மார்கெட்டில் மஹிந்திரா செய்த புதிய குழப்பம் யாருமே செய்தததை துணிந்து செஞ்சுட்டாங்க! இதனால மக்களுக்கு செம லாபம்

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 700 கார்களுக்கான விலையை குறைத்துள்ளது. மார்கெட்டில் நல்ல டிமாண்டில் உள்ள காரின் விலையை குறைத்து ஒரு புதிய யுக்தியைக் கையாண்டுள்ளது. இது குறித்த முழு விபரங்களை இங்கே காணுங்கள்.

மார்கெட்டில் மஹிந்திரா செய்த புதிய குழப்பம் ... யாருமே செய்தததை துணிந்து செஞ்சுட்டாங்க . . . இதனால் மக்களுக்குத் தான் லாபம் . . . .

இந்தியாவில் அதிகமான காத்திருப்பு காலம் கொண்ட கார் என்றால் அது மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் தான். இந்த காருக்காக மக்கள் வருட கணக்கில் கூடக் காத்திருக்கின்றனர். பொதுவாக பெரிய பிராண்ட் கார்கள், அதுவும் அதிக காத்திருப்பு காலம் கொண்ட கார்களில் விலை குறைப்பு என்பது நடக்காத ஒரு விஷயமாக இருக்கும்.

மார்கெட்டில் மஹிந்திரா செய்த புதிய குழப்பம் ... யாருமே செய்தததை துணிந்து செஞ்சுட்டாங்க . . . இதனால் மக்களுக்குத் தான் லாபம் . . . .

ஆனால் தற்போத மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 700 கார்களின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களின் விலையை ரூ6000 வரை குறைத்துள்ளது. இந்த திடீர் விலை குறைப்பு மக்களுக்குப் பெரிய ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. மிக குறைந்த அளவில் தான் விலையை குறைத்துள்ளார்கள் என்றாலும் இது என்ன விதமான யுக்தி எனத் தெரியாமல் பலர் குழப்பி வருகின்றனர்.

மார்கெட்டில் மஹிந்திரா செய்த புதிய குழப்பம் ... யாருமே செய்தததை துணிந்து செஞ்சுட்டாங்க . . . இதனால் மக்களுக்குத் தான் லாபம் . . . .

தற்போது 2022 செப்டம்பர் மாதம் குறைக்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரின் விலை விபரங்களைக் கீழே காணுங்கள்.

Mahindra XUV700 AndrenoX Series
Fuel Type MT AT
AX5

(5-Seater)

Petrol ₹16,49,247 ₹18,23,416
Diesel ₹17,14,456 ₹18,86,080
AX5

(7-Seater)

Petrol ₹17,12,938 -
Diesel ₹17,78,148 ₹19,49,680
AX7

(7-Seater)

Petrol ₹19,14,515 ₹20,88,849
Diesel ₹19,79,724 ₹21,52,140
Diesel + AWD NA ₹22,92,199
மார்கெட்டில் மஹிந்திரா செய்த புதிய குழப்பம் ... யாருமே செய்தததை துணிந்து செஞ்சுட்டாங்க . . . இதனால் மக்களுக்குத் தான் லாபம் . . . .

மஹிந்திரா நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகும் கார் எக்ஸ்யூவி 700 இந்த காருக்கு தற்போதே 1.5 லட்சம் புக்கிங்கள் குவிந்துள்ளது. இந்த கார்களை வாங்க மக்கள் 1 வருடம் கூடத் தாராளமாக காத்திருக்கின்றனர். சில் 2 ஆண்டுகள் காத்திருக்கும் நிலை கூட இருக்கிறது.

மார்கெட்டில் மஹிந்திரா செய்த புதிய குழப்பம் ... யாருமே செய்தததை துணிந்து செஞ்சுட்டாங்க . . . இதனால் மக்களுக்குத் தான் லாபம் . . . .

இந்த காரில் டீசல் வேரியன்டிற்கு தான் டிமாண்ட் அதிகம். பெட்ரோல் வேரியன்ட்கள் குறைந்த காத்திருப்பு காலத்திலேயே கிடைத்து விடுகிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த டீசல் காரில் பயன்படுத்தப்படும் இன்ஜின் தான். இதில் 2.2 லிட்டர் mHawk டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் வேரியன்டில் 2.0 லிட்டர் mFalcon இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மார்கெட்டில் மஹிந்திரா செய்த புதிய குழப்பம் ... யாருமே செய்தததை துணிந்து செஞ்சுட்டாங்க . . . இதனால் மக்களுக்குத் தான் லாபம் . . . .

