கை மாறும் மஹிந்திராவிற்கு சொந்தமான தென் கொரிய நிறுவனம்! எவ்வளவு தொகைக்கு, எந்த நிறுவனம் வாங்க போகுது தெரியுமா?

தென் கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் சேங்யோங் மோட்டார் (SsangYong Motor Co Ltd) நிறுவனத்தை மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று கையகப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கை மாறும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான தென் கொரிய நிறுவனம்... எவ்வளவு தொகைக்கு, எந்த நிறுவனம் வாங்க போகுது தெரியுமா?

தென் கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல வாகன உற்பத்தி நிறுவனம் சேங்யோங் மோட்டார் (SsangYong Motor Co Ltd). இந்நிறுவனம் கடந்த சில காலமாக நிதி பற்றாக்குறையில் சிக்கி தவித்து வருகின்றது. மேலும், நிறுவனத்தின் கடன் சுமையும் பல மடங்கு அதிகரித்திருக்கின்றது.

கை மாறும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான தென் கொரிய நிறுவனம்... எவ்வளவு தொகைக்கு, எந்த நிறுவனம் வாங்க போகுது தெரியுமா?

இதன் விளைவாக தற்போது நிறுவனம் கை மாறும் நிலை உருவாகி இருக்கின்றது. இந்த நிலையிலேயே தென் கொரியைவை மையமாகக் கொண்டு இயங்கும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான எடிசன் மோட்டார்ஸ் கோ (Edison Motors Co) தலைமையிலான கூட்டமைப்பே தற்போது சேங்யோங் மோட்டார் நிறுவனத்தை வாங்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கை மாறும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான தென் கொரிய நிறுவனம்... எவ்வளவு தொகைக்கு, எந்த நிறுவனம் வாங்க போகுது தெரியுமா?

305 பில்லியன் ஒன்-களுக்கு சேங்யோங் கையகம் செய்யப்பட இருப்பதாக தவல்கள் வெளியாகியுள்ளன. இது, இந்திய மதிப்பில் ரூ. 18,860 மில்லியன் ஆகும். இத்தகைய அதிகபட்ச விலையிலேயே சேங்யோங் மோட்டார் கோ லிமிடெட் நிறுவனம் கை மாற இருக்கின்றது.

கை மாறும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான தென் கொரிய நிறுவனம்... எவ்வளவு தொகைக்கு, எந்த நிறுவனம் வாங்க போகுது தெரியுமா?

சேங்யோங் மோட்டார் கோ லிமிடெட் நிறுவனத்தின் இந்த நிலைக்கு அண்மைக் காலங்களாக குறைந்து வரும் விற்பனை எண்ணிக்கையே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்தியாவில் மிக மோசமான விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்ததன் காரணத்தினால் கடந்த ஆண்டு நாட்டில் அனைத்து விதமான செயல்பாடுகளையும் நிறுத்திக் கொள்வதாகக் கூறி ஃபோர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியது.

கை மாறும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான தென் கொரிய நிறுவனம்... எவ்வளவு தொகைக்கு, எந்த நிறுவனம் வாங்க போகுது தெரியுமா?

ஆகையால் நிறுவனத்தின் தயாரிப்புகள் நமது நாட்டில் விற்பனைக்குக் கிடைக்காத நிலை உருவாகி இருக்கின்றது. இந்த மாதிரியான ஓர் இக்கட்டான சூழ்நிலையிலேயே சேங்யோங் மோட்டார் கோ லிமிடெட் தற்போது சிக்கியிருக்கின்றது. ஆனால், ஃபோர்டு நிறுவனத்தைப் போல் இல்லாமல் இந்நிறுவனம் ஒட்டுமொத்தமாக தற்போது கை மாற இருக்கின்றது.

கை மாறும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான தென் கொரிய நிறுவனம்... எவ்வளவு தொகைக்கு, எந்த நிறுவனம் வாங்க போகுது தெரியுமா?

