சான்ஸே இல்ல... மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார்களின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்- டீசர் வீடியோ வெளியீடு

மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் உட்புறத்தை வெளிக்காட்டும் டீசர் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

சான்ஸே இல்ல... மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார்களின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்- டீசர் வீடியோ வெளியீடு

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் மஹிந்திரா வருகிற ஜூலை மாதத்தில் மொத்தம் 3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கமான மஹிந்திரா பார்ன் எலக்ட்ரிக்கில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.

இந்த வீடியோவில் மஹிந்திராவின் புதிய 3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களுள் ஒன்றின் உட்புற கேபின் காட்டப்பட்டுள்ளது. இதற்கு முன் வெளியிடப்பட்டிருந்த வீடியோவை போல் இந்த டீசர் வீடியோவிலும் தொழிற்நுட்ப அம்சங்கள் எதுவும் காட்டப்படாமல், உட்புற கேபினின் வடிவமைப்பு ஹைலைட்டாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கேபின் என்றால் முழு கேபினும் அல்ல, முன்பக்க டேஸ்போர்டு & மைய கன்சோல் பகுதி மட்டுமே இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

சான்ஸே இல்ல... மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார்களின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்- டீசர் வீடியோ வெளியீடு

இதன்படி பார்க்கும்போது, தற்போதுள்ள எந்தவொரு மஹிந்திரா காரிலும் இல்லாத புதுமையான டேஸ்போர்டு வடிவமைப்பை இந்த புதிய எலக்ட்ரிக் கார்கள் பெற்றுவரவுள்ளன. அதிலிலும் குறிப்பாக மைய கன்சோல் பகுதி வழக்கத்தை காட்டிலும் அகலமானதாக வழங்கப்பட உள்ளது. மஹிந்திராவின் சமீபத்திய எக்ஸ்யூவி700 காரில் வழங்கப்பட்டிருப்பதுபோல் இரட்டை-திரை அமைப்பை புதிய எலக்ட்ரிக் கார்களிலும் எதிர்பார்க்கிறோம்.

சான்ஸே இல்ல... மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார்களின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்- டீசர் வீடியோ வெளியீடு

இதில் ஒன்று பொழுதுப்போக்கிற்கான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கானதாகவும், மற்றொன்று ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடியதாகவும் இருக்கும். தற்போதைய மாடர்ன் கார்களில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமானது ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் இணைக்கக்கூடியதாக வழங்கப்படுகிறது. ஆதலால் இந்த இணைப்பு வசதிகள் மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் வழங்கப்பட்டால், அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

சான்ஸே இல்ல... மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார்களின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்- டீசர் வீடியோ வெளியீடு

யார் கண்டது, இவற்றுடன் மேலும் சில இணைப்பு கார் வசதிகளையும் இவை பெற்றுவரலாம். தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவில் பிராண்டின் புதிய அறுகோண வடிவ ஸ்டேரிங் சக்கரம் காட்சியளிக்கிறது. டேஸ்போர்டில் வழங்கப்பட உள்ள திரைகளுக்கான கண்ட்ரோல்களை இந்த ஸ்டேரிங் சக்கரத்தில் எதிர்பார்க்கலாம். மேலும் இந்த டீசர் வீடியோ, மஹிந்திராவின் இந்த புதிய எலக்ட்ரிக் காரில் ஓட்டுனர் பகுதியை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ள விளக்குகளையும் காட்டுகிறது.

சான்ஸே இல்ல... மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார்களின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்- டீசர் வீடியோ வெளியீடு

இதேபோன்றதான விளக்கு செட்அப்-ஐ இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களின் ஓட்டுனர் இருக்கை மட்டுமின்றி, முன் இருக்கை பயணியின் பக்கமும் எதிர்பார்க்கிறோம். அதேநேரம் முன் இருக்கைகள் வழக்கத்தை காட்டிலும் பெரியதாக உள்ளதை காண முடிகிறது. இதனால் சவுகரியமான பயணத்திற்காக முன் இருக்கைகள் இரண்டையும் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக எதிர்பார்க்கலாம்.

சான்ஸே இல்ல... மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார்களின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்- டீசர் வீடியோ வெளியீடு

மைய கன்சோல் பகுதியில் ஏகப்பட்ட டயல்கள் வழங்கப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது. ஆனால் அவை என்னென்ன என்பதை தெளிவாக காண முடியவில்லை. நிச்சயமாக எலக்ட்ரிக் காரின் செயல்திறன்களை மாற்றிக்கொள்ளும் வகையில் நிறைய கண்ட்ரோல் பொத்தான்களையும், தொடு-கண்ட்ரோல்களையும் மஹிந்திரா வழங்கும். மைய கன்சோல் பகுதியில் அளவில்-பெரியதான கியர் மாற்றி தென்படுகிறது.

சான்ஸே இல்ல... மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார்களின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்- டீசர் வீடியோ வெளியீடு

எலக்ட்ரிக் கார்களில் கியர்மாற்றி தேவைப்படாது. ஆனால் வேறு சில அம்சங்களுக்காக கியர்மாற்றி போன்றதான கண்ட்ரோல் வழங்கப்படலாம். இதில் இருந்து சில விஷயங்களை புதிய எலக்ட்ரிக் கார்களிலும் தொடர மஹிந்திரா விரும்புவது தெரிய வருகிறது. இந்த டீசர் வீடியோவின்படி பார்க்கும்போது மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் விசாலமான இடவசதி உடன் பெரிய ஜன்னல் கண்ணாடிகளுடன் கேபினை பெற்றுவரவுள்ளன என்பது உறுதியாகிறது.

சான்ஸே இல்ல... மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார்களின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்- டீசர் வீடியோ வெளியீடு

இதனால் காருக்குள் இருந்தப்படியே பயண சூழலை முழுமையாக காணலாம். இதற்கேற்ப சன்ரூஃப்-பும் நன்கு பெரியதாக வழங்கப்படும். இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள அம்சங்கள் அனைத்தும் மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் வழங்கப்படுமா என்பது அவற்றின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு பிறகே தெரியவரும். ஏனெனில் இதில் சில அம்சங்கள் இறுதிக்கட்ட சோதனைகளுக்கு பிறகு வழங்கப்படாமலும் போவதற்கு வாய்ப்புள்ளது.

சான்ஸே இல்ல... மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார்களின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்- டீசர் வீடியோ வெளியீடு

இவ்வாறு விற்பனையில் உள்ள மஹிந்திரா கார்களை காட்டிலும் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களின் தோற்றம் மிகவும் அட்வான்ஸாக இருப்பது காரணம், இந்த இ-கார்கள் யுகேவில், ஆக்ஃபோர்டுஷைரில் உள்ள மஹிந்திராவின் ஐரோப்பாவிற்கான அட்வான்ஸ்டு டிசைன் குழுவினரால் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இதனை மேலுள்ள டீசர் வீடியோவிலும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், புதிய 3 மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் வெளியீடு வருகிற 2022 ஜூலையில் இருக்கும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 17, 2022, 7:30 [IST]
English summary
Mahindra shares interior teaser of upcoming xuv900 bev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+