முதல் இந்திய நிறுவனமாக NFT துறையில் நுழைந்த மஹிந்திரா! சூப்பரான காரியத்திற்கு இதன் வருவாயை பயன்படுத்த போறாங்க!

முதல் இந்திய நிறுவனமாக நான் ஃபங்கிபிள் டோக்கன் (Non Fungible Tokens) துறையில் மஹிந்திரா நுழைந்துள்ளது. மேலம், அதன் புகழ்பெற்ற கார் மாடலில் ஒன்றான தார் எஸ்யூவி அடிப்படையில் உருவாக்கப்பட்ட நான்கு என்எஃப்டி-க்களுக்கான ஏலத்தையும் அது நாட்டில் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

முதல் இந்திய நிறுவனமாக NFT துறையில் நுழைந்த மஹிந்திரா! ஒரு நல்ல காரியத்துக்கு இதன்மூலம் கிடைக்கும் பணம் பயன்பட போகுது!

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனங்களில் மஹிந்திராவும் ஒன்று. இந்நிறுவனம், அதன் புகழ்பெற்ற தார் எஸ்யூவி கார் அடிப்படையிலான என்எஃப்டி (Non Fungible Tokens)-களை உருவாக்கியிருக்கின்றது. இவற்றை பிரத்யேகமாக ஏலத்தின் வாயிலாக விற்பனைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முதல் இந்திய நிறுவனமாக NFT துறையில் நுழைந்த மஹிந்திரா! ஒரு நல்ல காரியத்துக்கு இதன்மூலம் கிடைக்கும் பணம் பயன்பட போகுது!

இதன் வாயிலாகக் கிடைக்கும் வருவாயை ஓர் நல்ல காரியத்திற்கு பயன்படுத்த இருப்பதாகவும் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அதாவது, இந்தியா முழுவதிலும் உள்ள ஆதரவற்ற பெண்களுக்கு கல்வி கற்பதற்காக அப்பணத்தை பயன்படுத்தப்பட இருக்கின்றது, மஹிந்திரா.

முதல் இந்திய நிறுவனமாக NFT துறையில் நுழைந்த மஹிந்திரா! ஒரு நல்ல காரியத்துக்கு இதன்மூலம் கிடைக்கும் பணம் பயன்பட போகுது!

இன்றே (மார்ச் 29) தார் அடிப்படையிலான என்எஃப்டி-க்கள் ஏலம் விடப்படுகின்றது. இந்த பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பணியை தொடங்கியதன் வாயிலாக, என்எஃப்டி வர்த்தகத்தில் நுழைந்த முதல் இந்திய வாகன உற்பத்தியாளராக மஹிந்திரா மாறியிருக்கின்றது.

முதல் இந்திய நிறுவனமாக NFT துறையில் நுழைந்த மஹிந்திரா! ஒரு நல்ல காரியத்துக்கு இதன்மூலம் கிடைக்கும் பணம் பயன்பட போகுது!

இந்தியாவில் இதற்கு முன்னதாக வேறு எந்த நிறுவனமும் இத்தகைய செயலை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. நான் ஃபங்கிபிள் டோக்கன் என்பது கிரிப்டோகிராஃபிக் சொத்தாகும். அதாவது, டிஜிட்டல் சொத்தாகும். இது பிளாக்செயினைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் சேமித்துக் கொள்ள முடியும்.

முதல் இந்திய நிறுவனமாக NFT துறையில் நுழைந்த மஹிந்திரா! ஒரு நல்ல காரியத்துக்கு இதன்மூலம் கிடைக்கும் பணம் பயன்பட போகுது!

தனித்துவமான கோட்கள் மற்றும் மெட்டாடேட்டாக்கள் வாயிலாக அவை உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாகவே அவை ஒன்றுடன் ஒன்று மாறுபட்டுக் காணப்படுகின்றன. அதேநேரத்தில், என்எஃப்டிக்கல் ஓவியமாகவோ அல்லது இசையாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

முதல் இந்திய நிறுவனமாக NFT துறையில் நுழைந்த மஹிந்திரா! ஒரு நல்ல காரியத்துக்கு இதன்மூலம் கிடைக்கும் பணம் பயன்பட போகுது!

