சிட்டியில் ஓட்டும்போது, ஹைவேவில் ஓட்டும்போது ஸ்கார்பியோ என் எவ்வளவு மைலேஜ் தரும்? இதோ உங்கள் கேள்விக்கான பதில்

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், புத்தம் புதிய ஸ்கார்பியோ-என் காரை மஹிந்திரா நிறுவனம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

Recommended Video

Mahindra Scorpio-N Tamil Review | மூன்றாவது வரிசை இருக்கை, ஆஃப் ரோடு, டீசல் இன்ஜின், ஆட்டோமேட்டிக்

இந்த சூழலில், நெரிசல் மிகுந்த நகர சாலையில் ஓட்டும்போதும், நெடுஞ்சாலையில் ஓட்டும்போதும் ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N) கார் எவ்வளவு மைலேஜ் தரும் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிட்டியில் ஓட்டும்போது, ஹைவேவில் ஓட்டும்போது ஸ்பார்கியோ என் எவ்வளவு மைலேஜ் தரும்?.. இதோ உங்கள் கேள்விக்கான பதில்!

மஹிந்திரா நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய ஸ்கார்பியோ என் காரின் மைலேஜ் விபரங்கள் வெளிவந்திருக்கின்றன. நகரத்தில் வழங்கும் மைலேஜ் திறன் மற்றும் ஹைவே-வில் வழங்கும் மைலேஜ் திறன் என இரண்டின் விபரங்களும் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

சிட்டியில் ஓட்டும்போது, ஹைவேவில் ஓட்டும்போது ஸ்பார்கியோ என் எவ்வளவு மைலேஜ் தரும்?.. இதோ உங்கள் கேள்விக்கான பதில்!

இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த வாகனங்களில் இந்த புதிய தலைமுறை 'மஹிந்திரா ஸ்கார்பியோ என்' (Mahindra Scorpio-N) காரும் ஒன்று. இந்த வாகனத்தை கடந்த ஜூன் 27 ஆம் அன்றே இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது, மஹிந்திரா. தற்போது ஏகபோகமான டிமாண்டை இக்கார் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

சிட்டியில் ஓட்டும்போது, ஹைவேவில் ஓட்டும்போது ஸ்பார்கியோ என் எவ்வளவு மைலேஜ் தரும்?.. இதோ உங்கள் கேள்விக்கான பதில்!

இசட்2, இசட்4, இசட்6, இசட்8 மற்றும் இசட்8எல் ஆகிய ஐந்து விதமான ட்ரிம்களிலும், பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்கிற இருவிதமான கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் புதிய ஸ்கார்பியோ என் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 11.99 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

சிட்டியில் ஓட்டும்போது, ஹைவேவில் ஓட்டும்போது ஸ்பார்கியோ என் எவ்வளவு மைலேஜ் தரும்?.. இதோ உங்கள் கேள்விக்கான பதில்!

ஸ்கார்பியோ என் டீசல் காரின் மைலேஜ் விபரம்:

இதில், டீசல் எஞ்ஜின் கொண்ட மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் மைலேஜ் விபரத்தை முதலில் பார்க்கலாம். ரியல் உலகில் இந்த வெர்ஷன் 12.16 கிமீ தொடங்கி 15.50 கிமீ வரை மைலேஜ் தருவதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நகர்ப்புற சாலைகளில் வைத்து சோதித்து பார்த்ததில் இந்த வாகனம் 12.16 கிமீ தொடங்கி 12.80 கிமீ வரையிலும், அதுவே, ஹைவேவில் 14.64 கிமீ தொடங்கி 15.50 கிமீ வரையிலும் மைலேஜை தந்திருக்கின்றது.

சிட்டியில் ஓட்டும்போது, ஹைவேவில் ஓட்டும்போது ஸ்பார்கியோ என் எவ்வளவு மைலேஜ் தரும்?.. இதோ உங்கள் கேள்விக்கான பதில்!

