வோ இந்தியா நிறுவனம் 95 கார்களை கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது. 2021 பிப்ரவரியில் இதனை காட்டிலும் வெறும் 1 யூனிட் மட்டுமே குறைவாக 94 வால்வோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

லக்சரி கார்கள் விற்பனையில் மொத்தமாக ஓரம் ஒதுங்கிய ஆடி!! தொடர்ந்து கர்ஜித்து கொண்டிருக்கும் மெர்சிடிஸ்!

இதற்கடுத்து 4வது இடத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் 91 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால் ஜேஎல்ஆர் பிராண்டில் இருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 199 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது ஜாகுவார் கார்களின் விற்பனை பாதிக்கு மேல் குறைந்துள்ளது. இன்னும் என்ன ஆடியின் பெயர் வரவே இல்லையே என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.

லக்சரி கார்கள் விற்பனையில் மொத்தமாக ஓரம் ஒதுங்கிய ஆடி!! தொடர்ந்து கர்ஜித்து கொண்டிருக்கும் மெர்சிடிஸ்!

ஐந்தாவது இடத்தில்தான் ஆடி நிறுவனம் 63 கார்களின் விற்பனை உடன் உள்ளது. சிபியூ முறையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் ஆடி கார்களின் விற்பனை எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில் இந்த எண்ணிக்கை 51 ஆடி கார்கள் விற்கப்பட்ட 2021 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 12 யூனிட்கள் அதிகம் ஆகும். அப்படியென்றால், எந்த அளவிற்கு இந்தியாவில் ஆடி கார்களின் விற்பனை உள்ளது என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

லக்சரி கார்கள் விற்பனையில் மொத்தமாக ஓரம் ஒதுங்கிய ஆடி!! தொடர்ந்து கர்ஜித்து கொண்டிருக்கும் மெர்சிடிஸ்!

ஆடிக்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் போர்ஷே 28 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. அதுவே 2021 பிப்ரவரி மாதத்தில் இதனை காட்டிலும் 6 யூனிட்கள் அதிகமாக 34 போர்ஷே கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து ஒன்றிலக்கம்தான். கடந்த பிப்ரவரி மாதத்தில் 6 லம்போர்கினி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2021 பிப்ரவரியை காட்டிலும் 2 யூனிட்கள் அதிகமாகும்.

லக்சரி கார்கள் விற்பனையில் மொத்தமாக ஓரம் ஒதுங்கிய ஆடி!! தொடர்ந்து கர்ஜித்து கொண்டிருக்கும் மெர்சிடிஸ்!

2021 பிப்ரவரியில் விற்கப்பட்டதை போல், கடந்த பிப்ரவரியிலும் 1 ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளது. மற்றப்படி 2021 பிப்ரவரியில் 3 யூனிட்கள் விற்பனையாகி இருந்த பெண்ட்லீ கார்கள் கடந்த மாதத்தில் ஒன்று கூட விற்பனையாகவில்லை. இந்த 9 பிராண்ட்களே தற்போதைக்கு இந்தியாவில் லக்சரி & ஸ்போர்ட்ஸ் கார்களை விற்பனை செய்யக்கூடிய பிராண்ட்களாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, March 12, 2022, 17:47 [IST]
English summary
Luxury cars sales february 2022 mercedes benz audi lamborghini volvo details
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+