சூப்பரு... மஹிந்திரா அடாம் பற்றிய மிக முக்கியமான விபரங்கள் வெளியீடு... என்னனு தெரியுமா? இதோ முழு விபரம்!

மஹிந்திரா அடாம் (Mahindra Atom EV) பற்றிய மிக முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சூப்பரு... மஹிந்திரா அடாம் பற்றிய மிக முக்கியமான விபரங்கள் வெளியீடு... என்னனு தெரியுமா? இதோ முழு விபரம்!

மஹிந்திரா நிறுவனம் அடாம் (Mahindra Atom EV) எனும் குவாட்ரிசைக்கிள் ரக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருவது பலரும் அறிந்த தகவலே. மஹிந்திரா நிறுவனம் இந்த வாகனத்தை 2018ம் ஆண்டில் நடைபெற்ற இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. அடாம் அதன் தரிசனத்தை முழுமையாக வழங்கியது இதுவே முதல் தடவையாகும்.

சூப்பரு... மஹிந்திரா அடாம் பற்றிய மிக முக்கியமான விபரங்கள் வெளியீடு... என்னனு தெரியுமா? இதோ முழு விபரம்!

இதற்கு பின்னரும் அவ்வப்போது சாலை சோதனையோட்டத்தின் அடாம் அதன் தரிசனத்தை வழங்கி வருகின்றது. ஆனால், சமீப சில காலமாக இந்த வாகனம் பற்றிய எந்த தகவலும் வெளிவராத நிலை தென்படுகின்றது. இதனால், அடாம் எலெக்ட்ரிக் வாகனத்தின் வருகை இருக்குமா?, இருக்காதா? என்கிற சந்தேகமே வாகன ஆர்வலர்கள் மத்தியில் எழும்ப தொடங்கிவிட்டது.

சூப்பரு... மஹிந்திரா அடாம் பற்றிய மிக முக்கியமான விபரங்கள் வெளியீடு... என்னனு தெரியுமா? இதோ முழு விபரம்!

மஹிந்திார நிறுவனம் இவ்வாகனத்தை 2020 ஆம் ஆண்டில் அரங்கேற்றிவிடும் என பலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வாகன விஷயத்திலோ மஹிந்திரா நிறுவனம் கடும் மௌனத்தை காத்து வந்தது. நிறுவனத்தின் இந்த நிலைக்கு உலகையே உலுக்கிப்போட்ட கொரோனா வைரஸ் பரவலே காரணம் ஆகும்.

சூப்பரு... மஹிந்திரா அடாம் பற்றிய மிக முக்கியமான விபரங்கள் வெளியீடு... என்னனு தெரியுமா? இதோ முழு விபரம்!

இந்த மாதிரியான சூழ்நிலையில் தற்போது அடாம் பற்றிய சில ஃப்ரெஷ்ஷான தகவல்கள் வெளி வந்துள்ளன. மின்சார வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சில முக்கிய தகவல்களே வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, என்ன மாதிரியான பேட்டரி பேக் மற்றும் எத்தனை ட்ரிம்களில் அடாம் உருவாக்கப்பட்டு வருகின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்தே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

சூப்பரு... மஹிந்திரா அடாம் பற்றிய மிக முக்கியமான விபரங்கள் வெளியீடு... என்னனு தெரியுமா? இதோ முழு விபரம்!

மஹிந்திரா அடாம் நான்கு விதமான வேரியண்டுகளில் கிடைக்கும். கே1, கே2, கே3 மற்றும் கே4 ஆகிய தேர்வுகளிலேயே கிடைக்க இருக்கின்றது. இத்துடன், 7.4kWh மற்றும் 11.1kWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகளில் இவ்வாகனம் கிடைக்கும். இதில், கே1 மற்றும் கே3 ஆகியவை பேஸ் வேரியண்டுகளாகவும், கே2 மற்றும் கே4 வேரியண்டுகள் உயர்நிலை தேர்வுகளாக கிடைக்கும்.

சூப்பரு... மஹிந்திரா அடாம் பற்றிய மிக முக்கியமான விபரங்கள் வெளியீடு... என்னனு தெரியுமா? இதோ முழு விபரம்!