மேலும், பிளாக்செயின் வாயிலாக தரவுகள் சேமிக்கப்படுவதால் இதில் மோசடி என்பதற்கான பேச்சே இருக்காது என கூறப்படுகின்றது. அதேநேரத்தில், தற்போது மஹிந்திரா அறிமுகம் செய்திருக்கும் தார் எஸ்யூவி கார் அடிப்படையிலான என்எஃப்டி-க்களை, கிரிப்டோ கரன்சிகளைப் போல் வர்த்தகம் செய்யவோ அல்லது விற்கவோ முடியாது.

முதல் இந்திய நிறுவனமாக NFT துறையில் நுழைந்த மஹிந்திரா! ஒரு நல்ல காரியத்துக்கு இதன்மூலம் கிடைக்கும் பணம் பயன்பட போகுது!

ஆனால், வணிக பரிவார்த்தனைகளுக்கான ஊடமாக மட்டும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இத்தகைய என்எஃப்டி-க்களையே மஹிந்திரா நிறுவனம், அதன் சகோதர நிறுவனமான டெக் மஹிந்திராவின் உதவியுடன் வெளியிடுகின்றது.

முதல் இந்திய நிறுவனமாக NFT துறையில் நுழைந்த மஹிந்திரா! ஒரு நல்ல காரியத்துக்கு இதன்மூலம் கிடைக்கும் பணம் பயன்பட போகுது!

தார் எஸ்யூவி கார் அடிப்படையிலான என்எஃப்டிக்கள் வெளியீடு செய்யப்படுவது அக்காருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வாகனம் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் காராக மாறியிருக்கின்றது. வருட கணக்கில் இக்காருக்கு காத்திருக்கும் அளவிற்கு தற்போது டிமாண்ட் உச்சத்தில் இருக்கின்றது.

முதல் இந்திய நிறுவனமாக NFT துறையில் நுழைந்த மஹிந்திரா! ஒரு நல்ல காரியத்துக்கு இதன்மூலம் கிடைக்கும் பணம் பயன்பட போகுது!

இரண்டாம் தலைமுறை தார் காரை மஹிந்திரா நிறுவனம் 2020ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி அன்றே நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 10 ஆண்டுகள் கழித்து புதிய அவதாரத்தில் இது விற்பனைக்கு வந்தது. முதன் முதலில் 2010 அக்டோபரிலேயே இக்காரை மஹிந்திரா அறிமுகப்படுத்தியது.

முதல் இந்திய நிறுவனமாக NFT துறையில் நுழைந்த மஹிந்திரா! ஒரு நல்ல காரியத்துக்கு இதன்மூலம் கிடைக்கும் பணம் பயன்பட போகுது!

இட வசதியிலும், தொழில்நுட்பத்திலும் முற்றிலும் மாறுபட்டதாக தார் காட்சியளிக்கின்றது. எனவேதான் இக்கார் ஆஃப்-ரோடு வாகன பிரியர்களை மட்டுமின்றி குடும்பத்துடன் பயணத்தை மேற்கொள்வோர்களையும் கவர்ந்துக் கொண்டிருக்கின்றது. இரண்டாம் தலைமுறை தார் எஸ்யூவி 3,985 மிமீ நீளம், 1,820 அகலம் மற்றும் 1,920 மிமீ உயரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஆஃப்-ரோடுகளை சமாளிக்க ஏதுவாக 2,450 மிமீ வீல்பேஸையும் அது கொண்டிருக்கின்றது.

முதல் இந்திய நிறுவனமாக NFT துறையில் நுழைந்த மஹிந்திரா! ஒரு நல்ல காரியத்துக்கு இதன்மூலம் கிடைக்கும் பணம் பயன்பட போகுது!

மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் இன்லைன் 4 சிலிண்டர் எம்ஸ்டால்லியன் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 150 பிஎச்பி பவரை 5,000 ஆர்பிஎம்மிலும், 300 என்எம் டார்க்கை 1,250 மற்றும் 3,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டது. இதேபோல், தார் டீசல் எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

முதல் இந்திய நிறுவனமாக NFT துறையில் நுழைந்த மஹிந்திரா! ஒரு நல்ல காரியத்துக்கு இதன்மூலம் கிடைக்கும் பணம் பயன்பட போகுது!

2.2 லிட்டர் 4 சிலிண்டர் எம்ஹாவ்க் எஞ்ஜினிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது 130 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இரு எஞ்ஜின்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் தானியங்கி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 29, 2022, 13:41 [IST]
English summary
Mahindra presenting first series of thar suv themed nft s
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+