மஹிந்திராவின் பயணிகள் கார்கள் விற்பனை செம்ம தூள்!! கமர்ஷியல் வாகன விற்பனையிலும் முன்னேற்றம்!
இந்திய சந்தையில் கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் எண்ணிக்கைகள் நமக்கு கிடைக்க பெற்றுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சந்தையில் மஹிந்திரா கார்களுக்கான தேவை கடந்த ஏப்ரல் மாதத்தில் நல்லபடியாக இருந்துள்ளது. பயணிகள் கார்கள் மட்டுமின்றி, மஹிந்திராவின் கமர்ஷியல் வாகன மற்றும் மூன்று-சக்கர வாகனங்களின் விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

கடந்த மாதத்தில் ஒட்டுமொத்தமாக 45,640 யூனிட் வாகனங்களை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. இதில் 22,526 பயணிகள் கார்கள் அடங்குகின்றன. இது 2022 ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 23% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 18,186 பயணிகள் கார்களையே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.
| Passenger Vehicles Sales Summary (Domestic) - April 2022 | |||
| Category | April | ||
| F23 | F22 | % Change | |
| Utility Vehicles | 22168 | 18186 | 22% |
| Cars + Vans | 358 | 99 | 262% |
| Passenger Vehicles | 22526 | 18285 | 23% |

இருப்பினும் இது கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 18.39%, அதாவது 5,077 யூனிட்கள் குறைவாகும். ஏனென்றால், அந்த மாதத்தில் மொத்தமாக 27,603 கார்களை மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இந்திய சந்தையில் ஒரேயொரு வேன் மாடலை மட்டுமே மஹிந்திரா சந்தைப்படுத்தி வருகிறது. அது கடந்த ஏப்ரல் மாதத்தில் 358 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஆனது அதன் 2021 ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் சுமார் 262% அதிகமாகும்.

ஏனெனில் கடந்த ஆண்டு ஏப்ரலில் வெறும் 99 மஹிந்திரா வேன்களே விற்கப்பட்டு இருந்தன. 358 யூனிட் வேன்கள் கழிய, மீதி 22,168 யூனிட்களும் மஹிந்திரா எஸ்யூவி & எம்பிவி கார்களுடையது ஆகும். 2021 ஏப்ரலில் இந்த எண்ணிக்கை 22% குறைவாக 18,186 ஆக பதிவாகி இருந்தது. கமர்ஷியல் வாகன விற்பனையை பொறுத்தவரையில், 2 டன்னிற்கு குறைவான எடை கொண்ட கமர்ஷியல் வாகனங்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 2,929 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

அதுவே 2021 ஏப்ரலில் இத்தகைய எடை குறைவான மஹிந்திரா கமர்ஷியல் வாகனங்கள் 1,561 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில் இவற்றின் விற்பனை 88% அதிகரித்துள்ளது. 2 டன்களில் இருந்து 3.5 டன்கள் வரையில் எடை கொண்ட கமர்ஷியல் வாகனங்கள் கடந்த மாதத்தில் 13,768 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 13% குறைவாக 12,210 யூனிட்களாக பதிவாகி இருந்தது.
| Commercial Vehicles and 3 Wheelers Sales Summary (Domestic) - April 2022 | |||
| Category | April | ||
| F23 | F22 | % Change | |
| LCV < 2T | 2929 | 1561 | 88% |
| LCV < 2 T – 3.5 T | 13768 | 12210 | 13% |
| LCV > 3.5T + MHCV | 705 | 333 | 112% |
| 3 Wheelers (including electric 3Ws) | 3009 | 2043 | 47% |

அதுவே, 2021 ஏப்ரலில் 333 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்த 3.5 டன்னிற்கும் அதிகமான எடை கொண்ட அளவில்-பெரிய கமர்ஷியல் வாகனங்கள் கடந்த மாதத்தில் 705 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்படி பார்க்கும்போது இந்த கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை கடந்த மாதத்தில் 112% அதிகரித்துள்ளது. மஹிந்திராவின் 3-சக்கர வாகனங்கள் கடந்த மாதத்தில் 3,009 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரலில் இதனை காட்டிலும் 47% குறைவாக 2,043 மஹிந்திரா 3-சக்கர வாகனங்களே விற்கப்பட்டு இருந்தன. வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதியை பொறுத்தவரையில், கடந்த மாதத்தில் மொத்தம் 2,703 யூனிட் வாகனங்களை இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு மஹிந்திரா அனுப்பி வைத்துள்ளது. அதுவே 2021 ஏப்ரலில் ஏற்றுமதி செய்யப்பட்ட மஹிந்திரா வாகனங்களின் எண்ணிக்கை 2,005 ஆகும்.
| Exports - April 2022 | |||
| Category | April | ||
| F23 | F22 | % Change | |
| Tata Exports | 2703 | 2005 | 35% |

இந்த வகையில் மஹிந்திரா வாகனங்களின் ஏற்றுமதி 35% கடந்த மாதத்தில் அதிகரித்துள்ளது. இதுகுறித்து மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப்பின் ஆட்டோமொபைல் பிரிவின் தலைவர் வீஜய் நக்ரா கருத்து தெரிவிக்கையில், "22,168 யூனிட் வாகனங்களின் விற்பனை உடன் 22 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து எஸ்யூவி பிரிவில் எங்களது வளர்ச்சி பாதையை தொடர்கிறோம். எங்கள் வணிக வாகனங்கள் அனைத்து பிரிவுகளிலும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன" என்றார்.


Click it and Unblock the Notifications








