துளசி வாசம் மாறினாலும் மாறும்... ஆனா மஹிந்திரா வார்த்தை மாறாது... சொன்ன மாதிரியே காரை டெலிவரி பண்ணீட்டாங்க!

மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

துளசி வாசம் மாறினாலும் மாறும்... ஆனா மஹிந்திரா வார்த்தை மாறாது... சொன்ன மாதிரியே காரை டெலிவரி பண்ணீட்டாங்க!

2022ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள், அதாவது நடப்பு மாத இறுதிக்குள், 14 ஆயிரம் எக்ஸ்யூவி700 கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து விடுவோம் என மஹிந்திரா நிறுவனம் வாக்குறுதி வழங்கியிருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மஹிந்திரா நிறுவனம் இந்த வாக்குறுதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தது.

துளசி வாசம் மாறினாலும் மாறும்... ஆனா மஹிந்திரா வார்த்தை மாறாது... சொன்ன மாதிரியே காரை டெலிவரி பண்ணீட்டாங்க!

ஏற்கனவே கூறியபடி தனது வாக்குறுதியை மஹிந்திரா நிறுவனம் தற்போது நிறைவேற்றியுள்ளது. ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று (இன்று) மஹிந்திரா நிறுவனம் 14 ஆயிரம் எக்ஸ்யூவி700 கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து அசத்தியுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களை டெலிவரி பெற்ற வாடிக்கையாளர்கள் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

துளசி வாசம் மாறினாலும் மாறும்... ஆனா மஹிந்திரா வார்த்தை மாறாது... சொன்ன மாதிரியே காரை டெலிவரி பண்ணீட்டாங்க!

இத்தனைக்கும் செமிகண்டக்டர் சிப் பற்றாக்குறையால் கார் உற்பத்தி நிறுவனங்கள் மிக கடுமையாக திணறி வரும் நேரத்தில், மஹிந்திரா நிறுவனம் தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். புத்தம் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன.

துளசி வாசம் மாறினாலும் மாறும்... ஆனா மஹிந்திரா வார்த்தை மாறாது... சொன்ன மாதிரியே காரை டெலிவரி பண்ணீட்டாங்க!

கடந்த ஆண்டு தீபாவளி சமயத்திலேயே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை முன்பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்து விட்டது. இதன் காரணமாக தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எக்ஸ்யூவி700 காரின் உற்பத்தி பணிகளை மஹிந்திரா நிறுவனம் விரைவுபடுத்தியது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கப்பட்டது.

துளசி வாசம் மாறினாலும் மாறும்... ஆனா மஹிந்திரா வார்த்தை மாறாது... சொன்ன மாதிரியே காரை டெலிவரி பண்ணீட்டாங்க!

முதல் நாளில் வெறும் 57 நிமிடங்களிலேயே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கான முன்பதிவு எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது. ஒரு மணி நேரத்திற்கு உள்ளாக 25 ஆயிரம் முன்பதிவுகள் என்பது மிகப்பெரிய சாதனைதான். இதற்கு மறுநாள், அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காருக்கு மீண்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றது.

துளசி வாசம் மாறினாலும் மாறும்... ஆனா மஹிந்திரா வார்த்தை மாறாது... சொன்ன மாதிரியே காரை டெலிவரி பண்ணீட்டாங்க!

அக்டோபர் 8ம் தேதி வெறும் 2 மணி நேரத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்தன. அதாவது வெறும் 3 மணி நேரத்திற்கு உள்ளாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன. இது மஹிந்திரா நிறுவனத்திற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்தது.

துளசி வாசம் மாறினாலும் மாறும்... ஆனா மஹிந்திரா வார்த்தை மாறாது... சொன்ன மாதிரியே காரை டெலிவரி பண்ணீட்டாங்க!

இதன்பின் முன்பதிவு எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்து விட்டது. முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்யூவி700 கார்களை டெலிவரி செய்யும் பணிகளை தற்போது மஹிந்திரா நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துளசி வாசம் மாறினாலும் மாறும்... ஆனா மஹிந்திரா வார்த்தை மாறாது... சொன்ன மாதிரியே காரை டெலிவரி பண்ணீட்டாங்க!

அதிகம் பேர் முன்பதிவு செய்திருப்பதுதான் இந்த நீண்ட காத்திருப்பு காலத்திற்கான காரணமாக கூறப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் அருமையாக டிசைன் செய்யப்பட்டிருப்பதுடன், அதிநவீன வசதிகளையும் பெற்றுள்ளது. மேலும் சக்தி வாய்ந்த இன்ஜின் தேர்வுகளையும் மஹிந்திரா நிறுவனம் இந்த காரில் வழங்கியுள்ளது.

துளசி வாசம் மாறினாலும் மாறும்... ஆனா மஹிந்திரா வார்த்தை மாறாது... சொன்ன மாதிரியே காரை டெலிவரி பண்ணீட்டாங்க!

அத்துடன் மிகவும் பாதுகாப்பான 'மேட் இன் இந்தியா' கார்களில் ஒன்றாகவும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 திகழ்கிறது. இதுவரை 5 'மேட் இன் இந்தியா' கார்கள் மட்டுமே குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்துள்ளன.

துளசி வாசம் மாறினாலும் மாறும்... ஆனா மஹிந்திரா வார்த்தை மாறாது... சொன்ன மாதிரியே காரை டெலிவரி பண்ணீட்டாங்க!

இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரும் ஒன்றாகும். இதுதவிர டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ், டாடா பன்ச் மற்றும் இதே மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 ஆகிய கார்களும் குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று சாதனை படைத்திருக்கின்றன.

துளசி வாசம் மாறினாலும் மாறும்... ஆனா மஹிந்திரா வார்த்தை மாறாது... சொன்ன மாதிரியே காரை டெலிவரி பண்ணீட்டாங்க!

இதுபோன்ற காரணங்களால்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக புதிய தலைமுறை ஸ்கோர்பியோ காரை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதுவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 26, 2022, 19:57 [IST]
English summary
Mahindra delivers 14k units of the xuv700 check details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+