2023ல் மஹிந்திராவின் இந்த மின்சார கார் இந்தியா வருவது உறுதி! ரொம்ப பேர் இந்த காரோட வருகைக்காக காத்திருக்காங்க!
மஹிந்திரா நிறுவனம் அதன் இஎக்ஸ்யூவி 300 (Mahindra eXUV300) எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்ய இருக்கின்றது என்பது பற்றிய விபரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் பிரபல கார் மாடல்களில் ஒன்றான எக்ஸ்யூவி300 (XUV300) காரை மின்சார வெர்ஷனில் உருவாக்கி வருவதாகவும், அதனை வெகு விரைவில் இ-எக்ஸ்யூவி 300 (eXUV300) எனும் புதிய பெயரில் இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த தகவல் கடந்த சில மாதங்களாகவே வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதாவது, இக்காரை முதல் முறையாக மஹிந்திரா நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. அப்போதில் இருந்தே இதன் வருகை குறித்த தகவல்கள் இணையத்தை ஆளத் தொடங்கிவிட்டன.

மேலும், காரின் அறிமுகத்தில் இருந்தே இந்திய மின் வாகன பிரியர்கள் மற்றும் மஹிந்திரா தயாரிப்பை அதிகம் விரும்புபவர்கள் வாகனத்தின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்க தொடங்கிவிட்டனர். ஆனால், இ-எக்ஸ்யூவி 300 எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் குறித்த துள்ளியமான தகவல் தற்போதும் வெளியாக நிலையே தென்படுகின்றது.

இது காரின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் இ-எக்ஸ்யூவி 300 பெயரில் அறிமுகமாக இருக்கும் எலெக்ட்ரிக் கார்குறித்த சில முக்கிய தகவல்கள் அண்மையில் வெளி வந்தன. அந்த தகவல்கள், நடப்பு நிதியாண்டின் மூன்று அல்லது நான்காம் காலாண்டில் எலெக்ட்ரிக் அறிமுகமாகிவிடும் என தெரிவித்தன.

ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் தகவல்களோ அடுத்தாண்டின் (2023) முதல் காலாண்டில்தான் இ-எக்ஸ்யூவி 300 அறிமுகமாகும் என தெரிவிக்கின்றது. காரின் வருகை தள்ளிப்போகியிருப்பதை இந்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இது மகிழ்ச்சியில் இருந்த மஹிந்திரா கார் பிரியர்களை சற்றே கலக்கத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.

அதேநேரத்தில் முன்பு வெளியாகிய தகவல் தெரிவித்த டைம்லைனுக்கும், தற்போது வெளியாகியிருக்கும் தகவல் தெரிவிக்கும் டைம்லைனுக்கும் அதிக நாட்கள் வித்தியாசம் இல்லாத காரணத்தால் இப்புதிய தகவல் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இ-எக்ஸ்யூவி 300 ஓர் சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காராகும். இதன் வருகை தற்போது இந்திய மின்வாகன சந்தையில் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காருக்கு கடும் போட்டியாக அமைய இருக்கின்றது. இந்த கார் ரூ. 17.74 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த விலையில் விற்கக் கூடிய எலெக்ட்ரிக் காருக்கே போட்டியாக விரைவில் மஹிந்திரா நிறுவனம் இ-எக்ஸ்யூவி 300 காரை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு ஓர் முக்கிய தகவலை வெளியிட்டது. அதாவது, அடுத்த ஏழாண்டுகளுக்குள் சுமார் 16 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தது.

இந்த தகவல் இன்னும் சில எலெக்ட்ரிக் கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், இந்த தகவலை கூடுதல் உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் சில எலெக்ட்ரிக் கார்களின் முன் பக்கங்களை வெளிப்படுத்தும் டீசர் படங்களை வெளியிட்டது.

இதன்வாயிலாக நமக்கு மற்றுமொரு தகவலும் தெரிய வந்திருக்கின்றது. அது, சரவெடி வெடிப்பது போல் புதுமுக எலெக்ட்ரிக் கார்களை மஹிந்திரா நிறுவனம் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தும் என்பதே ஆகும். இவற்றின் வரிசையில் ஆரம்ப அறிமுகமாக இ-எக்ஸ்யூவி 300 கார் இருக்கும். இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜில் 300 கிமீ ரேஞ்ஜ் தரும் திறன், 130 பிஎச்பி பவர் ஆகியவற்றுடன் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர இன்னும் பல சிறப்பு வசதிகளும் அந்த காரில் இடம் பெற இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








