இந்த காரோட வருகைக்குதான் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துகிடக்கு... டாடா நெக்ஸான் இவி-க்கு ஆப்பு வெகுவிரைவில்!
மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் எப்போது என்கிற தகவல் வெளி வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு பன் மடங்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலில் நாட்டின் மின்வாகன தாகத்தைத் தீர்க்கும் விதமாக மஹிந்திரா (Mahindra) நிறுவனம் புதுமுக காரை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் உருவாக்கிய எலெக்ட்ரிக் கார் சாலையில் சோதனையோட்டத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகின. இந்த நிலையிலேயே மஹிந்திரா நிறுவனம் புதுமுக எலெக்ட்ரிக் காரை 'எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக்' (XUV400 Electric) எனும் பெயரில் விரைவில் அறிமுக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து, எலெக்ட்ரிக் கார் எப்போது அறிமுகமாகும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது, எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் அறிமுகமாக இருக்கும் மாதம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு செப்டம்பர் மாதத்திலேயே மஹிந்திராவின் புதுமுக எலெக்ட்ரிக் கார் அறிமுகம் இருக்கின்றது.

இந்தியர்களின் எதிர்பார்ப்பில் நீண்ட காலமாக இடம் பிடித்திருக்கும் எலெக்ட்ரிக் காராக மஹிந்திராவின் இந்த எலெக்ட்ரிக் கார் இருக்கின்றது. இக்கார் முன்னதாக இ-எக்ஸ்யூவி 300 எனும் பெயரிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், எக்ஸ்யூவி 300 எஸ்யூவி காரை தழுவியே இந்த எலெக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியது.

மஹிந்திரா நிறுவனம் மின்வாகன உற்பத்திக்காக புதிய துணை நிறுவனத்தை உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. 'இவி கோ' (EV Co) என அழைக்கப்படும் அந்த பிராண்டில் பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ரூ. 1,925 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த முதலீட்டின்கீழ் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் மட்டுமே உருவாக்கப்பட இருக்கின்றன. ஆகையால், மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக்-ஐ போல் இன்னும் சில எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இப்போது இந்திய சந்தைக்காக தயார் செய்யப்பட்டிருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டாடா நெக்ஸான் இவி மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வர இருக்கின்றது.

மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக், எக்ஸ்யூவி300 மாடலைக் காட்டிலும் அளவில் பெரியதாக உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 4.2 மீட் நீளத்தில் உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. எக்ஸ்யூவி300 4 மீட்டர் நீளத்தை மட்டுமே கொண்டிருக்கின்றது. ஆகையால், இக்காரை காட்டிலும் எலெக்ட்ரிக் கார் அதிக இட வசதியைக் கொண்டதாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது.

இதுமட்டுமின்றி, இன்னும் பல சிறப்பு வசதிகளை எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக்கில் மஹிந்திரா நிறுவனம் வாரி வழங்குவதற்கான வாய்ப்புகள் பல உள்ளன. அந்தவகையில், அதிக ரேஞ்ஜ் தரக் கூடிய பேட்டரி பேக், கார் இணைப்பு தொழில்நுட்பம், பெரிய அளவிலான திரைகள் மற்றும் அதிக சொகுசான இருக்கைகள் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன.

குறிப்பாக, எக்ஸ்யூவி 300 காரிடம் இருந்து இந்த மின்சார வாகனம் மாறுபட்டு காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக புதிய ஸ்டைலிலான க்ரில், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லேம்ப், பெஸ்போக் அலாய் வீல், புதிய ஸ்டைலிலான ஹெட்லைட் மற்றும் வால் பகுதி உள்ளிட்டவை எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