இதில் mHawk டர்போ டீசல் இன்ஜின் இந்த காருக்கு 17 கி.மீ மைலேஜை தருகிறது. அதுவே பெட்ரோல் இன்ஜின் வெறும் 15 கி.மீ மைலேஜை தான் தருகிறது. இதனால் மக்கள் டீசல் இன்ஜின் கார்களையே அதிகம் விரும்புகின்றனர். இன்று டீசல் விலையும் பெட்ரோல் விலையும் கிட்டத்தட்ட ஒரே விலையில் தான் விற்பனையாகிறது.

மார்கெட்டில் மஹிந்திரா செய்த புதிய குழப்பம் ... யாருமே செய்தததை துணிந்து செஞ்சுட்டாங்க . . . இதனால் மக்களுக்குத் தான் லாபம் . . . .

ஆனால் மக்கள் டீசல் இன்ஜினை அதிகம் விரும்புவதற்கு அதன் மைலேஜ் மட்டும் காரணமல்ல பெட்ரோல் இன்ஜினை விட டீசல் இன்ஜினில் தான் அதிகமான டார்க் உள்ளது. அதனால் மக்கள் சிறப்பான டிரைவிங் அனுபவத்திற்காகவும் டீசல் வேரியன்டை விரும்புகின்றனர். இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் பெரும்பாலான வேரியன்ட்களில் முன்பக்க வீல் டிரைவ் ஆப்ஷன் தான் இருக்கிறது. இதுவே டாப் டீசல் வேரியன்டில் மட்டும் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் இருக்கிறது.

மார்கெட்டில் மஹிந்திரா செய்த புதிய குழப்பம் ... யாருமே செய்தததை துணிந்து செஞ்சுட்டாங்க . . . இதனால் மக்களுக்குத் தான் லாபம் . . . .

இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்டில் மொத்தம் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை 2 லிட்டர் 4 சிலிண்டர் யூனிட் இருக்கிறது. இது 197 பிஎச்பி பவரையும் 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மார்கெட்டில் மஹிந்திரா செய்த புதிய குழப்பம் ... யாருமே செய்தததை துணிந்து செஞ்சுட்டாங்க . . . இதனால் மக்களுக்குத் தான் லாபம் . . . .

டீசல் இன்ஜினை பொருத்தவரை 2.2 லிட்டர் 4 சிலிண்டர் ரீ இன்ஜினியர்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜில் அதிகமான ட்யூன்களில் கிடைக்கிறது. பேசிக் மேனுவல் வேரியன்டில்153 பிஎச்பி பவர் 360 என்எம் டார்க் உடனும், ஹையர் மேனுவல் வேரியன்டில் 182 பிஎச்பி பவர் 420 என்எம் டார்க் திறனுடனும், டாப் டீசல் ஆட்டோமெட்டிக் வேரியன்டில் 182 பிஎச்பி பவர் 450 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

மார்கெட்டில் மஹிந்திரா செய்த புதிய குழப்பம் ... யாருமே செய்தததை துணிந்து செஞ்சுட்டாங்க . . . இதனால் மக்களுக்குத் தான் லாபம் . . . .

மஹிந்திரா நிறுவனம் இந்த எக்ஸ்யூவி 700 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கி வருகிறது. இந்த காருக்கு எக்ஸ்யூவி700. இ8 என அந்த காருக்கு பெயரிட்டுள்ளது. இந்தக் காரை அந்நிறுவனம் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்கெட்டில் மஹிந்திரா செய்த புதிய குழப்பம் ... யாருமே செய்தததை துணிந்து செஞ்சுட்டாங்க . . . இதனால் மக்களுக்குத் தான் லாபம் . . . .

இந்த காரை மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே தயாரித்து இந்திய சாலைகளில் டெஸ்ட் செய்து வருகிறது. மஹிந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களுக்காக புதிய சப்-பிராண்ட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த பிராண்ட்டின் பேட்ஜ்களுடன் வரும் 2024ம் ஆண்டு முதல் கார்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்கெட்டில் மஹிந்திரா செய்த புதிய குழப்பம் ... யாருமே செய்தததை துணிந்து செஞ்சுட்டாங்க . . . இதனால் மக்களுக்குத் தான் லாபம் . . . .

இந்த பிராண்டின் கீழ் முற்றிலும் அடிப்படையிலிருந்து எலெக்ட்ரிக் கார்களாக உருவாக்கப்படும் கார்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. எக்ஸ்யூவி இ8 எக்ஸ்யூவி 700 காரை எலெக்ட்ரிக் காராக மாற்றுவது என்பதால் இது அந்த பிராண்டின் கீழ் வெளியாகாது . மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க INGLO என்ற பிளாட்ஃபார்மை தயாரித்துள்ளது. இது ஃபோக்ஸ்வேகன் MEB பிளாட்ஃபார்மின் சில பாகங்களைக் கொண்டது. என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 10, 2022, 11:00 [IST]
English summary
Mahindra made price cut in all variants of xuv 700
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+