ஒன்றல்ல, இரண்டல்ல... மொத்தமா 5 எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யபோகுது... அதிரடி காட்டும் மஹிந்திரா!
மஹிந்திரா நிறுவனம் விரைவில் ஐந்து எலெக்ட்ரிக் கார்களை வெளியீடு செய்யப்போவதாக டீசர் வீடியோ வெளியிட்டுள்ளது. வெளியீட்டு தேதியையும் இந்த டீசர் வீடியோ வாயிலாக அது உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா நிறுவனம், அது விரைவில் களமிறக்க இருக்கும் மின்சார வாகனங்களின் டீசர் வீடியோவை தற்போது வெளியிட்டிருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார்கள் வரிசையாக நின்றுக் கொண்டிருப்பதைப் போன்ற ஓர் டீசர் படத்தை நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அவ்வாகனம்குறித்த டீசரை அது வெளியிட்டிருக்கின்றது.

இம்முறை டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஐந்து கார்களை மஹிந்திரா விரைவில் களமிறக்க இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அனைத்துமே மின்சார வாகனங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான ஸ்டைல் மற்றும் அம்சங்களுடன் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது வெளியாகியிருக்கும் டீசர் வீடியோ உள்ளது. இதுமட்டுமின்றி, நிறுவனம் எப்போது இந்த வாகனங்களை முழுமையாக காட்சிப்படுத்தும் என்பதும் தற்போது தெரிய வந்திருக்கின்றது. வரும் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அன்றே வாகனங்கள் வெளியீடு செய்யப்பட இருக்கின்றன.

அன்றைய தினம் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களும் மிக தெளிவாகக் காட்சிப்படுத்தப்படும் என நம்பப்படுகின்றது. நிறுவனம், இதுவரை வெளியிட்ட அனைத்து டீசர் படங்களும் வாகனங்களை பகுதியாக காட்சிப்படுத்தும் வகையிலேயே உள்ளன. குறிப்பாக, வெளிச்சமற்ற நிலையில், உருவத்தை மறைத்தவாறு இருக்கும் படங்களையே அது வெளியிட்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே விரைவில் மிக தெளிவாக அனைத்து வாகனங்களும் காட்சியளிக்க இருக்கின்றன. சுதந்திர தினத்தன்றே இந்த சம்பவம் அரங்கேற இருக்கின்றது. இது அந்த நாளை சிறப்பிக்கும் விதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஹிந்திரா நிறுவனம் அதன் புகழ்பெற்ற கார் மாடலான எக்ஸ்யூவி300 அடிப்படையில் புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த காரை நிறுவனம் எகஸ்யூவி 400 இவி எனும் பெயரில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த காரும் ஆகஸ்டு 15ம் தேதி அன்று அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஹிந்திரா நிறுவனம் அதன் அனைத்து புதிய கார்களையும் உலகளவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

ஆகையால், வரும் ஆகஸ்டு 15ம் தேதி அன்று நடைபெற இருக்கும் வெளியீட்டு நிகழ்வு இங்கிலாந்து நாட்டில் வைத்து நிகழ்த்த மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இங்கு வைத்தே புதுமுக எலெக்ட்ரிக் கார்கள் பற்றிய பல்வேறு முக்கிய விபரங்கள் வெளியிடப்பட இருக்கின்றன. இதைத்தொடர்ந்து, நிறுவனத்தின் எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் செப்டம்பர் மாதம் நாட்டில் வெளியீடு செய்யப்படும்.

மஹிந்திரா நிறுவனம் ஒவ்வொரு பத்து வாகனங்களில் இரண்டு முதல் மூன்று கார்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைச் செய்ய திட்டமிட்டிருக்கின்றது. வரும் 2027ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை அடைய அது திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களின் தயாரிப்பில் செலுத்தி வருவதைப் போலவே எலெக்ட்ரிக் கார் உற்பத்தியிலும் அதிக கவனம் மஹிந்திரா செலுத்தத் தொடங்கியிருக்கின்றது.

இதன் வெளிப்பாடாகவே விரைவில் ஐந்து புதுமுக எலெக்ட்ரிக் கார்களை நிறுவனம் வெளியீடு செய்ய இருக்கின்றது. விரைவில் நிறுவனம் வெளியீடு செய்ய இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டாடா நெக்ஸான் இவி, எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் ஹூண்டாய் கோனா இவி ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக அமைய இருக்கின்றது.

எக்ஸ்யூவி300 காரை தழுவியே இந்த எக்ஸ்யூவி400 மின்சார காரை மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இருப்பினும், ரியல் உலகத்தில் அக்கார் அதன் தரிசனைத்தை வழங்கும்போது துளியளவும் எக்ஸ்யூவி 300 காரை மின்சார வெர்ஷன் பிரதிபலிக்காது என கூறப்படுகின்றது. இதற்காக பல நிலைகளில் அக்காரை மஹிந்திரா மாற்றியமைத்திருக்கின்றது. உருவம், ஸ்டைல் மற்றும் அளவுகள் ஆகியவற்றில் அது மாறுபட்டுக் காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் மின்சார வாகன உற்பத்திக்கென தனி பிராண்டை உருவாக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில், பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட்டும், மஹிந்திராவும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைந்தன. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெரும் முதலீட்டை பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் மஹிந்திரா மீது செய்துள்ளது. இந்த முதலீட்டின்கீழே மஹிந்திரா நிறுவனத்தின் வரவிருக்கும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதுதவிர எதிர்காலத்தில் இன்னும் பல ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் முதலீட்டை மஹிந்திரா ஈர்க்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








