கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான மஹிந்திரா கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த மாடல் தெரியுமா?

கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான மஹிந்திரா கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த மாடல் தெரியுமா?

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், பொலிரோ முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் மஹிந்திரா நிறுவனம் வெறும் 5,744 பொலிரோ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 7,884 ஆக உயர்ந்துள்ளது. இது 37 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான மஹிந்திரா கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த மாடல் தெரியுமா?

இந்த பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் மஹிந்திரா நிறுவனம் 6,022 எக்ஸ்யூவி700 கார்களை விற்பனை செய்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனையிலேயே இல்லை. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் நம்மால் ஒப்பிட இயலாது.

கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான மஹிந்திரா கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த மாடல் தெரியுமா?

இந்த பட்டியலில் எக்ஸ்யூவி300 கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 4,615 எக்ஸ்யூவி300 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 4,754 ஆக உயர்ந்துள்ளது. இது 3 சதவீத வளர்ச்சியாகும். மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய இரண்டு கார்களுமே குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றவை ஆகும்.

கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான மஹிந்திரா கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த மாடல் தெரியுமா?

இந்த பட்டியலில் ஸ்கார்பியோ நான்காவது இடத்தை பிடித்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 4,160 ஸ்கார்பியோ கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 4,131 ஆக குறைந்துள்ளது. இது 1 சதவீத வீழ்ச்சியாகும். மஹிந்திரா நிறுவனம் வெகு சமீபத்தில்தான், ஸ்கார்பியோ-என் என்ற புதிய மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான மஹிந்திரா கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த மாடல் தெரியுமா?

இந்த பட்டியலில் மஹிந்திரா தார் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 1,065 தார் எஸ்யூவி கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 3,640 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் விற்பனை 242 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான மஹிந்திரா கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த மாடல் தெரியுமா?

இந்த பட்டியலில் மஹிந்திரா நிறுவனத்தின் எம்பிவி ரகத்தை சேர்ந்த காரான மராஸ்ஸோ ஆறாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் மஹிந்திரா நிறுவனம் 402 தார் எஸ்யூவி கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் வெறும் 124 ஆக குறைந்துள்ளது. இது 69 சதவீத வீழ்ச்சியாகும்.

கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான மஹிந்திரா கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த மாடல் தெரியுமா?

இந்தியாவின் எம்பிவி செக்மெண்ட்டில் தற்போது போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. 2022 மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் கியா கேரன்ஸ் ஆகிய கார்கள் இந்த செக்மெண்ட்டில் நடப்பாண்டில் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான மஹிந்திரா கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த மாடல் தெரியுமா?

அதே நேரத்தில் மஹிந்திரா மராஸ்ஸோ பழைய காராக இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு சரிந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாகவே அந்த கார் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கிடையே இந்த பட்டியலில் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி கார் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான மஹிந்திரா கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த மாடல் தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 16 அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 65 ஆக உயர்ந்துள்ளது. இது 306 சதவீத வளர்ச்சியாகும். இதுதவிர மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டு ஜூன் மாதம் 20 இ-வெரிட்டோ கார்களையும் விற்பனை செய்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் மஹிந்திரா இ-வெரிட்டோ காரின் விற்பனை எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகும்.

கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான மஹிந்திரா கார்கள்... முதலிடத்தில் இருப்பது எந்த மாடல் தெரியுமா?

தற்போதைய நிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி700 மற்றும் மஹிந்திரா தார் ஆகிய எஸ்யூவி கார்களுக்கு நீண்ட காத்திருப்பு காலம் நிலவி வருகிறது. இந்த கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ள நிலையில், செமி கண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை பிரச்னையும் நிலவி வருவதால், வெகு சமீபத்தில் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காருக்கும் காத்திருப்பு காலம் மிகவும் அதிக அளவில் இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 16, 2022, 14:58 [IST]
English summary
Mahindra model wise sales june 2022
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+