எவ்ளோ பெரிய ரவுடி ஸ்கெட்ச் போட்டாலும் இந்த காருல போகும்போது நம்ம தொடகூட முடியாது! ஸ்கார்பியோஎன் பாதுகாப்பானது!

ஸ்கார்பியோ என் கார் மோதல் ஆய்வில் மிக மிக சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேயே தரமான ரேட்டிங்கை அது பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நம்மில் பலர் விலை குறைவாக கிடைக்கிறது என்கிற காரணத்திற்காக தரமே (பாதுகாப்பே) இல்லாத கார்களை வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தகர டப்பாக்கள் மாதிரியான இந்த கார்கள் விற்கப்படும் நமது இந்திய சந்தையில் பலதரப்பட்ட அதீத பாதுகாப்பு திறன் மிக்க கார்களும் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, இந்திய நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா இந்த இரு நிறுவனங்களே இந்திய சந்தையில் அதிக எண்ணிக்கையில் அதிக பாதுகாப்பான கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற நிறுவனங்களாக இருக்கின்றன.

ஸ்கார்பியோ என்

இந்த நிலையில், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியலில் அந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பு ஒன்று இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மஹிந்திராவின் லேட்டஸ்ட் அறிமுகங்களில் ஒன்றாக ஸ்கார்பியோ என் இருக்கின்றது. இந்த எஸ்யூவி ரக காரே அதிக பாதுகாப்பான வாகனம் என்கிற மகுடத்தை தற்போது சூடியிருக்கின்றது. குளோபல் என்சிஏபி இடமிருந்தே இந்த பெருமைக்கு உரிய நற்சான்றை அது பெற்றிருக்கின்றது.

ஏற்கனவே மஹிந்திராவின் பிற எஸ்யூவி ரக கார்களான எக்ஸ்யூவி 700 மற்றும் எக்ஸ்யூவி 300 ஆகிய இரு கார் மாடல்களும் ஐந்து ஸ்டார் ரேட்டிங் பெற்ற காராக இருக்கின்றன. இதில், எக்ஸ்யூவி 300 காரே நிறுவனத்தின் முதல் ஐந்து நட்சத்திர ரேட்டிங் பெற்ற பாதுகாப்பான காராகும். இதேபோல், சேஃபர்ஸ் சாய்ஸ் (Safer Choice) எனும் மிக உயரிய விருதைப் பெற்ற காராக எக்ஸ்யூவி 700 இருக்கின்றது.

ஸ்கார்பியோ என்

இந்த விருதை குளோபல் என்சிஏபியிடம் இருந்தே எக்ஸ்யூவி 700 பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றின் வரிசையிலேயே தற்போது புதிதாக ஸ்கார்பியோ என் இணைந்துள்ளது. சைடு இம்பேக்ட், பாதசாரிகளுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் இந்த கார் ஐந்து ஸ்டார் ரேட்டிங்கைப் பெறுமளவிற்கு சிறப்பாக செயலாற்றியிருக்கின்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் ஐந்து ஸ்டார்களையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார்களையும் இந்த கார் பெற்றிருக்கின்றது.

இதை வைத்து பார்க்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் லேசாக பின் தங்கியிருப்பதை நம்மால் உணர முடிகின்றது. அதேவேலையில், பெரியவர்களுக்கு மிக சூப்பரான பாதுகாப்பை ஸ்கார்பியோ என் வழங்கும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. நெக்ஸ்ட் ஜென் பாடி பிளாட்பாரத்தை பயன்படுத்தியே இந்த காரை மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. ஸ்கார்பியோ என் அதிக பாதுகாப்பு ரேட்டிங் பெற்றதில் மிக முக்கியமான பங்களிப்பை இதுவே கொண்டிருக்கின்றது.

ஸ்கார்பியோ என்

இதுதவிர, ஆறு ஏர் பேக்குகள், டிரைவரின் தூக்கத்தைக் கண்டறியும் கருவி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஆன்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி, ஹில் டெசன்ட் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், வெயிக்கிள் டைனமிக் கன்ட்ரோல் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுபோதாதென்று ரோல் ஓவர் மிடிகேசன், வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், கேமிரா, பார்க்கிங் சென்சார்கள், இ கால் சிஸ்டம் மற்றும் எஸ்ஓஎஸ் சுவிட்ச் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுமாதிரியான அதிகளவு பாதுகாப்பு அம்சங்களை ஸ்கார்பியோ என் தாங்கியிருக்கின்ற காரணத்தினாலேயே தற்போது ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை அது பெற்றிருக்கின்றது. இது உலகளவில் மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்று தரும் வகையில் அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். இசட்2, இசட்4, இசட்6, இசட்8 மற்றும் இசட்8எல் ஆகியவையே அவை ஆகும். ரூ. 11.99 லட்சம் தொடங்கி ரூ. 23.90 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

மேலும், இந்த விலை முதல் 25 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என மஹிந்திரா அறிவித்துள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை 6 மற்றும் 7 இருக்கைகள் தேர்விலும், பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் தேர்விலும், மேனுவல் மற்றும் தானியங்கி ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகளிலும் விற்பனைக்குப் பெற்றுக் கொள்ள முடியும். இக்காரின் பெட்ரோல் தேர்வில் 2.0 லிட்டர் டிஜிடிஐ எம்ஸ்டாலியன் மோட்டாரும், 2.2 லிட்டர் எம்ஹாவ்க் மோட்டாரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, December 12, 2022, 18:35 [IST]
English summary
Mahindra scorpio n 5 star rating
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+