கார் ஓடி கொண்டிருக்கும்போது டிரைவரை தூங்க விடாது... தரமான அம்சத்துடன் வருகிறது மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார்!

டிரைவரின் தூக்கத்தைக் கண்டறியும் சிறப்பு வசதியை மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) கார் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

கார் ஓடி கொண்டிருக்கும் டிரைவரை தூங்க விடாது... தரமான அம்சத்துடன் வருகிறது மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார்!

மஹிந்திரா நிறுவனம் வெகு விரைவில் ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) காரை இந்திய எஸ்யூவி கார் பிரிவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதனை முன்னிட்டு வரும் ஜூன் 27ம் தேதி அன்று அக்காரை அதிகாரப்பூர்வ அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், இப்புதுமுக வாகனம் குறித்த பல்வேறு முக்கிய தகவல்கள் இணையத்தின் வாயிலாகக் கசிந்த வண்ணம் இருக்கின்றன.

கார் ஓடி கொண்டிருக்கும் டிரைவரை தூங்க விடாது... தரமான அம்சத்துடன் வருகிறது மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார்!

அண்மையில்கூட மஹிந்திரா நிறுவனத்தின் சேர்மேன் ஆனந்த் மஹிந்திரா, புதிய ஸ்கார்பியோ என் வேற லெவல் பாதுகாப்பு வசதிகளுடன் விற்பனைக்கு வரவிருப்பதை ட்விட்டர் பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தினார். இளைஞர் ஒருவர் காரின் பாதுகாப்பு குறித்து ஓர் மீமை வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக, "புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை தகர்க்க அணுகுண்டால் மட்டுமே முடியும்" என குறிப்பிட்டிருந்தார்.

கார் ஓடி கொண்டிருக்கும் டிரைவரை தூங்க விடாது... தரமான அம்சத்துடன் வருகிறது மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார்!

ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதில் புதிய ஸ்கார்பியோ என் அதி-நவீன பாதுகாப்பு வசதிகளுடன் வரவிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த நிலையில், அக்காரில் இடம் பெற இருக்கும் இன்னும் சில முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன. யுட்யூப் சேனல் ஷர்மன் டிசோசா வெளியிட்டிருக்கும் வீடியோவின் வாயிலாகவே அந்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

கார் ஓடி கொண்டிருக்கும் டிரைவரை தூங்க விடாது... தரமான அம்சத்துடன் வருகிறது மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார்!

புதிய ஸ்கார்பியோ என் காரில் டிரைவர் தூக்கத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம் இடம் பெற இருப்பதாக யுட்யூப் சேனல் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அம்சம் டிரைவரிடம் இருந்து எந்த செயல்பாடும் கண்டறியப்படவில்லை எனில் தானாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உதவும். இது முழு அளவில் இல்லாமல் மைல்டான அடாஸ் அம்சத்தை ஸ்கார்பியோ என் பெற இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கார் ஓடி கொண்டிருக்கும் டிரைவரை தூங்க விடாது... தரமான அம்சத்துடன் வருகிறது மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார்!

இத்துடன், 4x4 சிஸ்டம் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு எஞ்ஜின்களிலும் வழங்கப்பட இருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, இந்த கார் அதிகபட்சமாக 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்ட வாகனமாகவும் விற்பனைக்கு வர இருக்கின்றது. இது மிக சிறந்த ஆஃப் ரோடு பயணத்தை அனுபவிக்க உதவும். மேலும், இக்காரில், டேம்பிங் தொழில்நுட்பம் கொண்ட பென்டா லிங்க் சஸ்பென்ஷன் செட்-அப், மிக ஆழமான சரிவுகளை சமாளிக்கும் திறன் மற்றும் இன்னும் பல சிறப்பு வசதிகளுடன் இக்கார் உருவாகியிருப்பதாக புதிய தகவல்கள் கூறுகின்றன.

கார் ஓடி கொண்டிருக்கும் டிரைவரை தூங்க விடாது... தரமான அம்சத்துடன் வருகிறது மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார்!

இதுமட்டுமின்றி, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி, டிராக்சன் கன்ட்ரோல், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூசன், டையர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் 6 ஏர் பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் ஸ்கார்பியோ என்-இல் இடம் பெற இருக்கின்றன.

கார் ஓடி கொண்டிருக்கும் டிரைவரை தூங்க விடாது... தரமான அம்சத்துடன் வருகிறது மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார்!

இதுதவிர இன்னும் பல பிரீமியம், சமீபத்திய தொழில்நுட்ப கருவிகள் மற்றும் மேம்பட்ட நவீன அம்சங்களால் இக்கார் அலங்கரிக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகின்றது. அந்தவகையில், பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன் ரூஃப், ட்யூவல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், மல்டி ஃபங்க்ஷன்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், 6 மற்றும் 7 இருக்கைகள் தேர்வுகள் உள்ளிட்டவை இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கார் ஓடி கொண்டிருக்கும் டிரைவரை தூங்க விடாது... தரமான அம்சத்துடன் வருகிறது மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார்!

மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ என் காரை இளைஞர்களை மையமாகக் கொண்டு உருவாகியிருப்பதால் இதுபோன்று ஏரளாமான சிறப்பு வசதிகளுடன் அது விற்பனைக்கு வர இருக்கின்றது. எஞ்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் என் ஸ்டால்லியன் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்-ஹாவ்க் டீசல் ஆகியவற்றுடனேயே ஸ்கார்பியோ என் எதிர்பார்க்கப்படுகின்றது.

கார் ஓடி கொண்டிருக்கும் டிரைவரை தூங்க விடாது... தரமான அம்சத்துடன் வருகிறது மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார்!

அவை அதி திறன் வெளிப்படுத்தக் கூடிய எஞ்ஜின்களாக இருக்கும். உதாரணமாக பெட்ரோல் மோட்டார் அதிகபட்சமாக 197 எச்பி திறனைக் கொண்டதாகவும், டீசல் எஞ்ஜின் 172 எச்பி திறன் கொண்டதாகவும் இருக்கும். இதுதவிர, வெள்ளை, சில்வர், நபோளி பிளாக், ரேஜ் ரெட், நியூ ப்ளூ, பிரஷ்ஷட் கிரீன் மற்றும் பிரஷ்ஷட் கோல்டு ஆகிய நிற தேர்வுகளில் புதிய ஸ்கார்பியோ என் கார் கிடைக்க இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 7, 2022, 10:59 [IST]
English summary
Mahindra scorpio n reportedly get driver drowsiness detection system
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+