போற போக்க பாத்தா மாருதியவே காலி பண்ணிடும் போல! மஹிந்திராவின் புதுமுக கார்களுக்கு செம்ம டிமாண்ட் கிடைச்சிருக்கு

மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

போற போக்க பாத்தா மாருதியவே காலி பண்ணிடும் போல... புதுசா அறிமுகம் செய்த மஹிந்திரா கார்களுக்கு சூப்பர் டிமாண்ட் நிலவுது! இதோ ஆதாரம்!

பொதுவாக இந்தியாவில் வெளிநாட்டு தயாரிப்புகளே மிக அதிகளவில் விற்பனையாகும். இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தோ-ஜப்பான் கூட்டணி நிறுவனங்களான மாருதி சுஸுகி தயாரிப்புகளே பல ஆண்டுகளாக நாட்டின் முதன்மை வாகன உற்பத்தியாளராக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை தென் கொரிய நிறுவனம் ஹூண்டாய் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.

போற போக்க பாத்தா மாருதியவே காலி பண்ணிடும் போல... புதுசா அறிமுகம் செய்த மஹிந்திரா கார்களுக்கு சூப்பர் டிமாண்ட் நிலவுது! இதோ ஆதாரம்!

அவ்வப்போது டாடாவிடம் இந்த இடத்தை ஹூண்டாய் பறிகொடுத்தாலும், அடுத்தடுத்த மாதங்களில் அந்த இடத்தை இந்திய நிறுவனத்திடம் இருந்து ஹூண்டாய் தட்டி பறித்துவிடும். இதற்கு இந்தியர்கள் மத்தியில் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் மீது நிலவும் மோகமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

போற போக்க பாத்தா மாருதியவே காலி பண்ணிடும் போல... புதுசா அறிமுகம் செய்த மஹிந்திரா கார்களுக்கு சூப்பர் டிமாண்ட் நிலவுது! இதோ ஆதாரம்!

இந்த மாதிரியான சூழலில் 2022 செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் 40 சதவீத (55,988 யூனிட்டுகள்) விற்பனை வளர்ச்சியையும், மஹிந்திரா நிறுவனம் அதிகபட்சமாக 168 சதவீத (34,508 யூனிட்டுகள்) விற்பனை வளர்ச்சியையும் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போற போக்க பாத்தா மாருதியவே காலி பண்ணிடும் போல... புதுசா அறிமுகம் செய்த மஹிந்திரா கார்களுக்கு சூப்பர் டிமாண்ட் நிலவுது! இதோ ஆதாரம்!

உள்நாட்டு நிறுவனங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த விற்பனை வளர்ச்சி "வெளிநாட்டு தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு குறைய தொடங்கியிருக்கின்றதா" என்ற எண்ணத்தை நம் மத்தியில் எழுப்பியிருக்கின்றது. குறிப்பாக, மஹிந்திரா நிறுவனம் பெற்றிருக்கும் விற்பனை வளர்ச்சி நம் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருப்பதோடு, இந்தியாவில் வேறு எந்த கார்களும் விற்பனையே ஆகவில்லையா என்கிற சந்தேகத்தையும் எழுப்பச் செய்திருக்கின்றது.

போற போக்க பாத்தா மாருதியவே காலி பண்ணிடும் போல... புதுசா அறிமுகம் செய்த மஹிந்திரா கார்களுக்கு சூப்பர் டிமாண்ட் நிலவுது! இதோ ஆதாரம்!

அந்தளவிற்கு மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பிற்கு இந்தியர்கள் மத்தில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. ஏற்கனவே கூறியதைபோல் 2022 செப்டம்பரில் மட்டும் ஒட்டுமொத்தமாக 34,508 யூனிட்டுகள் வரை மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனையாகி இருக்கின்றன.

போற போக்க பாத்தா மாருதியவே காலி பண்ணிடும் போல... புதுசா அறிமுகம் செய்த மஹிந்திரா கார்களுக்கு சூப்பர் டிமாண்ட் நிலவுது! இதோ ஆதாரம்!

இதே நிறுவனத்தின் தயாரிப்புகள் 2021 செப்டம்பரில் 12,863 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைக் காட்டிலும் 168 சதவீத விற்பனை வளர்ச்சியையே நடப்பாண்டில் மஹிந்திரா நிறுவனம் பெற்றிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு பொலிரோ, ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி 700, தார், அல்டுராஸ் ஆகிய கார் மாடல்களே முக்கிய காரணமாக இருக்கின்றன.

