முடியப்போகிறதா ஃபார்ச்சூனர் சாம்ராஜ்ஜியம்? ரூ30 லட்சம் கம்மி ரேட்ல அதை விட சூப்பர் காருக்கு கிடைக்கும் மவுசு!

ரூ57 லட்சம் கொடுத்து டொயோட்டா ஃபார்ச்சூனர் வாங்குவதை விட ரூ27 லட்சம் கொடுத்து மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை வாங்கவே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இது ஏன்? அப்படி என்ன இரண்டு காரிலும் இருக்கிறது? இதன் ஒப்பீட்டை இங்கே விரிவாகக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், நடிகர், நடிகைகள் எனப் பலர் விரும்பி வாங்கும் கார் டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் கார் இந்த கார் லுக்கிலும் சரி வசதிகளிலும் சரி மிகச் சிறப்பான காராக இருக்கிறது என்பதால் இந்த காருக்கு ஏகப்பட்ட மவுசு இருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த கார் விற்கும் விலைக்கு இந்த காரில் உள்ள அம்சங்கள் மிகக் குறைவு என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்த காருக்கு பதிலாக வேறு எஸ்யூவி காரை வாங்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

முடியப்போகிறதா ஃபார்ச்சூனர் சாம்ராஜ்ஜியம்? ரூ30 லட்சம் கம்மி ரேட்ல அதை விட சூப்பர் காருக்கு கிடைக்கும் மவுசு!

தற்போது மார்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு மாற்றாக மக்கள்
அதிகம் விரும்பும் கார் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என் கார். இந்த காரை மக்கள் அதிகம் விரும்பி வருகிறனர். இந்தியாவில் தற்போது அதிக காத்திருப்பு காலம் கொண்ட எஸ்யூவி காராக இந்த ஸ்கார்பியோ என் கார் இருக்கிறது. அதே நேரம் இந்தியாவில் ஃபார்ச்சூனர் காரை பொருத்தவரை ஒவ்வொரு மாதமும் சுமார் 2 ஆயிரம் கார் விற்பனையாகிறது. சரி தற்போது இந்த இரண்டு கார்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காணலாம்

விலை

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் விற்பனையைப் பொருத்தவரை டாப் மாடல் கார் ரூ27 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதுவே டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் டாப் மாடல் கார் ரூ57 லட்சம் விற்பனையாகிறது. அதாவது விலையில் சுமார் ரூ30 லட்சம் வரை வித்தியாசம் இருக்கிறது. இரண்டு காரிலும் பெட்ரோல்/டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. அதே போல இரண்டு காரிலும் 4X4 மற்றும் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இருக்கிறது.

அளவுகள்

இந்த காரின் அளவில் ஒவ்வொரு வித்திலும் ஒவ்வொரு கார் சிறப்பாக இருக்கிறது. நீளத்தைப் பொருத்தவரை ஃபார்ச்சூனர் கார் நீளம் அதிகமாகவும், அகலம் மற்றும் உயரத்தில் ஸ்கார்பியோ என் கார் அதிகமாகவும் உள்ளது. வீல் பேஸ் வகையிலும் ஸ்கார்பியோ என் கார் தான் அதிக வீல் பேஸை கொண்ட காராக இருக்கிறது. அளவுகளில் இரண்டு வாகனங்களும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்பதால் இதைப் பெரிதாக நாம் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

இன்ஜின் பவர்

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை பொருத்தவரை 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இந்த இன்ஜின் 200 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும், இந்த இன்ஜின்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் டீசல் இன்ஜினை பொருத்தவரை 130 பிஎச்பி மற்றும் 172 பிஎச்பி என்ற 2 பவர் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் 4X4 ஆப்ஷனும் உள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர் காரும் 2 இன்ஜின் ஆப்ஷன் உடன் இருக்கிறது. 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்த கார் 166 பிஎஸ் பவரையும் மற்றும் 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அடுத்ததாக 2.8 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் கார் 204 பிஎஸ் பவரையும் 500 என்எம் டார்க் திறனையும் வெளியிடும்.

அம்சங்கள்

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை பொருத்தவரை ஏராளமான அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. 8.0 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12 ஸ்பீக்கம் சோனி சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜிங், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், அலெக்ஸா சப்போர்ட், 70க்கும் அதிகமான கனெக்டெட் கார் தொழிற்நுட்பம், பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்கள், எலெக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன், ரோல் ஓவர் மிட்டிகேஷன், இசிஎஸ் மற்றும் டிரைவர் ஸ்லீப் டிடெக்ஷன் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை பொருத்தவரை இந்த அளவிற்குக் கூட அம்சங்கள் கிடையாது. இந்த காரில் 11 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டசம், வென்டிலேட்டட் சீட்கள், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், 8.0 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவிங் மோட்கள், பாதுகாப்பிற்காக 7 ஏர்பேக்குகள், இசிஎஸ், டவுண்ஹில் அசிஸ்ட் மற்றும் ரியர் கேமரா ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

இரண்டு காரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கிறது. சொல்லப்போனால் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரைவிட அதிகமான அம்சங்கள் எல்லாம் இருக்கிறது. இதனால் மக்கள் பலர் ஃபாச்சூனர் காருக்கு மாற்றாக மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை பார்க்கத் துவங்கிவிட்டனர். மேலும் ஃபார்ச்சூனரை விலையில் 2 ஸ்கார்பியோ என் கார் வாங்கிவிடலாம் என்பதால் மக்கள் ஸ்கார்பியோ என் காரை அதிகம் விரும்புகின்றனர். இந்த இரண்டு காரில் நீங்கள் விரும்புவது எது? கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Saturday, December 24, 2022, 9:54 [IST]
English summary
Mahindra Scorpio n and Toyota Fortuner price and features comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+