ஸ்கார்பியோ என் காரில் தானியங்கி தேர்வு அறிமுகம்... விற்பனை பல மடங்கு பிச்சுக்கபோகுது!

மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio-N) காரில் தானியங்கி தேர்வு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஸ்கார்பியோ என் காரில் தானியங்கி தேர்வு அறிமுகம்... இதன் ஆரம்ப விலை எவ்வளவு?.. விற்பனை பல மடங்கு பிச்சுக்கபோகுது!

மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனம் அண்மையில் அதன் 'ஸ்கார்பியோ' (Scorpio) காரின் புதிய தலைமுறை வெர்ஷனை 'ஸ்கார்பியோ என்' (Scorpio-N) என்கிற பெயரில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அப்போது, மேனுவல் வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டநிலையில், தற்போது, அக்காரின் தானியங்கி கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட வேரியண்டுகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

ஸ்கார்பியோ என் காரில் தானியங்கி தேர்வு அறிமுகம்... இதன் ஆரம்ப விலை எவ்வளவு?.. விற்பனை பல மடங்கு பிச்சுக்கபோகுது!

இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டி வந்த 'ஸ்கார்பியோ-என்' (Scorpio-N) காரின் அறிமுகத்தை மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனம் மிக சமீபத்தில் அரங்கேற்றியது. இந்த கார் மாடலிலேயே தற்போது அந்நிறுவனம் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4 வீல் டிரைவ் தேர்வுகளை இன்று (ஜூலை 22) விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

ஸ்கார்பியோ என் காரில் தானியங்கி தேர்வு அறிமுகம்... இதன் ஆரம்ப விலை எவ்வளவு?.. விற்பனை பல மடங்கு பிச்சுக்கபோகுது!

ஸ்கார்பியோ என் காரில் இந்த வசதிகள் விற்பனைக்குக் கொண்டு வராமல் இருந்தது அக்காரின் பிரியர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் பொருட்டு நிறுவனம் ரூ. 15.45 லட்சம் ஆரம்ப விலையில் ஸ்கார்பியோ என் தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஸ்கார்பியோ என் காரில் தானியங்கி தேர்வு அறிமுகம்... இதன் ஆரம்ப விலை எவ்வளவு?.. விற்பனை பல மடங்கு பிச்சுக்கபோகுது!

இந்த விலை, மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட தேர்வுகளைக் காட்டிலும் ரூ. 1.96 லட்சம் மட்டுமே அதிகம் ஆகும். அறிமுகத்தின் காரணமாக இந்த விலையில் ஸ்கார்பியோ என் காரின் தானியங்கி டிரான்ஸ்மிஷன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், முதல் 25 ஆயிரம் புக்கிங்குகளுக்கு மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் விலை பொருந்தும் என்றும் அது தெரிவித்துள்ளது.

ஸ்கார்பியோ என் காரில் தானியங்கி தேர்வு அறிமுகம்... இதன் ஆரம்ப விலை எவ்வளவு?.. விற்பனை பல மடங்கு பிச்சுக்கபோகுது!

ஆகையால், 25 ஆயிரம் புக்கிங்குகளைக் கடந்த பின்னர் நிறுவனம் ஸ்கார்பியோ என் காரின் மேனுவல் டிரான்ஸ்மிஷனின் விலையை உயர்த்தலாம் என தெரிகின்றது. மஹிந்திரா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே புதிய ஸ்கார்பியோ என் காருக்கு இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.

ஸ்கார்பியோ என் காரில் தானியங்கி தேர்வு அறிமுகம்... இதன் ஆரம்ப விலை எவ்வளவு?.. விற்பனை பல மடங்கு பிச்சுக்கபோகுது!

இந்த மாதிரியான சூழலிலேயே தானியங்கி தேர்வை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. விற்பனைக்குக் கொண்டு வந்த கையோடு விலையுயர்விற்கான தகவலையும் சூசகமாக தெரிவித்துள்ளது. வரும் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 15 நள்ளிரவு வரை மட்டுமே இக்காருக்கான புக்கிங்கள் ஏற்கப்படும் என மஹிந்திரா அறிவித்துள்ளது. ஆகையால், புக்கிங் தளம் சூடுபிடித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்கார்பியோ என் காரில் தானியங்கி தேர்வு அறிமுகம்... இதன் ஆரம்ப விலை எவ்வளவு?.. விற்பனை பல மடங்கு பிச்சுக்கபோகுது!