ஆகையால், நிறுவனத்தின் தயாரிப்புகள் எடிசன் மோட்டார்ஸ் கம்பெனி நிறுவனத்தின் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும் நிலை உருவாகி இருக்கின்றது. சேங்யோங் மோட்டார் கோ லிமிடெட் நிறுவனம் கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாகவே 84,496 யூனிட் வாகனங்களை மட்டுமே விற்பனைச் செய்திருக்கின்றது.

கை மாறும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான தென் கொரிய நிறுவனம்... எவ்வளவு தொகைக்கு, எந்த நிறுவனம் வாங்க போகுது தெரியுமா?

இது இதற்கு முந்தைய ஆண்டான 2020-யைக் காட்டிலும் 21 சதவீதம் குறைவான விற்பனை ஆகும். இதுமாதிரியான விற்பனை வீழ்ச்சியைக் கடந்த சில ஆண்டுகளாகவே நிறுவனம் சந்தித்து வருவதாகக் கூறப்படுகின்றது. இதன் விளைவாக நிறுவனத்தின் கடன் சுமை பல மடங்கு அதிகரித்திருக்கின்றது.

கை மாறும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான தென் கொரிய நிறுவனம்... எவ்வளவு தொகைக்கு, எந்த நிறுவனம் வாங்க போகுது தெரியுமா?

மேலும், 2021 ஜனவரி தொடங்கி 2021 செப்டம்பர் வரையில் நிறுவனம் பெரும் நிதியிழப்பைச் சந்தித்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது. 1.8 ட்ரில்லியன் ஒன்-இல் இருந்து 238 பில்லியன் ஒன் வரை மட்டுமே அது வருமானத்தை ஈட்டியிருக்கின்றது. இது மிக பெரிய இழப்பாகும்.

கை மாறும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான தென் கொரிய நிறுவனம்... எவ்வளவு தொகைக்கு, எந்த நிறுவனம் வாங்க போகுது தெரியுமா?

மற்றுமொரு சுவாரஷ்யம் என்னவென்றால் சேங்யோங் நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளுக்கு சொந்தக்காரராக இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம் இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம், சேங்யோங் நிறுவனத்தின் பெரும் பங்கை 2010ம் ஆண்டே கையகம் செய்து விட்டது.

கை மாறும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான தென் கொரிய நிறுவனம்... எவ்வளவு தொகைக்கு, எந்த நிறுவனம் வாங்க போகுது தெரியுமா?

நிறுவனம் 100 மில்லியன் ஒன் கடனுடன் 2020ம் ஆண்டு திவால் நிலை அறிவித்தது. மேலும், புதிய வாங்குபவரையும் மஹிந்திரா தேடியது. ஆனால், பெரியளவில் வாங்குபவர்கள் யாரும் நிறுவனத்தின் மீது ஆர்வம் காட்டவில்லை. இதன் விளைவாக பல நாட்களாக நிறுவனம் நீதிமன்றத்தின் பார்வைக்குக் கீழ் சென்றது. இந்த நிலையிலேயே எடிசன் மோட்டார்ஸ் கோ நிறுவனம் கொள்முதலுக்கு ஒப்புக் கொண்டு தற்போது முன் வந்திருக்கின்றது.

கை மாறும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான தென் கொரிய நிறுவனம்... எவ்வளவு தொகைக்கு, எந்த நிறுவனம் வாங்க போகுது தெரியுமா?

கடந்த இரு வருடங்கள் சேங்யோங் நிறுவனத்திற்கு மிக மோசமான ஆண்டுகளாக அமைந்தன. கோவிட்-19 வைரசால் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையை இந்த நிலையை நிறுவனத்திற்கு உருவாக்கியது. மஹிந்திரா நிறுவனம், எஸ்யூவி மற்றும் மின்சார வாகனங்களின் வாயிலாக வாடிக்கையாளர்களைக் கவர பெரும் திட்டம் தீட்டியிருந்தது. இருப்பினும், அது தொடர்ச்சியாகவே சந்தித்து வந்தது. இந்த நிலையினாலயே தற்போது நிறுவனம் கை மாறும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

Source: Reuters

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra and mahindra owned ssangYong motor sold for 305 billion won
Story first published: Monday, January 10, 2022, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X