போற போக்க பாத்தா மாருதியவே காலி பண்ணிடும் போல... புதுசா அறிமுகம் செய்த மஹிந்திரா கார்களுக்கு சூப்பர் டிமாண்ட் நிலவுது! இதோ ஆதாரம்!

இந்த கார் மாடல்களுக்கே இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் அபரீத வரவேற்பே நிறுவனத்தை இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களின் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேற்றியிருக்கின்றது. இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை பங்கு 9.7 சதவீதமாக இருக்கின்றது.

போற போக்க பாத்தா மாருதியவே காலி பண்ணிடும் போல... புதுசா அறிமுகம் செய்த மஹிந்திரா கார்களுக்கு சூப்பர் டிமாண்ட் நிலவுது! இதோ ஆதாரம்!

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் சந்தை பங்கு 6.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தகுந்தது. 2022 செப்டம்பர் விற்பனை 2022 ஆகஸ்டைக் காட்டிலும் அதிகமானதாக இருக்கின்றது. இந்த மாதத்தில் ஒட்டுமொத்தமாகவே 29,615 யூனிட்டுகள் விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவை அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் சூழ இருக்கின்றன.

போற போக்க பாத்தா மாருதியவே காலி பண்ணிடும் போல... புதுசா அறிமுகம் செய்த மஹிந்திரா கார்களுக்கு சூப்பர் டிமாண்ட் நிலவுது! இதோ ஆதாரம்!

ஆகையால் அடுத்து வரும் மாதங்களிலும் இந்நிறுவனம் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில், தற்போது கிடைத்துக் கொண்டிருக்கும் வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக நிறுவனம் புதுமுக தயாரிப்புகளைக் களமிறக்க ஆரம்பித்துள்ளது.

போற போக்க பாத்தா மாருதியவே காலி பண்ணிடும் போல... புதுசா அறிமுகம் செய்த மஹிந்திரா கார்களுக்கு சூப்பர் டிமாண்ட் நிலவுது! இதோ ஆதாரம்!

அந்தவகையில், அண்மையில் எக்ஸ்யூ300 காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இன்னும் ஒரு சில மாதங்களில் இக்காரை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரும் பணிகளையும் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

போற போக்க பாத்தா மாருதியவே காலி பண்ணிடும் போல... புதுசா அறிமுகம் செய்த மஹிந்திரா கார்களுக்கு சூப்பர் டிமாண்ட் நிலவுது! இதோ ஆதாரம்!

இந்த எலெக்ட்ரிக் கார் தற்போது இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கும் டாடா நெக்ஸான் இவி, ஹூண்டாய் கோனா, எம்ஜி இசட்எஸ் இவி உள்ளிட்ட மின்சார கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வர உள்ளது. இதில், மஹிந்திரா நிறுவனம் ஐபி67 தர 39.4 kW பேட்டரி பேக்கையே பயன்படுத்தியிருக்கின்றது. இத்துடன், வெறும் 8.3 செகண்டுகளில் மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டக் கூடிய மின் மோட்டாரையும் மஹிந்திரா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தியிருக்கின்றது.

போற போக்க பாத்தா மாருதியவே காலி பண்ணிடும் போல... புதுசா அறிமுகம் செய்த மஹிந்திரா கார்களுக்கு சூப்பர் டிமாண்ட் நிலவுது! இதோ ஆதாரம்!

ஆகையால், மிக சிறந்த பயண அனுபவத்தை இக்காரில் பெற முடியும் என்பது தெளிவாக தெரிகின்றது. ரைடிங்கை கூடுதல் சுவாரஷ்யமானதாக மாற்ற வேண்டும் என்பதற்காக இந்த மின்சார காரில் ஃபன், ஃபாஸ்ட் மற்றும் ஃபியர்லெஸ் உள்ளிட்ட ரைடிங் மோட்களை நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இந்த காரில் வழங்கப்பட்டிருக்கும் பேட்டரி பேக்கை ஓர் முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 456 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra registered 168 percent high sales in september 2022
Story first published: Saturday, October 1, 2022, 21:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X