புதியதாக மஹிந்திரா காரை வாங்குவதற்கு நேரம் வந்தாச்சு!! 2022 மே மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு!

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா அதன் குறிப்பிட்ட கார்களுக்கு 2022 மே மாதத்திற்கான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளது. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதியதாக மஹிந்திரா காரை வாங்குவதற்கு நேரம் வந்தாச்சு!! 2022 மே மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு!

புதிய நிதியாண்டு துவங்கினாலே தயாரிப்புகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. இதனை சமாளிக்கும் விதமாகவே, விலை உயர்வு அமலுக்குவந்த சில மாதங்களுக்கு சலுகைகள் & தள்ளுபடிகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவித்துவிடுகின்றன. சமீபத்தில் மாருதி சுஸுகி, ஹூண்டாய் & டாடா போன்ற நிறுவனங்கள் சலுகை அறிவிப்புகளை வெளியிட்டதை பார்த்திருந்தோம்.

புதியதாக மஹிந்திரா காரை வாங்குவதற்கு நேரம் வந்தாச்சு!! 2022 மே மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு!

இந்த வகையில் முன்னணி உள்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திராவும் அதன் குறிப்பிட்ட மாடல்களுக்கு கவர்ச்சிக்கரமான சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளது. இதன்படி மஹிந்திராவின் காம்பெக்ட் எஸ்யூவி காரான எக்ஸ்யூவி300 -ஐ ரூ.25,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.4,000 மதிப்பிலான கார்ப்பிரேட் போனஸ் மற்றும் ரூ.10,000 மதிப்பிலான இலவச ஆக்ஸஸரீகளுடன் பெறலாம்.

புதியதாக மஹிந்திரா காரை வாங்குவதற்கு நேரம் வந்தாச்சு!! 2022 மே மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு!

இவை தவிர்த்து எக்ஸ்யூவி300-இன் பெட்ரோல் வேரியண்ட்களுக்கு ரூ.7,500 வரையிலான பணம் தள்ளுபடியும், டீசல் வேரியண்ட்களுக்கு ரூ.4,000 வரையிலான பணம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறந்த விற்பனை எஸ்யூவி மாடலாக விளங்கும் மஹிந்திரா பொலிரோவிற்கு இவ்வாறான பணம் தள்ளுபடி எதுவும் வழங்கப்படவில்லை. ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.3,000 வரையிலான கார்ப்பிரேட் போனஸ் மற்றும் ரூ.6,000 மதிப்பிலான இலவச ஆக்ஸஸரீகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.

புதியதாக மஹிந்திரா காரை வாங்குவதற்கு நேரம் வந்தாச்சு!! 2022 மே மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு!

அதுவே மஹிந்திராவின் சமீபத்திய அறிமுகங்களுள் ஒன்றான பொலிரோ நியோவிற்கு இந்த சலுகைகள் கூட வழங்கப்படவில்லை. விற்பனையில் போராடிவரும் மஹிந்திரா மராஸ்ஸோவை பொறுத்தவரையில், இதன் எம்2 ட்ரிம் நிலைக்கு ரூ.25,000 வரையிலான பணம் தள்ளுபடியும், மற்ற ட்ரிம் நிலைகளுக்கு ரூ.15,000 வரையிலான பணம் தள்ளுபடியும் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,200 மதிப்பிலான கார்ப்பிரேட் போனஸும் இந்த எம்பிவி காருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதியதாக மஹிந்திரா காரை வாங்குவதற்கு நேரம் வந்தாச்சு!! 2022 மே மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு!

பிரபலமான மஹிந்திரா ஸ்கார்பியோ இந்த மே மாதத்தில் பணம் தள்ளுபடி எதையும் பெறவில்லை. மாறாக, ரூ.13,000 வரையிலான இலவச ஆக்ஸஸரீகள், ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 வரையிலான கார்ப்பிரேட் போனஸ் உள்ளிட்டவற்றை மட்டுமே பெற்றுள்ளது. இதேபோல் மஹிந்திராவின் விலை உயர்ந்த எஸ்யூவி வாகனமாக விளங்கும் அல்டுராஸ் ஜி4-க்கும் பணம் தள்ளுபடி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

புதியதாக மஹிந்திரா காரை வாங்குவதற்கு நேரம் வந்தாச்சு!! 2022 மே மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு!

ரூ.50,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.11,500 மதிப்பிலான கார்ப்பிரேட் தள்ளுபடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.20,000 மதிப்பிலான இலவச ஆக்ஸஸரீகளுடன் இந்த மஹிந்திரா சொகுசு எஸ்யூவி காரை இந்த மே மாதத்தில் வாங்கலாம். மற்றப்படி, மஹிந்திரா பிராண்டில் இருந்து சிறப்பாக விற்பனையாகி கொண்டிருக்கும் தார் மற்றும் எக்ஸ்யூவி700 கார்களுக்கு எந்தவொரு சலுகையும், தள்ளுபடிகளும் நடப்பு மே மாதத்திற்கு அறிவிக்கப்படவில்லை.

புதியதாக மஹிந்திரா காரை வாங்குவதற்கு நேரம் வந்தாச்சு!! 2022 மே மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு!

இவை அனைத்தும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள சலுகைகள் & தள்ளுபடிகள் ஆகும். ஆதலால் இவை மாநிலத்திற்கு மாநிலம் மாறக்கூடும். ஆதலால் மஹிந்திரா 2022 மே மாதத்திற்கான சலுகைகளை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள அருகில் உள்ள டீலர்ஷிப் மையத்தினை அணுகவும். புதிய மஹிந்திரா கார் வாங்கவுள்ளீர்கள் என்றால், அருகில் உள்ள 2 அல்லது 3 மஹிந்திரா டீலர்ஷிப் மையங்களில் சலுகைகளை ஆராய்ந்து பார்த்துவிட்டு வாங்குவது நல்லது.

புதியதாக மஹிந்திரா காரை வாங்குவதற்கு நேரம் வந்தாச்சு!! 2022 மே மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு!

இவ்வாறான சலுகை அறிவிப்புகளுக்கு மத்தியில், மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் 3ஆக பிரியவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதாவது எதிர்கால எலக்ட்ரிக் வாகனங்களுக்காக, விவசாயம் சார்ந்த பயன்பாட்டு வாகனங்களுக்காக மற்றும் பயணிகள் பிரிவு வாகனங்களுக்காக என 3 பிரிவாக பிரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறின. ஆனால் இதனை உடனடியாக மஹிந்திரா குழுமம் சார்பில் நிராகரித்தனர்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra 2022 may discounts xuv300 bolero
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X