'பிக் டாடி' மஹிந்திரா ஸ்கார்பியோ என் அறிமுகம்! விலை எவ்ளோ தெரிஞ்சா நிச்சயம் புக் பண்ண விரும்புவீங்க!

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்பியோ என் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிக் டாடி மஹிந்திரா ஸ்கார்பியோ என் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவோ ஒரு காரை புக் பண்ணிடுவீங்க!

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா 'ஸ்கார்பியோ என்' கார் இந்திய சந்தையில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. பல நாட்களாக இக்கார்குறித்த முக்கிய தகவல்கள் மற்றும் டீசர் படங்கள் மட்டுமே வெளியாகி வந்தநிலையில், இன்று (ஜூன் 27) புதிய ஸ்கார்பியோ என் காரை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தது.

பிக் டாடி மஹிந்திரா ஸ்கார்பியோ என் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவோ ஒரு காரை புக் பண்ணிடுவீங்க!

வெளியீட்டைத் தொடர்ந்து காருக்கான புக்கிங் பணிகள் எப்போது தொடங்கும் என்கிற தகவலையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை 30 ஆம் தேதி முதலே காருக்கான புக்கிங் பணிகள் நாடு முழுவதும் தொடங்கப்பட இருக்கின்றது. ஆன்லைன் மற்றும் மஹிந்திரா கார் விற்பனையாளர்கள் வாயிலாக இந்த பணிகள் தொடங்கப்பட இருக்கின்றது.

பிக் டாடி மஹிந்திரா ஸ்கார்பியோ என் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவோ ஒரு காரை புக் பண்ணிடுவீங்க!

இதை அடுத்து, டெலிவரி பணிகள் அடுத்த ஒரு சில தினங்களிலேயே தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், துள்ளியமான தேதி பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ என் காரை தரமான வாகனமாக உருவாக்கியிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டும் எனில் தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோவைக் காட்டிலும் பல மடங்கு மேம்பட்ட வாகனமாக அதனை உருவாக்கியிருக்கின்றது.

பிக் டாடி மஹிந்திரா ஸ்கார்பியோ என் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவோ ஒரு காரை புக் பண்ணிடுவீங்க!

வெளிப்புறத் தோற்றம் மற்றும் உட்புற தோற்றம் என அனைத்தும் மாற்றப்பட்டிருக்கின்றது. ஏன், முகப்பு மற்றும் பின் பகுதியிலும்கூட மிக பெரிய மாற்றங்களை மஹிந்திரா நிறுவனம் நிகழ்த்தியிருக்கின்றது. புதிய மாற்றங்களால் புதிய ஸ்கார்பியோ அனைத்து எஸ்யூவி கார்களுக்கும் தந்தையைப் போல் மாறியிருக்கின்றது. இதனால்தான் மஹிந்திரா நிறுவனம்கூட இக்காரை 'பிக் டாடி' என அழைத்து வருகின்றது.

பிக் டாடி மஹிந்திரா ஸ்கார்பியோ என் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவோ ஒரு காரை புக் பண்ணிடுவீங்க!

புதிய ஸ்கார்பியோ என் ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். இசட்2, இசட்4, இசட்6, இசட்8 மற்றும் இசட்8எல் ஆகிய ட்ரிம்களிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் அல்கஸார், டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார் மாடல்களுக்கே போட்டியாக விற்பனைக்கு வர உள்ளது.

பிக் டாடி மஹிந்திரா ஸ்கார்பியோ என் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவோ ஒரு காரை புக் பண்ணிடுவீங்க!

மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ காரில் ஆர்18 டைமண்ட் கட் அலாய் வீலை பயன்படுத்தியிருக்கின்றது. இது எஸ்யூவி காரை மிக உயரமான வாகனம் காட்சியளிக்கச் செய்கின்றது. சிக்னேச்சர் லைட்டுகள் காரின் முகப்பு பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. டபுள் பேரல் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் ஸ்டிங் ரக டிஆர்எல்-களே முன் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பிக் டாடி மஹிந்திரா ஸ்கார்பியோ என் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவோ ஒரு காரை புக் பண்ணிடுவீங்க!

தொடர்ந்து, எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள், காரின் முரட்டுத் தனமான தோற்றத்தை மெருகேற்றும் வகையில் ஃபியர்ஸ் கிளாடிங், குரோம் பூச்சுக் கொண்ட அகலமான க்ரில், அதிக சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கக் கூடிய இருக்கை ஆகியவையும் காரில் வழங்கப்பட்டிருக்கும். இந்த இருக்கை ரிச் காஃபி கருப்பு நிறத்திலான லெதரால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மேலும், இந்த இருக்கைகளை ஆறு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளவும் முடியும்.

பிக் டாடி மஹிந்திரா ஸ்கார்பியோ என் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவோ ஒரு காரை புக் பண்ணிடுவீங்க!

காரின் உட்பகுதியில் அட்ரினோ-எக்ஸ் திரை கொடுக்கப்பட்டுள்ளது. காருக்குள் இடம் பெற்றிருக்கும் மிக முக்கியமான அம்சங்களில் முதன்மையான ஒன்று இதுவாகும். 17.78 செமீ க்ளஸ்டர் மற்றும் 20.30 செமீ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமே புதிய ஸ்கார்பியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திரை ஆப்பிள் கார் ப்ளே/ ஆன்ட்ராய்டு ஆட்டோ/ அலெக்ஸா ஆகிய வசதிகள் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

பிக் டாடி மஹிந்திரா ஸ்கார்பியோ என் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவோ ஒரு காரை புக் பண்ணிடுவீங்க!