ஸ்கார்பியோ என் பெட்ரோல் காரின் மைலேஜ் விபரம்:

டீசல் மோட்டாரைத் தொடர்ந்து 2.0 லிட்டர் எம்-ஸ்டாலியன் பெட்ரோல் மோட்டார் தேர்வில் கிடைக்கும் ஸ்கார்பியோ என் காரையும் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கின்றனர். இந்த வெர்ஷன் 7.9 கிமீ தொடங்கி 9.4 கிமீ வரையில் மட்டுமே மைலேஜை வழங்கியிருக்கின்றது. அதாவது, நகர்புற சாலையில் 7.9 கி.மீட்டரையும்., நெடுஞ்சாலையில் 9.4 கிமீ மைலேஜையும் அக்கார் வழங்கியிருக்கின்றது.

சிட்டியில் ஓட்டும்போது, ஹைவேவில் ஓட்டும்போது ஸ்பார்கியோ என் எவ்வளவு மைலேஜ் தரும்?.. இதோ உங்கள் கேள்விக்கான பதில்!

இதுமாதிரியான மைலேஜ் திறன்களுடனேயே ஸ்கார்பியோ விற்பனைக்கு வந்திருக்கின்றது. புதிய ஸ்கார்பியோ என் தற்போது அதன் முந்தைய வெர்ஷன் ஸ்கார்பியோவைக் காட்டிலும் பல மடங்கு அதிக அம்சங்களைக் கொண்ட வாகனமாக தயார் செய்யப்பட்டிருக்கின்றது.

சிட்டியில் ஓட்டும்போது, ஹைவேவில் ஓட்டும்போது ஸ்பார்கியோ என் எவ்வளவு மைலேஜ் தரும்?.. இதோ உங்கள் கேள்விக்கான பதில்!

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் அதிக சொகுசு வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் அடங்கிய வாகனமாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி பெரிய உருவ தோற்றத்தைக் கொண்ட வாகனமாகவும் அது உருவாகியிருக்கின்றது. இதனால்தான் இக்காரை மஹிந்திரா நிறுவனம் 'பிக் டாடி' என செல்லமாக அழைக்கின்றது.

சிட்டியில் ஓட்டும்போது, ஹைவேவில் ஓட்டும்போது ஸ்பார்கியோ என் எவ்வளவு மைலேஜ் தரும்?.. இதோ உங்கள் கேள்விக்கான பதில்!

இந்த பெயருக்கு ஏற்ப ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் தேர்வுகளுடன் ஸ்கார்பியோ என் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 17.78 செ.மீ., அளவுள்ள க்ளஸ்டர் மற்றும் 20.30 செ.மீ., அளவுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவையும் ஸ்கார்பியோ என் காரில் வழங்கப்பட்டுள்ளன. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே/ ஆன்ட்ராய்டு ஆட்டோ/ அலெக்ஸா ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிட்டியில் ஓட்டும்போது, ஹைவேவில் ஓட்டும்போது ஸ்பார்கியோ என் எவ்வளவு மைலேஜ் தரும்?.. இதோ உங்கள் கேள்விக்கான பதில்!

இதுதவிர, 70க்கும் மேற்பட்ட கார் இணைப்பு வசதி, பெரிய சன்ரூஃப், ஒயர்லெஸ் சார்ஜிங், 3டி சரவுண்ட் வசதிக் கொண்ட 12 ஸ்பீக்கர்கள் கொண்ட சோனி சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட கூடுதல் சிறப்பு வசதிகளும் ஸ்கார்பியோ என்-இல் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு அம்சங்களாக 6 ஆறு ஏர் பேக்குகள், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஹில் டிசன்ட் அசிஸ்ட், டிராக்சன் கன்ட்ரோல், டிரைவரின் தூக்கத்தைக் கண்டறியும் அம்சம் மற்றும் பார்க்கிங் கேமிரா உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

Source: car wale

More from DriveSpark

Article Published On: Monday, July 11, 2022, 11:11 [IST]
English summary
Mahindra scorpio n diesel and petrol automatic real world mileage revealed
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+