தவம் இருந்து இந்திய தயாரிப்பை வாங்கும் வெளிநாட்டுக்காரர்கள்... இவ்ளோ பணத்தை அள்ளி குடுக்க ரெடியா இருக்காங்களா!

வெளிநாடு ஒன்றில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. குறிப்பாக மஹிந்திரா நிறுவனம் சமீப காலமாக அறிமுகம் செய்து வரும் கார்களுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைக்கிறது.

தவம் இருந்து இந்திய தயாரிப்பை வாங்கும் வெளிநாட்டுக்காரர்கள்... இவ்ளோ பணத்தை அள்ளி குடுக்க ரெடியா இருக்காங்களா!

மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N), மஹிந்திரா தார் (Mahindra Thar) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) ஆகிய கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். இதில், எக்ஸ்யூவி700 காருக்கான காத்திருப்பு காலம் தற்போதைய நிலையில் வேரியண்ட்களை பொறுத்து சுமார் 17 மாதங்களாக உள்ளது.

அதாவது நீங்கள் முன்பதிவு செய்த தேதியில் இருந்து, சுமார் 17 மாதங்கள் கழித்துதான் உங்களுக்கு டெலிவரி கிடைக்கும். அந்த அளவிற்கு மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்திய சந்தையில் கிடைத்த உற்சாகமான வரவேற்பை தொடர்ந்து, தற்போது தென் ஆப்ரிக்காவில் எக்ஸ்யூவி700 காரை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்திய சந்தையில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) என 2 வகையான இன்ஜின் ஆப்ஷன்களுடனும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தென் ஆப்ரிக்க சந்தையில் ஒரே ஒரு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே எக்ஸ்யூவி700 காரை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

அது 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 197 பிஹெச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

இதை மிஸ் பண்ணீடாதீங்க: பல்க் ஆர்டர்! தமிழக நிறுவனத்தின் வாகனங்களை மொத்தமா வாங்கி போட்ட வெளிநாட்டு போலீஸ்! இவ்ளோ வண்டிகள் டெலிவரியா!இதை மிஸ் பண்ணீடாதீங்க: பல்க் ஆர்டர்! தமிழக நிறுவனத்தின் வாகனங்களை மொத்தமா வாங்கி போட்ட வெளிநாட்டு போலீஸ்! இவ்ளோ வண்டிகள் டெலிவரியா!

ஆனால் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 18 இன்ச் அலாய் வீல்கள், 360 டிகிரி கேமரா, பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்ற வசதிகள் எல்லாம் தென் ஆப்ரிக்க சந்தைக்கான மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் இடம்பெற்றுள்ளன.

4,74,999 தென் ஆப்ரிக்க ராண்ட் என்ற ஆரம்ப விலையில் அங்கு மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராண்ட் என்பது தென் ஆப்ரிக்காவின் கரன்ஸி ஆகும். இந்திய மதிப்பில் பார்த்தால் இது தோராயமாக 22.50 லட்ச ரூபாய் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப விலை 13.45 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரூம்) உள்ளது என்பது குறிப்பிடத்க்கது.

இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் விற்பனைக்கு வந்தது. அதேபோல் தென் ஆப்ரிக்காவிலும் இந்த காருக்காக பலர் ஆவலுடன் காத்து கொண்டிருந்தனர். தற்போது அவர்களின் எதிர்பார்ப்புகளை மஹிந்திரா நிறுவனம் நிறைவேற்றியுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள அதே நேரத்தில், இந்திய சந்தையில் எக்ஸ்யூவி700 காருக்கான காத்திருப்பு காலத்தை குறைக்கும் முயற்சிகளில் மஹிந்திரா நிறுவனம் தற்போது இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த காரின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது டெலிவரிக்காக காத்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

English summary
Made in india mahindra xuv700 suv launched in south africa
Story first published: Saturday, November 19, 2022, 11:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X