மஹிந்திரா ஸ்கார்பியோ என் ஐந்து விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இசட்2 (Z2), இசட்4 (Z4), இசட்6 (Z6), இசட்8 (Z8) மற்றும் இசட்8எல் (Z8L) ஆகியவையே அந்த ட்ரிம் தேர்வுகளாகும். இவற்றில், இசட்2 ட்ரிம்மைத் தவிர மற்ற அனைத்து ட்ரிம்களிலும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு விற்பனைக்குக் கிடைக்கும். ஆமாங்க, இந்த ட்ரிம்மில் மட்டும்தான் ஏடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படவில்லை.

ஸ்கார்பியோ என் காரில் தானியங்கி தேர்வு அறிமுகம்... இதன் ஆரம்ப விலை எவ்வளவு?.. விற்பனை பல மடங்கு பிச்சுக்கபோகுது!

மஹிந்திரா நிறுவனம் அதன் ஸ்கார்பியோ என் காரின் 4 வீல் டிரைவ் தேர்வுகளில் 4எக்ஸ்ப்ளோர் (4XPLOR) எனப்படும் இன்டலிஜன்ட் டெர்ரயின் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி (intelligent terrain management technology)-யை வழங்கியிருக்கின்றது. இந்த அம்சத்துடன் கிடைக்கும் ஸ்கார்பியோ என் வழக்கமான 2 வீல் டிரைவ் ஸ்கார்பியோவைக் காட்டிலும் ரூ. 2.45 லட்சம் அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஸ்கார்பியோ என் காரில் தானியங்கி தேர்வு அறிமுகம்... இதன் ஆரம்ப விலை எவ்வளவு?.. விற்பனை பல மடங்கு பிச்சுக்கபோகுது!

இந்த சூப்பரான 4 வீல் டிரைவ் அம்சம் ஸ்கார்பியோ என் காரின் இசட்4, இசட்8 மற்றும் இசட்8எல் டீசல் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட தேர்வில் இந்த வசதியை மஹிந்திரா அறிமுகம் செய்யவில்லை. இதைத்தொடர்ந்து, தானியங்கி டிரான்ஸ்மிஷனாக, எய்சின் 6 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் (AISIN 6-speed automatic transmission) கருவியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்கார்பியோ என் காரில் தானியங்கி தேர்வு அறிமுகம்... இதன் ஆரம்ப விலை எவ்வளவு?.. விற்பனை பல மடங்கு பிச்சுக்கபோகுது!

இத்துடன், கூடுதலாக 4 வீல் டிரைவ் அம்சம் கொண்ட தேர்வுகளில் 'ஷிஃப்ட் ஆன் ஃப்ளை' (Shift on fly) சிஸ்டம் கூடுதல் அம்சமாக வழங்கப்பட்டிருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ என் காரின் டெலிவரி பணிகள் வெகு விரைவில் தொடங்க இருக்கின்றது. செப்டம்பர் 26 இல் இருந்து இந்த பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்கார்பியோ என் காரில் தானியங்கி தேர்வு அறிமுகம்... இதன் ஆரம்ப விலை எவ்வளவு?.. விற்பனை பல மடங்கு பிச்சுக்கபோகுது!

முதலில் 20 ஆயிரம் யூனிட்டுகளை டெலிவரிக் கொடுக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் அத்தனை யூனிட்டுகளும் டெலிவரி வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஸ்கார்பியோ என் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் ஆகிய இரு விதமான மோட்டார்தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஸ்கார்பியோ என் காரில் தானியங்கி தேர்வு அறிமுகம்... இதன் ஆரம்ப விலை எவ்வளவு?.. விற்பனை பல மடங்கு பிச்சுக்கபோகுது!

மஹிந்திரா ஸ்கார்பியோ தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வின் விலை விபரம்:

மஹிந்திரா ஸ்கார்பியோ என் தானியங்கி தேர்வுகள் விலை விபரம்
Z4 AT 7S Petrol ₹15.45 Lakh
Z8 AT 7S Petrol ₹18.95 Lakh
Z8L AT 7S Petrol ₹20.95 Lakh
Z8L AT 6S Petrol ₹21.15 Lakh
Z4 AT 7S Diesel ₹15.95 Lakh
Z4 4WD MT 7S Diesel ₹16.44 Lakh
Z6 AT 7S Diesel ₹16.95 Lakh
Z8 4WD MT 7S Diesel ₹19.94 Lakh
Z8 AT 7S Diesel ₹19.45 Lakh
Z8L 4WD MT Diesel ₹21.94 Lakh
Z8L AT 7S Diesel ₹21.45 Lakh
Z8L AT 6S Diesel ₹21.65 Lakh
Z8 4WD AT 7S Diesel ₹21.90 Lakh
Z8L 4WD AT 7S Diesel ₹23.90 Lakh

More from DriveSpark

Article Published On: Friday, July 22, 2022, 10:51 [IST]
English summary
Mahindra scorpio n automatic launched in india at inr 15 45 lakhs
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+