கம்பீரமான தோற்றத்தில் ஷோரூம்களில் காட்சியளிக்கும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என்!! ஒவ்வொன்றாக வர துவங்கின

மஹிந்திராவின் புத்தம் புதிய ஸ்கார்பியோ என் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதுதொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கம்பீரமான தோற்றத்தில் ஷோரூம்களில் காட்சியளிக்கும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என்!! ஒவ்வொன்றாக வர துவங்கின

மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஸ்கார்பியோ என் காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. மேலும், அந்த நாளே இந்த காரின் மேனுவல் வேரியண்ட்களுக்கான விலைகளும் அறிவிக்கப்பட்டன. இதன்படி ரூ.11.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் புதிய ஸ்கார்பியோ என் மாடல் விற்பனை செய்யப்பட உள்ளது.

கம்பீரமான தோற்றத்தில் ஷோரூம்களில் காட்சியளிக்கும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என்!! ஒவ்வொன்றாக வர துவங்கின

விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோவின் புதிய தலைமுறை வெர்சனாக களமிறக்கப்பட்டுள்ள இதன் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களின் விலைகள் வருகிற ஜூலை 21ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து இந்த காருக்கான முன்பதிவுகள் வருகிற ஜூலை 30இல் இருந்து துவங்கவுள்ளன. இதற்கிடையில்தான் புதிய ஸ்கார்பியோ என் கார்கள் மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப் மையங்களை வந்தடைய துவங்கியுள்ளன.

கம்பீரமான தோற்றத்தில் ஷோரூம்களில் காட்சியளிக்கும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என்!! ஒவ்வொன்றாக வர துவங்கின

Source: Carwale

இதுதொடர்பாக கார்வாலே செய்திதளத்தின் மூலம் கிடைத்துள்ள படங்களை இங்கே காணலாம். இந்த படங்களில், முற்றிலுமாக பளபளப்பான அடர் கருப்பு நிறத்தில் ஸ்கார்பியோ என் கார் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்கார்பியோ காரின் டெஸ்ட் ட்ரைவ்களை சமீபத்தில்தான் மஹிந்திரா நிறுவனம் துவங்கியிருந்தது. இதனாலேயே ஒவ்வொரு ஸ்கார்பியோ என் கார்களாக ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன.

கம்பீரமான தோற்றத்தில் ஷோரூம்களில் காட்சியளிக்கும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என்!! ஒவ்வொன்றாக வர துவங்கின

மேலும், முன்பதிவுகள் இன்னும் துவங்கப்படாவிடினும் வாடிக்கையாளர்கள் ஸ்கார்பியோ என் மாடலின் தங்களது விருப்பமான வேரியண்ட்கள், நிறத்தேர்வுகள், என்ஜின் & டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை இப்போதே தேர்வு செய்து வைத்து கொள்வதற்கு வசதியாக ‘ADD TO CART' வசதியினையும் மஹிந்திரா புதியதாக பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. அதுமட்டுமின்றி ஜூலை 30இல் துவங்கும் முன்பதிவுகளில் ஸ்கார்பியோ-என் மாடலை முன்பதிவு செய்வோர் அடுத்த 2 வாரங்களில் தேவைப்பட்டால் தேர்வு செய்த தேர்வுகளை மாற்றியமைத்து கொள்ளலாம்.

கம்பீரமான தோற்றத்தில் ஷோரூம்களில் காட்சியளிக்கும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என்!! ஒவ்வொன்றாக வர துவங்கின

இந்த காரின் டெலிவிரிகள் வருகிற தீபாவளி பண்டிகை காலத்தின்போது துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ என் மாடலை இசட்2, இசட்4, இசட்6 மற்றும் இசட்8எல் என 5 விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த எஸ்யூவி காரின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் 4x4 ட்ரைவ் அமைப்பையும் வழங்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

கம்பீரமான தோற்றத்தில் ஷோரூம்களில் காட்சியளிக்கும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என்!! ஒவ்வொன்றாக வர துவங்கின

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், அலெக்ஸா, ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உதவியுடன் 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு, எலக்ட்ரிக் சன்ரூஃப், பவர் ஓட்டுனர் இருக்கை, பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி துளைகள், இரட்டை-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், 12-ஸ்பீக்கர் சோனி சவுண்ட் அமைப்பு உள்ளிட்டவை புதிய ஸ்கார்பியோ என் காரின் கேபினில் வழங்கப்பட்டுள்ளன.

கம்பீரமான தோற்றத்தில் ஷோரூம்களில் காட்சியளிக்கும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என்!! ஒவ்வொன்றாக வர துவங்கின

இவற்றில் பெரும்பான்மையான தொழிற்நுட்பங்களை கடந்த ஆண்டில் மஹிந்திரா அறிமுகப்படுத்திய எக்ஸ்யூவி700 காரிலும் பார்க்க முடியும். 3-இருக்கை வரிசைகளை கொண்ட இந்த காரின் கேபின் ஆனது கருப்பு-பழுப்பு என்கிற இரட்டை-நிறத்தேர்வில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் எல்இடி பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் 18-இன்ச் அலாய் சக்கரங்கள் நம்மை வசீகரிக்கின்றன.

கம்பீரமான தோற்றத்தில் ஷோரூம்களில் காட்சியளிக்கும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என்!! ஒவ்வொன்றாக வர துவங்கின

கேபின் அம்சங்கள் மட்டுமின்றி, இயக்க ஆற்றலை வழங்குவதற்கு எக்ஸ்யூவி700-இல் வழங்கப்பட்டுள்ள அதே 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளைதான் புதிய ஸ்கார்பியோ என் காரிலும் மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 197 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 173 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

கம்பீரமான தோற்றத்தில் ஷோரூம்களில் காட்சியளிக்கும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என்!! ஒவ்வொன்றாக வர துவங்கின

இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே கூறியதுபோல் இதில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வில் அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பையும் பெறலாம். புதிய ஸ்கார்பியோ என் காருடன் தற்போதைய தலைமுறை ஸ்கார்பியோவையும் ஸ்கார்பியோ கிளாசிக் என்கிற பெயரில் தொடர்ந்து மஹிந்திரா விற்பனை செய்யவுள்ளதாக ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகிறோம்.

கம்பீரமான தோற்றத்தில் ஷோரூம்களில் காட்சியளிக்கும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என்!! ஒவ்வொன்றாக வர துவங்கின

இதன்படி பார்க்கும்போது, 5 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் ஸ்கார்பியோ கார்கள் இனி விற்பனைக்கு கிடைக்கவுள்ளன. இதன் மூலமாக மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல்களுக்கு ஹூண்டாய் மோட்டார்ஸின் க்ரெட்டா மட்டுமின்றி, அல்கஸாரும், டாடா மோட்டார்ஸின் ஹெரியர் மட்டுமின்றி, சஃபாரி மாடலும் போட்டியாக விளங்கவுள்ளன. மேற்கூறப்பட்ட புதிய ஸ்கார்பியோ என் காரின் விலைகள் முதல் 25,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 7, 2022, 10:47 [IST]
English summary
Mahindra scorpio n reached dealerships test ride started details
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+