பாதுகாப்பு விஷயத்தில் டாடாவிற்கு சவால் அளிக்கும் மஹிந்திரா... கார் விற்பனை பட்டைய கௌப்புது!

நடப்பாண்டு மார்ச் மாதம் மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கையை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாதுகாப்பு விஷயத்தில் டாடாவிற்கு சவால் அளிக்கும் மஹிந்திரா... கார் விற்பனை பட்டைய கௌப்புது!

இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டு மார்ச் மாதம் 27,386 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் மஹிந்திரா நிறுவனம் வெறும் 16,643 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் மஹிந்திரா நிறுவனம் விற்பனையில் 64.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

பாதுகாப்பு விஷயத்தில் டாடாவிற்கு சவால் அளிக்கும் மஹிந்திரா... கார் விற்பனை பட்டைய கௌப்புது!

இந்திய சந்தையில் நடப்பாண்டு மார்ச் மாதம் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் மஹிந்திரா 4வது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் மஹிந்திரா நிறுவனத்தின் சந்தை பங்கு, அதாவது மார்க்கெட் ஷேர், 8.5 சதவீதமாக இருந்தது. கார் விற்பனையில் சிறப்பான வளர்ச்சி காரணமாக மஹிந்திரா நிறுவனம் மகிழ்ச்சியடைந்துள்ளது.

பாதுகாப்பு விஷயத்தில் டாடாவிற்கு சவால் அளிக்கும் மஹிந்திரா... கார் விற்பனை பட்டைய கௌப்புது!

இந்திய சந்தையில் நடப்பாண்டு மார்ச் மாதம் அதிகம் விற்பனையான மஹிந்திரா நிறுவன கார்களின் பட்டியலில் பொலிரோ முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 8,905 ஆக இருந்த மஹிந்திரா பொலிரோ காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு மார்ச் மாதம் 6,924 ஆக குறைந்துள்ளது. இது 22 சதவீத வீழ்ச்சியாகும்.

பாதுகாப்பு விஷயத்தில் டாடாவிற்கு சவால் அளிக்கும் மஹிந்திரா... கார் விற்பனை பட்டைய கௌப்புது!

இருப்பினும் மஹிந்திரா பொலிரோ முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்த பட்டியலில் மஹிந்திரா ஸ்கார்பியோ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 2,331 ஆக இருந்த மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு மார்ச் மாதம் 6,061 ஆக உயர்ந்துள்ளது. இது 160 சதவீத வளர்ச்சியாகும்.

பாதுகாப்பு விஷயத்தில் டாடாவிற்கு சவால் அளிக்கும் மஹிந்திரா... கார் விற்பனை பட்டைய கௌப்புது!

மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை ஸ்கார்பியோ காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த பிரம்மாண்டான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் 6,040 எக்ஸ்யூவி700 கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

பாதுகாப்பு விஷயத்தில் டாடாவிற்கு சவால் அளிக்கும் மஹிந்திரா... கார் விற்பனை பட்டைய கௌப்புது!

நூலிழையில் ஸ்கார்பியோ காரிடம், எக்ஸ்யூவி700 இரண்டாவது இடத்தை இழந்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே அதன் விற்பனை எண்ணிக்கையை 2021ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட முடியாது. இந்த பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார், நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

பாதுகாப்பு விஷயத்தில் டாடாவிற்கு சவால் அளிக்கும் மஹிந்திரா... கார் விற்பனை பட்டைய கௌப்புது!

நடப்பாண்டு மார்ச் மாதம் 4,140 எக்ஸ்யூவி300 கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 2,587 ஆக மட்டுமே இருந்தது. இது 60 சதவீத வளர்ச்சியாகும். மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் எக்ஸ்யூவி300 ஆகிய இரண்டு கார்களுமே, குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு விஷயத்தில் டாடாவிற்கு சவால் அளிக்கும் மஹிந்திரா... கார் விற்பனை பட்டைய கௌப்புது!

கார்களின் பாதுகாப்பு விஷயத்தில், டாடா நிறுவனத்தை போலவே, மஹிந்திரா நிறுவனமும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை மஹிந்திரா தார் பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 1,912 ஆக இருந்த இந்த எஸ்யூவி காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு மார்ச் மாதம் 3,893 ஆக உயர்ந்துள்ளது. இது 104 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை மஹிந்திரா மராஸ்ஸோ தன்வசப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு விஷயத்தில் டாடாவிற்கு சவால் அளிக்கும் மஹிந்திரா... கார் விற்பனை பட்டைய கௌப்புது!

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 255 ஆக இருந்த இந்த எம்பிவி காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் 279 ஆக உயர்ந்துள்ளது. இது 9 சதவீத வளர்ச்சியாகும். கியா கேரன்ஸ், 2022 மாருதி சுஸுகி எர்டிகா, 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஆகிய கார்களின் வருகை, வரும் மாதங்களில் மஹிந்திரா மராஸ்ஸோவிற்கு மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு விஷயத்தில் டாடாவிற்கு சவால் அளிக்கும் மஹிந்திரா... கார் விற்பனை பட்டைய கௌப்புது!

இந்த பட்டியலில் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 கார், ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 49 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் 41 ஆக குறைந்துள்ளது. இது 16 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் மஹிந்திரா இ-வெரிட்டோவிற்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது.

பாதுகாப்பு விஷயத்தில் டாடாவிற்கு சவால் அளிக்கும் மஹிந்திரா... கார் விற்பனை பட்டைய கௌப்புது!

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த காரின் விற்பனை எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்த நிலையில், நடப்பாண்டு மார்ச் மாதம் 6 இ-வெரிட்டோ கார்களை விற்பனை செய்துள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் ஒன்பதாவது மற்றும் கடைசி இடத்தை மஹிந்திரா கேயூவி பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 1 என இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு மார்ச் மாதம் 2 ஆக உயர்ந்துள்ளது. இது 100 சதவீத வளர்ச்சியாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 22, 2022, 20:33 [IST]
English summary
Mahindra model wise sales report march 2022
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+