தொடர்ந்து, 3டி சரவுண்ட் வசதிக் கொண்ட 12 ஸ்பீக்கர்கள் கொண்ட சோனி சவுண்ட் சிஸ்டம், பெரிய சன்ரூஃப், ஒயர்லெஸ் சார்ஜிங், அலெக்ஸாவின் குரல் கட்டளை வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, கூடுதல் சிறப்பு வசதியாக ஸ்கார்பியோ என் காரில் 70க்கும் மேற்பட்ட கார் இணைப்பு வசதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றது.

பிக் டாடி மஹிந்திரா ஸ்கார்பியோ என் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவோ ஒரு காரை புக் பண்ணிடுவீங்க!

பாதுகாப்பு அம்சங்களாக, 6 ஆறு ஏர் பேக்குகள், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஹில் டிசன்ட் அசிஸ்ட், டிராக்சன் கன்ட்ரோல், டிரைவரின் தூக்கத்தைக் கண்டறியும் அம்சம் மற்றும் பார்க்கிங் கேமிரா உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. ஸ்கார்பியோ இனி இரு விதமான பெயர்களில் விற்பனைக்குக் கிடைக்கும் என தகவல் தெரிவிக்கின்றன.

பிக் டாடி மஹிந்திரா ஸ்கார்பியோ என் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவோ ஒரு காரை புக் பண்ணிடுவீங்க!

அதாவது, இந்திய சந்தையில் நீண்ட காலமாக விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் ஸ்கார்பியோவை கணிசமான மாற்றங்களுடன் புதிய பெயரில் விற்பனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. 'ஸ்கார்பியோ கிளாசிக்' என்ற பெயரிலேயே அது விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஆகையால், புதிய 'ஸ்கார்பியோ என்' மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் ஆகிய இரு பெயர்களில் அது விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிகின்றது.

பிக் டாடி மஹிந்திரா ஸ்கார்பியோ என் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவோ ஒரு காரை புக் பண்ணிடுவீங்க!

தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோவைக் காட்டிலும் பெரிய தோற்றத்தில் புதிய ஸ்கார்பியோ என் உருவாக்கப்பட்டுள்ளது. 4,662 மிமீ நீளத்திலும், 1,917 மிமீ அகலம் மற்றும் 2,750 மிமீட்டர் வீல் பேஸிலும் புதிய ஸ்கார்பியோ உருவாக்கப்பட்டுள்ளது. புதிய டாடா சஃபாரியைவிட பெரியது என கூறப்படுகின்றது.

பிக் டாடி மஹிந்திரா ஸ்கார்பியோ என் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவோ ஒரு காரை புக் பண்ணிடுவீங்க!

மேலும், இந்த காரை ஆறு மற்றும் 7 இருக்கைகள் தேர்வில் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது. தொடர்ந்து, 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் மற்றும் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் பெட்ரோல் என்ற இரு விதமான மோட்டார் தேர்வுகளிலும் புதிய ஸ்கார்பியோ என் விற்பனைக்குக் கிடைக்கும். இசட்2, இசட்4, இசட்6, இசட்8 மற்றும் இசட்8எல் ஆகிய ட்ரிம்களுடன் சேர்த்து மற்றும் 40 விதமான வேரியண்டுகளிலும் புதிய ஸ்கார்பியோவை இந்தியர்களால் வாங்கிக் கொள்ள முடியும்.

பிக் டாடி மஹிந்திரா ஸ்கார்பியோ என் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவோ ஒரு காரை புக் பண்ணிடுவீங்க!

இதில், பெட்ரோல் மோட்டார் 149.14 கிலோவாட் பவர் மற்றும் 370 என்எம் டார்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதேபோல் டீசல் மோட்டார் 128.6 கிலோவாட் பவர் மற்றும் 370 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. 6 எம்டி மற்றும் 6ஏடி ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. ஐந்து விதமான நிற தேர்வுகளில் ஸ்கார்பியோ என் கார் கிடைக்க இருக்கின்றது. டாஸ்லிங் சில்வர், டீப் ஃபாரஸ்ட், கிரான்ட் கேன்யான், எவரெஸ்ட் ஒயிட், நபோலி கருப்பு, ரெட் ரேஜ் மற்றும் ராயல் கோல்டு ஆகிய நிற தேர்வுகளிலேயே அது கிடைக்கும்.

பிக் டாடி மஹிந்திரா ஸ்கார்பியோ என் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவோ ஒரு காரை புக் பண்ணிடுவீங்க!

காரின் விலை விபரம்:

Mahindra Scorpio-N Price
Variant Petrol MT Diesel MT
Z2 ₹11.99 Lakh ₹12.49 Lakh
Z4 ₹13.49 Lakh ₹13.99 Lakh
Z6 - ₹14.99 Lakh
Z8 ₹16.99 Lakh ₹17.49 lakh
Z8L ₹18.99 Lakh ₹19.49 Lakh

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 27, 2022, 19:36 [IST]
English summary
Mahindra scorpio n launched in india at inr 11 99
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+