சீறிய பொலிரோ... இந்த காரையா நாம இத்தன நாளா லேசா எட போட்டுட்டு இருந்தோம்! அதிரடி காட்டியிருக்கு!

மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் எது என்பது பற்றிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விறு விறுவென உயர்ந்த மஹிந்திரா கார்கள் விற்பனை... நிறுவனத்தின் எந்த தயாரிப்பு இந்தியால சூப்பரா விற்பனையாகுது தெரியுமா?

மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கென இந்தியாவில் தனி ரசிகப் பட்டாளமும், தனித்துவமான டிமாண்டும் நிலவிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், சமீப சில காலமாக இந்த டிமாண்டும், ரசிகப் பட்டாளத்தின் எண்ணிக்கையும் அதீத வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

விறு விறுவென உயர்ந்த மஹிந்திரா கார்கள் விற்பனை... நிறுவனத்தின் எந்த தயாரிப்பு இந்தியால சூப்பரா விற்பனையாகுது தெரியுமா?

இதை உறுதிப்படுத்தும் விதமாக அதிகம் புதிய வாகனங்களை விற்பனைச் செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா உருவெடுத்துள்ளது. நான்காவது இடத்தை பிடிக்கும் அளவிற்கு மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நாட்டில் வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.

விறு விறுவென உயர்ந்த மஹிந்திரா கார்கள் விற்பனை... நிறுவனத்தின் எந்த தயாரிப்பு இந்தியால சூப்பரா விற்பனையாகுது தெரியுமா?

2022 அக்டோபரில் மட்டும் 32 ஆயிரத்திற்கும் அதிகமான மஹிந்திராவின் புதிய கார் யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. இந்த உச்சபட்ச யூனிட்டுகளே அதிகம் புதிய வாகனங்களை விற்பனைச் செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் மஹிந்திராவை நான்காவது இடத்திற்கு முன்னேற்றியிருக்கின்றது.

விறு விறுவென உயர்ந்த மஹிந்திரா கார்கள் விற்பனை... நிறுவனத்தின் எந்த தயாரிப்பு இந்தியால சூப்பரா விற்பனையாகுது தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் எக்ஸ்யூவி700, தார், எக்ஸ்யூவி 300, பொலிரோ நியோ, அல்டுராஸ் ஜி4, மராஸ்ஸோ, பொலிரோ, ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ என் ஆகிய கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றில் எந்த கார் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். விரிவான பதிவிற்குள் போகலாம் வாங்க.

விறு விறுவென உயர்ந்த மஹிந்திரா கார்கள் விற்பனை... நிறுவனத்தின் எந்த தயாரிப்பு இந்தியால சூப்பரா விற்பனையாகுது தெரியுமா?

மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோவிற்கே இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த ஒற்றை கார் மாடல் மட்டும் 2022 அக்டோபர் மாதத்தில் 8,772 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. இந்த கார் மாடலுக்கு அடுத்தபடியாக நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் மாடலுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.

விறு விறுவென உயர்ந்த மஹிந்திரா கார்கள் விற்பனை... நிறுவனத்தின் எந்த தயாரிப்பு இந்தியால சூப்பரா விற்பனையாகுது தெரியுமா?

நிறுவனம் தற்போது ஸ்கார்பியோவை இரட்டை வெர்ஷனில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் ஆகியவையே அவை ஆகும். இதில், ஸ்கார்பியோ என் என்பது புதிய தலைமுறையாகும், ஸ்கார்பியோ கிளாசிக் அப்டேட்டட் வெர்ஷனாகவும் உள்ளது.

விறு விறுவென உயர்ந்த மஹிந்திரா கார்கள் விற்பனை... நிறுவனத்தின் எந்த தயாரிப்பு இந்தியால சூப்பரா விற்பனையாகுது தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ என்-ஐ ஜூன் மாதத்திலும், ஸ்கார்பியோ கிளாசிக்கை கடந்த ஆகஸ்டு மாதத்திலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இவ்விரண்டிற்கும் இந்திய எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த கார் மாடல் வெறும் 3,304 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகிய நிலையில், நடப்பாண்டு அக்டோபரில் 7,438 யூனிட்டுகளாக விற்பனை எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

விறு விறுவென உயர்ந்த மஹிந்திரா கார்கள் விற்பனை... நிறுவனத்தின் எந்த தயாரிப்பு இந்தியால சூப்பரா விற்பனையாகுது தெரியுமா?

இந்த எண்ணிக்கைக் கடந்த ஆண்டைக் காட்டிலும் 125 சதவீதம் அதிகம் ஆகும். இந்த கார் மாடல்களுக்கு 2022 செப்டம்பரிலும் நல்ல வரவேற்புக் கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது. அந்த மாதத்தில் 9,536 யூனிட்டுகள் வரை விற்பனையாகின. இது முந்தைய ஆண்டு செப்டம்பரைக் காட்டிலும் 268 சதவீதம் அதிகம் விற்பனை எண்ணிக்கையாகும்.

விறு விறுவென உயர்ந்த மஹிந்திரா கார்கள் விற்பனை... நிறுவனத்தின் எந்த தயாரிப்பு இந்தியால சூப்பரா விற்பனையாகுது தெரியுமா?

இந்த கார் மாடல்களைத் தொடர்ந்து நிறுவனத்தின் மூன்றாவது அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக எக்ஸ்யூவி 300 இருக்கின்றது. இந்த கார் 2022 அக்டோபரில் 6,282 யூனிட்டுகள் வரை விற்பனையாகியுள்ளன. இவற்றிற்கு மட்டுமில்லைங்க நிறுவனத்தின் பிற தயாரிப்புகளான எக்ஸ்யூவி 700, தார் ஆகிய கார் மாடல்களுக்கும் மிக மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, November 4, 2022, 20:29 [IST]
English summary
Mahindra bolero is the brands top selling car model here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+