இரு ஏர் பேக் உடன் பொலிரோ... சத்தமே இல்லாமல் அறிமுகம் செய்த மஹிந்திரா.. இனி பாதுகாப்புக்கு குறைச்சலே இருக்காது!

மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) இரு ஏர் பேக்குகளுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஆகையால், முன்பை விட அதிக பாதுகாப்பு வசதிக் கொண்ட காராக இது மாறியுள்ளது. இது குறித்த கூடுதல் விபரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம், வாங்க.

இரட்டை ஏர் பேக் உடன் பொலிரோ... சத்தமே இல்லாமல் அறிமுகம் செய்த மஹிந்திரா... இனி பாதுகாப்புக்கு குறைச்சலே இருக்காது!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் புகழ்மிக்க தயாரிப்புகளில் பொலிரோ (Bolero)-வும் ஒன்று. இந்தக் காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனையே அந்நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வைச் சத்தமின்றி மஹிந்திரா நிறுவனம் செய்திருக்கின்றது.

இரட்டை ஏர் பேக் உடன் பொலிரோ... சத்தமே இல்லாமல் அறிமுகம் செய்த மஹிந்திரா... இனி பாதுகாப்புக்கு குறைச்சலே இருக்காது!

அப்டேட்டாக இரு ஏர் பேக்குகள் பொலிரோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது, பொலிரோவின் விலை குறைவானது முதல் உயர்வானது வரையென அனைத்து தேர்வுகளிலும் கட்டாயம் இரட்டை ஏர் பேக்குகள் இடம் பெறுகின்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

இரட்டை ஏர் பேக் உடன் பொலிரோ... சத்தமே இல்லாமல் அறிமுகம் செய்த மஹிந்திரா... இனி பாதுகாப்புக்கு குறைச்சலே இருக்காது!

பொலிரோவின் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மஹிந்திரா நிறுவனம் செய்திருக்கின்றது. இதனால் பொலிரோவின் பாதுகாப்பு தரம் மட்டுமல்ல அதன் விலையும் லேசாக அதிகரித்துள்ளது. ரூ. 14 ஆயிரம் முதல் ரூ. 16 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. வேரியண்டின் அடிப்படையில் இவ்விலை உயர்வு அதிகரித்துக் காணப்படுகின்றது.

இரட்டை ஏர் பேக் உடன் பொலிரோ... சத்தமே இல்லாமல் அறிமுகம் செய்த மஹிந்திரா... இனி பாதுகாப்புக்கு குறைச்சலே இருக்காது!

சீட் பெல்ட் மட்டுமின்றி இன்னும் சில அப்டேட்டுகளும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக டேஷ்போர்ட் கிராப் ஹேண்டிலுடன் காணப்பட்டது. முன் பக்க பயணிகளுக்காக இந்த அம்சம் வழங்கப்பட்டது. ஆனால், இதனை தற்போது மஹிந்திரா நிறுவனம் நீக்கியிருக்கின்றது. புதியதாக புகுத்தப்பட்டிருக்கும் ஏர் பேக் இந்த பகுதியில் இடம் பெற்றிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த மாற்றத்தை நிறுவனம் செய்திருக்கின்றது.

இரட்டை ஏர் பேக் உடன் பொலிரோ... சத்தமே இல்லாமல் அறிமுகம் செய்த மஹிந்திரா... இனி பாதுகாப்புக்கு குறைச்சலே இருக்காது!

மேலும், உட் ஃபினிஷ் கொண்ட சென்ட்ரல் கன்சோல் மற்றும் மியூசிக் சிஸ்டம் மற்றும் ஏசி துவாரங்கள் ஆகியவற்றின் தோற்றமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கிளியர் லென்ஸ் கொண்ட டெயில் லைட், மெட்டலால் உருவாக்கப்பட்ட புதிய பம்பர் ஆகியவற்றையும் புதிய அப்டேட்டுகளாக மஹிந்திரா நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

இரட்டை ஏர் பேக் உடன் பொலிரோ... சத்தமே இல்லாமல் அறிமுகம் செய்த மஹிந்திரா... இனி பாதுகாப்புக்கு குறைச்சலே இருக்காது!

அதேநேரத்தில் இக்கார் முன்பை போலவே தற்போதும் 7 இருக்கைகள் தேர்விலேயே இப்போதும் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இத்துடன், இரு நிற தேர்விலும் இக்கார் கிடைக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்னும் இந்த நிற தேர்வு வசதி அறிமுகம் செய்யப்படவில்லை.

இரட்டை ஏர் பேக் உடன் பொலிரோ... சத்தமே இல்லாமல் அறிமுகம் செய்த மஹிந்திரா... இனி பாதுகாப்புக்கு குறைச்சலே இருக்காது!

ஆகையால், பழுப்பு, வெள்ளை மற்றும் சில்வர் ஆகிய நிற தேர்வுகளிலேயே இப்போதைக்கு பொலிரோ விற்பனைக்கு கிடைக்கும். இந்த கார் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பி4, பி6 மற்றும் பி6 (ஓ) ஆகிய தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இரட்டை ஏர் பேக் உடன் பொலிரோ... சத்தமே இல்லாமல் அறிமுகம் செய்த மஹிந்திரா... இனி பாதுகாப்புக்கு குறைச்சலே இருக்காது!

பொலிரோவின் டாப் எண்ட் வேரியண்டில் வளைவான ஹெட்லேம்ப், டிரைவர் இன்ஃபர்மேஷன் திரை, பின் பக்கத்தில் வைப்பர் (கழுவும் வசதியுடன்) மற்றும் பனி மின் விளக்கு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கின்றன. எஞ்ஜினை பொருத்த வரை மஹிந்திரா பொலிரோ ஒற்றை டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இரட்டை ஏர் பேக் உடன் பொலிரோ... சத்தமே இல்லாமல் அறிமுகம் செய்த மஹிந்திரா... இனி பாதுகாப்புக்கு குறைச்சலே இருக்காது!

1.5 லிட்டர் 3 சிலிண்டர் டீசல் எஞ்ஜினை இக்காரில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 75 பிஎஸ் பவர் மற்றும் 210 என்எம் டார்க்கை வெளியேற்றும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே இக்காரில் வழங்கப்படுகின்றது. பாதுகாப்பு அம்சங்களாக இக்காரில் இரட்டை ஏர் பேக்குடன் இன்னும் சில அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

இரட்டை ஏர் பேக் உடன் பொலிரோ... சத்தமே இல்லாமல் அறிமுகம் செய்த மஹிந்திரா... இனி பாதுகாப்புக்கு குறைச்சலே இருக்காது!

பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைண்டர்கள், ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை பொலிரோவில் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் காருக்கு நேரடி போட்டியாளர்கள் தற்போது இந்தியாவில் கிடையாது. இருப்பினும், அதிக வசதிகளின் அடிப்படையில் ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், நிஸான் மேக்னைட், டாடா நெக்ஸான் மற்றும் ரெனால்ட் கைகர் உள்ளிட்ட கார்களுக்குப் போட்டியளிக்கும் வகையில் பொலிரோ காட்சியளிக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 9, 2022, 10:31 [IST]
English summary
Mahindra bolero comes with dual airbags here is full details
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+