ஆச்சரியம்... 30 நிமிடத்தில் ஒரு லட்சம் புக்கிங்... மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கு குவியும் முன்பதிவுகள்!

மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) காருக்கு இன்று காலை 11 மணியளவில் புக்கிங் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், வெறும் 30 நிமிடங்களில் 1 லட்சம் யூனிட்டுகளுக்கான புக்கிங் குவிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆச்சரியம்... 90 நிமிடத்தில் ஒரு லட்சம் புக்கிங்... மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கு குவியும் முன்பதிவுகள்!

மஹிந்திரா நிறுவனம் (Mahindra) அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ என் (Scorpio N) புதுமுக காருக்கான புக்கிங் பணிகளை இன்று (ஜூலை 30) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த பணிகள் தொடங்கப்பட்ட 30 நிமிடங்களிலேயே சுமார் 1 லட்சம் யூனிட்டுகளுக்கான புக்கிங் குவிந்திருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆச்சரியம்... 90 நிமிடத்தில் ஒரு லட்சம் புக்கிங்... மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கு குவியும் முன்பதிவுகள்!

இதுவரை இந்தியாவில் இதுபோன்று எந்தவொரு தயாரிப்பிற்கும் புக்கிங் இந்தளவு வேகத்தில் குவிந்தது இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், மஹிந்திரா நிறுவனம் தற்போது மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றிருக்கின்றது என கூறலாம். மேலும், மஹிந்திரா நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் மிக சிறந்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகின்றது. ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் ஸ்கார்பியோ என் காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியிருக்கின்றது.

ஆச்சரியம்... 90 நிமிடத்தில் ஒரு லட்சம் புக்கிங்... மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கு குவியும் முன்பதிவுகள்!

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு நிமிஷத்திற்கு உள்ளாகவே மஹிந்திரா நிறுவனம் எதிர்பார்த்த 25 ஆயிரம் புக்கிங்குகள் கிடைத்திருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக 5 நிமிடங்களில் அந்த எண்ணிக்கை 40 ஆயிரமாக உயர்ந்திருக்கின்றது. கடைசியாக அரை மணி நேரத்திற்குள் அது ஒரு லட்சமாக உயர்ந்திருக்கின்றது. விரைவில் இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆச்சரியம்... 90 நிமிடத்தில் ஒரு லட்சம் புக்கிங்... மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கு குவியும் முன்பதிவுகள்!

இந்தளவு வரவேற்பை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முந்துபவர்களுக்கே முன்னுரிமை (first-come-first-serve) எனும் திட்டத்தின்கீழ் ஸ்கார்பியோ என் காரை டெலிவரி வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் தங்களின் புக்கிங்கில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் என்ன மாதிரியான மாற்றங்களை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் எனவும் அது அறிவித்துள்ளது.

ஆச்சரியம்... 90 நிமிடத்தில் ஒரு லட்சம் புக்கிங்... மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கு குவியும் முன்பதிவுகள்!

அதாவது, வேரியண்டை மாற்றுவது, நிறத்தை மாற்றுவது மற்றும் இருக்கை தேர்வை மாற்றுவது என தங்களுடைய தேர்வை மாற்றிக் கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது, மஹிந்திரா. ஆனால், மாற்றங்களை வரும் ஆகஸ்டு 15ம் தேதி நள்ளிரவு வரை மட்டுமே செய்து கொள்ள முடியும். இத்துடன், ஆட்-கார்ட் செய்து கொள்ளும் வசதியையும் மஹிந்திரா ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

ஆச்சரியம்... 90 நிமிடத்தில் ஒரு லட்சம் புக்கிங்... மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கு குவியும் முன்பதிவுகள்!

இதுபோன்று வசதிகளை இந்தியாவில் வெறு எந்த நிறுவனமும் இதற்கு முன்னதாக வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்காரின் டெலிவரி பணிகள் செப்டம்பர் 26 முதல் தொடங்கப்பட இருக்கின்றன. மேலும், டிசம்பர் இறுதிக்குள் நிறுவனம் 20 ஆயிரம் யூனிட் ஸ்கார்பியோ என் கார்களை டெலிவரிக் கொடுக்க திட்டமிட்டுள்ளது.

ஆச்சரியம்... 90 நிமிடத்தில் ஒரு லட்சம் புக்கிங்... மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கு குவியும் முன்பதிவுகள்!

மஹிந்திரா ஸ்கார்பியோ என் எஸ்யூவி தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோவைக் காட்டிலும் பல மடங்கு பெரிய உருவத்திலும், அதிக இட வசதியைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல், டாடா சஃபாரியைக் காட்டிலும் பெரிய உருவத்தில் அது உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன், அதி நவீன தொழில்நுட்ப வசதிகளும் இக்காரில் பல வழங்கப்பட்டுள்ளன.

ஆச்சரியம்... 90 நிமிடத்தில் ஒரு லட்சம் புக்கிங்... மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கு குவியும் முன்பதிவுகள்!

ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். இசட்2, இசட்4, இசட்6, இசட்8 மற்றும் இசட்8எல் ஆகியவையே அவை ஆகும். ரூ. 11.99 லட்சம் தொடங்கி ரூ. 23.90 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். மேலும், இந்த விலை முதல் 25 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என மஹிந்திரா அறிவித்துள்ளது.

ஆச்சரியம்... 90 நிமிடத்தில் ஒரு லட்சம் புக்கிங்... மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கு குவியும் முன்பதிவுகள்!

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை 6 மற்றும் 7 இருக்கைகள் தேர்விலும், பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் தேர்விலும், மேனுவல் மற்றும் தானியங்கி ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகளிலும் விற்பனைக்குப் பெற்றுக் கொள்ள முடியும். இக்காரின் பெட்ரோல் தேர்வில் 2.0 லிட்டர் டிஜிடிஐ எம்ஸ்டாலியன் மோட்டாரும், 2.2 லிட்டர் எம்ஹாவ்க் மோட்டாரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆச்சரியம்... 90 நிமிடத்தில் ஒரு லட்சம் புக்கிங்... மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கு குவியும் முன்பதிவுகள்!

இதுதவிர, பன்முக தொழில்நுட்ப வசதிகளுடனும் இக்கார் கிடைக்க இருக்கின்றது. 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கனட்ரோல், நடுத்தர டிஜிட்டல் க்ளஸ்டர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 6 ஏர் பேக்குகள், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, July 30, 2022, 15:46 [IST]
English summary
Mahindra scorpio n received over 1 lakh bookings with in 90 minutes
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+