புதிய அவதாரம், புதிய பெயர்... அறிமுகமானது புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்! விற்பனை தேதி வெளியீடு!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ கிளாசிக் (Scorpio Classic) கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த வாகனம்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் புகழ்பெற்ற 'ஸ்கார்பியோ' (Scorpio) காரை 'ஸ்கார்பியோ கிளாசிக்' (Scorpio Classic) எனும் புதிய பெயரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. புதிய பெயர் மட்டுமில்லைங்க கணிசமான அளவில் புதிய மாற்றங்களுடன் அக்கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. நிறுவனம் சமீபத்தில் 'ஸ்கார்பியோ என்' காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது புதிய தலைமுறை ஸ்கார்பியோ என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மாடலின் வருகை பல ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோவிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என மஹிந்திரா தெரிவித்திருந்தது. அதேவேலையில் புதிய பெயர் மற்றும் அம்சங்களுடன் அது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பையே நிறுவனம் தற்போது நிஜமாக்கியிருக்கின்றது. ஆனால் இதன் விலை பற்றிய விபரம் அறிவிக்கப்படவில்லை.

ஸ்கார்பியோ கார் மாடல் 20 வருடங்களுக்கும் அதிகமாக இந்தியாவில் விற்பனையில் இருந்து வருகின்றது. ஆகையால், நீண்ட நெடிய வரலாற்றுக் கதையைக் கொண்ட இந்திய வாகனமாக ஸ்கார்பியோ பார்க்கப்படுகின்றது. இத்தகைய ஓர் வாகனத்திற்கே புகழ் சேர்க்கும் விதமாக மஹிந்திரா நிறுவனம் அதற்கு புதிய அவதாரத்தை தற்போது கொடுத்திருக்கின்றது.

முழுமையாக இதன் தோற்றம் ரீஃப்ரெஷ் செய்யப்பட்டிருக்கின்றது. தோற்றம் மட்டுமல்ல காரின் உட்பக்கம், எஞ்ஜின் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் என அனைத்திலும் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தற்போது பயன்படுத்தப்பட்டிருக்கும் மோட்டார் ஸ்கார்பியோவை பவர்ஃபுல் வாகனமாக மாற்றும் வகையில் உள்ளது. துடிப்பான இளைஞர்களைக் கவரும் பொருட்டு இந்த அம்சத்தை புதிய ஸ்கார்பியோ கிளாசிக் காரில் மஹிந்திரா நிறுவனம் சேர்த்திருக்கின்றது.

வழக்கமான ஸ்கார்பியோவிடம் இருந்து மாறுபட்டு காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக ஸ்கார்பியோ கிளாசிக் காரில் புதிய போல்டான தோற்றம் கொண்ட க்ரில், அதிக கட்டுமஸ்தான பானட் உடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், நிறுவனத்தின் புதிய லோகோவும் வழங்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, புதிய டிஆர்எல்கள், எல்இடி லைட்டுகள், புதிய ஆர்17 டைமண்ட் கட் அலாய் வீல்கள் என எக்கசக்க அம்சங்கள் புதிய ஸ்கார்பியோ கிளாசிக் காரில் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூறியதைப் போல் அதிக திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்ட மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அலுமினியத்தால் உருவாக்கப்பட்ட எடைக் குறைவான ஜென்2 ரக எம்ஹாவ்க் மோட்டாரே இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 97 kW (132 பிஎஸ்) பவரையும், 300 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இது முந்தைய வெர்ஷனில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மோட்டாரைக் காட்டிலும் 14 சதவீதம் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். இதுமட்டுமின்றி மிக குறைவான எடைக் கொண்டதும் கூட. இதைத்தொடர்ந்து, மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் விதமாக 6 ஸ்பீடு கேபிள் ஷஃப்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் முதல் முறையாக இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

மேலும், இயக்க அனுபவத்தை கூடுதல் சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு எம்டிவி-சிஎல் தொழில்நுட்பம் கூடிய சஸ்பென்ஷன் செட்-அப் ஸ்கார்பியோ கிளாசிக் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுதவிர, ரைடை கூடுதல் சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு 22.86 செமீ அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

இது, போன் மிர்ரரிங் மற்றும் இன்னும் பல மாடர்ன் அம்சங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் இரு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். அவை, கிளாசிக் எஸ் (Classic S) மற்றும் கிளாசிக் எஸ் 11 (Classic S 11) ஆகும். இன்று (ஆகஸ்டு 12) இந்த காரின் அறிமுகம் மட்டுமே அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

இது வரும் ஆகஸ்டு 20ம் தேதியில் இருந்தே அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், அன்றைய தினமே காரின் விலை மற்றும் பிற முக்கிய தகவல்கள் வெளியிடப்பட இருக்கின்றன. ஆகையால், இந்தியர்களின் கவனம் வரும் ஆகஸ்டு 20 நோக்கி நகர்ந்திருக்கின்றது. பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ கிளாசிக் காரை இந்த தினத்தில் அறிமுகத்தைச் செய்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








