மஹிந்திரா 'கை' வண்ணத்தில் உருவாகிய 'மூன்ரேக்கர்' கார்... நிலாவுலையே வச்சு ஓட்டலாம் போலிருக்கே! ஸ்டைல் அல்லுது!
மஹிந்திரா நிறுவனத்தின் கை வண்ணத்தில் எக்ஸ்யூவி500 (Mahindra XUV 500) கார் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பு வசதிகள் குறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா நிறுவனத்தின் மிக முக்கியமான கார் மாடல்களில் ஒன்றாக எக்ஸ்யூவி500 (Mahindra XUV 500) இருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக கவர்ச்சியான தோற்றம் எஸ்யூவி கார்களில் இதுவும் ஒன்று. மேலும், செலவு செய்யும் பணத்திற்கு உகந்த காராகவும் இது காட்சியளிக்கின்றது.

இந்த காரையே தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா பிரத்யேகமாக மாடிஃபை செய்திருக்கின்றது. இந்த மாடிஃபை செய்யப்பட்ட எக்ஸ்யூவி500 காருக்கு மூன் ரேக்கர் (Moonraker) எனும் பெயரை அது வைத்திருக்கின்றது. நிலவில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் தோற்றத்தில் இது காட்சியளிப்பதன் காரணத்தினலாயே இந்த பெயரை மஹிந்திரா வைத்திருக்கின்றது.

மிக நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வாகனமாக மூன் ரேக்கர் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அதுக்காக, நிலவுக்கு போக முடியுமானு கேக்காதீங்க. குடும்பத்துடனான சுற்றுலா பயணங்களுக்கு ஏற்ற வாகனமாகவே இது வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி காரின் தோற்றத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மல்டி-பாட் பனி மின் விளக்கு, க்ரில், கூடுதல் கட்டுமஸ்தான பக்கவாட்டு பேனல்கள் மற்றும் பம்பர்கள் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரை முற்றிலும் மாறுபட்ட தோற்றம் கொண்ட காராக மாற்றியிருக்கின்றன.

தொடர்ந்து, டயர்களும் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆஃப்-ரோடு டயர்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை, ஆஃப்டர் மார்க்கெட் அலாய் வீல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, பனி மின் விளக்கை தவிர பிற அனைத்து மின் விளக்குகளும் ஆஃப்டர் மார்க்கெட் உபகரணங்கள் என கூறப்படுகின்றது.

தொடர்ந்து, காரின் உட்பகுதியை அலங்கரிக்கும் ரூஃபில் சிறிய சிறிய லைட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை மஹிந்திரா எக்ஸ்யூ500 காரில் விண்வெளியில் இருப்பதைப் போன்று உணர செய்யும் வகையில் உள்ளது. தொடர்ந்து, காரின் வெளிப்புறத்தில் லக்கேஜ் பாக்ஸ், ஸ்பேர் வீல் மற்றும் ஏர் கிராஃப்ட் ரக எக்சாஸ்ட் பைப் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

காருக்குள் இருந்த அனைத்து இருக்கைகளும் அகற்றப்பட்டு புதிய இருக்கைகள் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற சொகுசு அம்சத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், ஸ்நேக்ஸ் டிரே, ஆம்பிசியண்ட் மின் விளக்கு, 19 இன்ச் அளவுள்ள எல்இடி டிவி, ஒய்-ஃபை இணைப்பு, பிளே ஸ்டேஷன் 4, குளிர்சாதன பெட்டி, ஸ்மார்ட் போனால் கட்டுப்படுத்தக் கூடிய சிறிய பேன் உள்ளிட்ட அம்சங்களும் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், வீடியோ கான்பரன்ஸ் சிஸ்டம், லைவ் ஸ்ட்ரீமிங் வசதி, யுஎஸ்பி போர்ட், 12 வோல்ட் மற்றும் 230 வோல்ட் சாக்கெட், அமேசான் ஃபையர் ஸ்டிக் வசதிக் கொண்ட டிவி உள்ளிட்ட அம்சங்களும் எக்ஸ்யூவி500 மூன்ரேக்கில் இடம் பெற்றிருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, காரின் தரைப்பகுதியில் உள்ள மேட்டுகள் கூட புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

Source: Gaadiwaadi
ஆகையால், மிகவும் லக்சூரியான காராக எக்ஸ்யூவி500 காட்சியளிக்கின்றது. ஆனால், எஞ்ஜின் விஷயத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை. வழக்கமான மஹிந்திரா எக்ஸ்யூவி500 2.2 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்விலேயே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இக்கார் இந்தியாவில் ரூ. 14.16 லட்சம் தொடங்கி ரூ. 19.99 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. ஆனால், மாடிஃபை செய்யப்பட்டிருக்கும் காரின் மதிப்பு பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications








