மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் உட்பக்கமா இது?.. சொகுசு கார்களையே மிஞ்சிடும் போலிருக்கே!

மஹிந்திரா நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கும் ஸ்கார்பியோ என் காரின் உட்பக்கம் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் உட்பக்கமா இது?.. சொகுசு கார்களையே மிஞ்சிடும் போலிருக்கே!

இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டி வரும் கார் மாடல்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ என்-ம் ஒன்று. இந்த காரை வெகு விரைவில் மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் வெளியீடு செய்ய இருக்கின்றது. 2022 ஜூன் 27ம் தேதி அன்றே அதிகாரப்பூர்வ வெளியீட்டை ஸ்கார்பியோ என் பெற இருக்கின்றது.

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் உட்பக்கமா இது?.. சொகுசு கார்களையே மிஞ்சிடும் போலிருக்கே!

தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோவைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட ஸ்டைல் மற்றும் அம்சங்களுடன் ஸ்கார்பியோ என் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கார்குறித்து சமீபத்தில் வெளியாகிய படங்கள் உள்ளன. முன்னதாக காரின் வெளிப்புற படங்கள் மட்டுமே வெளியாகியிருந்தன.

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் உட்பக்கமா இது?.. சொகுசு கார்களையே மிஞ்சிடும் போலிருக்கே!

ஆனால், தற்போது காரின் உட்புற படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படத்தின் வாயிலாக காருக்குள் இடம் பெற இருக்கும் சில முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல் தெரிய வந்திருக்கின்றது. மிக முக்கியமாக அட்ரினோஎக்ஸ் தொழில்நுட்பம் காருக்குள் இடம் பெற இருப்பது தெரிய வந்துள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் உட்பக்கமா இது?.. சொகுசு கார்களையே மிஞ்சிடும் போலிருக்கே!

எக்ஸ்யூவி700 காரிலேயே இந்த அம்சத்தை முதல் முறையாக மஹிந்திரா வழங்கியது. இதற்கு அடுத்தபடியாக ஸ்கார்பியோ என்-னும் அந்த தொழில்நுட்பத்தைப் பெற இருக்கின்றது. இந்த தகவல் ஸ்கார்பியோ என்-னின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் உட்பக்கமா இது?.. சொகுசு கார்களையே மிஞ்சிடும் போலிருக்கே!

தொடர்ந்து, ஸ்கார்பியோ என் காரில் 3டி சவுண்ட் சிஸ்டம் சோனி நிறுவனத்துடையது வழங்கப்பட இருக்கின்றது. மேலும், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ட்யூவல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல், கருப்பு மற்றும் காப்பி நிறத்திலான இருக்கைகள், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்களும் ஸ்கார்பியோ என்-இல் இடம் பெற்றிருக்கும்.

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் உட்பக்கமா இது?.. சொகுசு கார்களையே மிஞ்சிடும் போலிருக்கே!

இதுதவிர, ஒயர்லெஸ் சார்ஜர், ட்யூவல் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் எம்ஐடி யூனிட், எஞ்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், க்ரூஸ் கன்ட்ரோல், மல்டிபிள் டிரைவ் மோட்கள், ஆறு ஏர் பேக்குகள், ரூஃப் மவுண்டட் ஸ்பீக்கர்கள் மற்றும் பல அம்சங்களை அதில் எதிர்பார்க்கலாம்.

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் உட்பக்கமா இது?.. சொகுசு கார்களையே மிஞ்சிடும் போலிருக்கே!

இவை அனைத்தைக் காட்டிலும் அட்ரினோஎக்ஸ் தொழில்நுட்பம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. இது ஓர் கார் இணைப்பு அம்சம் ஆகும். இது டிரைவர் வாகனத்தை இயக்கிக் கொண்டிருக்கும் தூங்கினால், அதைக் கண்டறிந்து அவரை எச்சரிக்க செய்யும். இத்துடன், அவசர காலங்களில் இன்னும் பல உதவிகளை வழங்க இந்த தொழில்நுட்பம் உதவியாக இருக்கும்.

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் உட்பக்கமா இது?.. சொகுசு கார்களையே மிஞ்சிடும் போலிருக்கே!

மூன்று வரிசை இருக்கை தேர்வில் இக்கார் கிடைக்க இருக்கின்றது என்பதையும் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் நமக்கு தெரிவிக்கின்றன. அந்தவகையில், இரண்டாவது வரிசையில் இருவர் அமரும் வகையில் கேப்டைன் ரக இருக்கை ஸ்கார்பியோ என்-இல் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் உட்பக்கமா இது?.. சொகுசு கார்களையே மிஞ்சிடும் போலிருக்கே!

மூன்றாவது வரிசை இருக்கையில் மூன்று பேர் வரை அமர முடியும். கூடுதல் லக்கேஜ்களை பின்பக்கத்தில் ஏற்றிக் கொள்ள ஏதுவாக 60:40 வசதிக் கொண்ட இருக்கை கடைசியில் வழங்கப்பட்டுள்ளது. ஸ்கார்பியோ என் காரின் இன்டீரியர் படங்களைப் போல் சமீபத்தில் காரின் ப்ராச்சர் படங்கள் வெளியாகின.

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் உட்பக்கமா இது?.. சொகுசு கார்களையே மிஞ்சிடும் போலிருக்கே!

அதன் வாயிலாக புதிய ஸ்கார்பியோ என் டாடா சஃபாரி காரைக் காட்டிலும் பெரிய உருவத்தில் விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அதாவது, 4,662 மிமீ நீளத்திலும், 1,971 மிமீ அகலத்திலும் மற்றும் 1,870 மிமீ உயரத்திலும் இக்கார் உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 14, 2022, 14:42 [IST]
English summary
Mahindra scorpio n suv interior pics revealed here is full details
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+