அதாவது, பெரிய பேட்டரி பேக் (அதிக ரேஞ்ஜ் தரக் கூடியது), அதிக சிறப்பு வசதிகள் ஆகிய வசதிகள் கொண்டவையாக கே2 மற்றும் கே4 எதிர்பார்க்கப்படுகின்றது. இதைவிட சற்று குறைவான ரேஞ்ஜ் திறன் மற்றும் சிறப்பம்சங்களுடன் ஆரம்ப நிலை தேர்வுகளான கே1 மற்றும் கே3 வேரியண்டுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பரு... மஹிந்திரா அடாம் பற்றிய மிக முக்கியமான விபரங்கள் வெளியீடு... என்னனு தெரியுமா? இதோ முழு விபரம்!

ஆனால், ஓர் முழுமையான சார்ஜில் இந்த குவாட்ரிசைக்கிள் எத்தனை கிமீ பயணிக்கும், இதில் என்ன மாதிரியான மின் மோட்டோர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், விநோத தோற்றத்தில் உருவாகியிருக்கும் அடாம் மிக தாரளமான இட வசதியைக் கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூப்பரு... மஹிந்திரா அடாம் பற்றிய மிக முக்கியமான விபரங்கள் வெளியீடு... என்னனு தெரியுமா? இதோ முழு விபரம்!

இந்த வாகனம் 2,728 மிமீ நீளம், 1,452 மிமீ அகலம், 1,576மிமீ உயரம் மற்றும் 1,885 மிமீ வீல் பேஸ் ஆகிய அளவுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. மிக சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கும் பொருட்டு இந்த பிரமாண்ட அளவுகளில் அடாம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த அளவுகள் பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனத்திற்கு இணையானது என்பது குறிப்பிடத்தகுந்தது.

சூப்பரு... மஹிந்திரா அடாம் பற்றிய மிக முக்கியமான விபரங்கள் வெளியீடு... என்னனு தெரியுமா? இதோ முழு விபரம்!

பெட்டி போன்ற தோற்றத்தில் உருவாக்கியிருக்கும் அடாம் இரண்டு கதவுகள் கொண்ட நான்கு இருக்கை வாகனமாகும். இதனை வர்த்தக வாகன பிரிவிலேயே முதலில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, டாக்சி மற்றும் பிற வாடகை வாகன சேவை நிறுவனங்களுக்கே மஹிந்திரா விற்பனைக்கு வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், தனி நபர் பயன்பாட்டிற்கு இதனை வாங்க இயலாது என தெரிகின்றது.

சூப்பரு... மஹிந்திரா அடாம் பற்றிய மிக முக்கியமான விபரங்கள் வெளியீடு... என்னனு தெரியுமா? இதோ முழு விபரம்!

இந்த வாகனம் டாக்சி சேவையை பயன்பாட்டைக் கருத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதில் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதற்கு மஹிந்திரா நிறுவனம் தவறவில்லை. ஆமாங்க, அடாம் குவாட்ரிசைக்கிளில் எண்ணற்ற அதி-நவீன வசதிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஏசி, 4ஜி இணைப்பு வசதி, மொபைல் டாக்கிங் ஸ்டேஷன் உள்ளிட்ட அம்சங்கள் அதில் எதிர்பார்க்கப்படுகின்றன.

சூப்பரு... மஹிந்திரா அடாம் பற்றிய மிக முக்கியமான விபரங்கள் வெளியீடு... என்னனு தெரியுமா? இதோ முழு விபரம்!

இத்தகைய அம்சங்களுடனேயே மஹிந்திராவின் அடாம் குவாட்ரிசைக்கிள் ரக எலெக்ட்ரிக் வாகனம் உருவாகி இருக்கின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் போட்டியே இல்லாத தனித்துவமான தோற்றம் கொண்ட வாகனமாக இது நாட்டில் விற்பனைக்கு இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 6, 2022, 13:53 [IST]
English summary
Mahindra atom quadricycle battery capacity and variants details revealed
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+