புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio N) கார், நாளை (ஜூன் 27) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த காரின் முன் பகுதியில், எல்இடி ட்யூயல்-பீம் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

அத்துடன் பெரிய அலாய் வீல்கள், பின் பகுதியில் ஆடி கார்களில் வழங்கப்படுவதை போன்ற டைனமிக் டர்ன் இன்டிகேட்டர்கள் உடன் எல்இடி டெயில்லைட்களும் இடம்பெற்றுள்ளன. இன்டீரியரை பொறுத்தவரையில் கருப்பு/பழுப்பு டேஷ்போர்டு, சில்வர் அலங்கார வேலைப்பாடுகள் ஆகியவை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளன.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

அதே நேரத்தில் ஸ்டியரிங் வீல், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. வசதிகளை பொறுத்தவரையில், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பீக்கர்கள் உடன் சோனி சவுண்ட் சிஸ்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

இதுதவிர அலெக்ஸா உடன் கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் எண்டரி மற்றும் 6 ஏர்பேக்குகள் என மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில் இடம்பெற்றுள்ள வசதிகளை அடுக்கி கொண்டே போகலாம். அதே நேரத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில் 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

அவை நமக்கு நன்கு பரிட்சயமான 2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின்கள் ஆகும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார், ரியர் வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

புதிய ஸ்கார்பியோ-என் காரின் ஆரம்ப விலையை மஹிந்திரா நிறுவனம் 12 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19-20 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை பற்றிய கிட்டத்தட்ட அனைத்து தகவல்களும் ஏற்கனவே வெளியாகி விட்டன.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

ஆனால் விலை மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த காரின் விலை எவ்வளவு? என்ற கேள்விக்கு நமக்கு நாளை விடை கிடைத்து விடும். இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), எம்ஜி அஸ்டர் (MG Astor), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) போன்ற எஸ்யூவி கார்களுடன், புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் போட்டியிடும்.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

இந்திய சந்தையில் தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த புதிய தலைமுறை தார் மற்றும் புதிய எக்ஸ்யூவி700 ஆகிய கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக டிமாண்ட் உள்ளது. எனவே இந்த இரண்டு கார்களுக்கும் காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக உள்ளது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

இந்த கார்களுக்கான காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருப்பதற்கு தற்போது நிலவி வரும் செமி கண்டக்டர் சிப்களுக்கான பற்றாக்குறை பிரச்னையும் ஒரு காரணமாக உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் புதிய ஸ்கார்பியோ-என் காரையும் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பதிவு அதிகமாக குவியும்பட்சத்தில், புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காருக்கும் காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Sunday, June 26, 2022, 22:23 [IST]
English summary
Mahindra scorpio n to launch tomorrow here are all the details
மேலும்... #mahindra #மஹிந்திரா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+