நீண்ட நாள் எதிர்பார்ப்பு! ஸ்கார்பியோ என் காருக்கு புக்கிங் தொடங்கியது! எப்படி புக் செய்வது? இதோ வழிக்காட்டுதல்

மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியிருக்கின்றது. இந்த காரை எப்படி புக் செய்வது என்பது குறித்த வழிக்காட்டுதல்களையே இந்த பதிவில் ஸ்டெப்-பை-ஸ்டெப் ஆக வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ என் காருக்கு புக்கிங் தொடங்கியது... எப்படி புக் செய்வது? இதோ வழிக்காட்டுதல்!

அறிவித்தபடியே ஸ்கார்பியோ என் (Scorpio N) காருக்கான புக்கிங் பணிகளை மஹிந்திரா (Mahindra) நிறுவனம் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த கார் மாடல்களில் ஸ்கார்பியோ என்-ம் ஒன்றாகும். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோ (Scorpio)-வைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்புகள் கொண்ட வாகனமாக புதிய ஸ்கார்பியோ என் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ என் காருக்கு புக்கிங் தொடங்கியது... எப்படி புக் செய்வது? இதோ வழிக்காட்டுதல்!

குறிப்பாக பிரமாண்ட தோற்றம், கண்கவர் ஸ்டைல் மற்றும் அதி-நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட வாகனமாக ஸ்கார்பியோ என் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூப்பரான காருக்கே ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் புக்கிங் பணிகளைத் தொடங்கியிருக்கின்றது, மஹிந்திரா நிறுவனம். முதலில் புக் செய்யும் 25 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் காரை வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ என் காருக்கு புக்கிங் தொடங்கியது... எப்படி புக் செய்வது? இதோ வழிக்காட்டுதல்!

தற்போது மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் ஆரம்ப விலை ரூ. ரூ. 11.99 லட்சமாக உள்ளது. இதேபோல், இக்காரின் உயர் நிலை வேரியண்டிற்கு ரூ. 21.45 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். விரைவில் இந்த விலைகளில் மஹிந்திரா நிறுவனம் மாற்றம் செய்ய இருக்கின்றது. அதாவது, முதல் 25 ஆயிரம் புக்கிங்குகளுக்கு பின்னர் ஸ்கார்பியோ என் காரின் விலையை கூட்ட இருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ என் காருக்கு புக்கிங் தொடங்கியது... எப்படி புக் செய்வது? இதோ வழிக்காட்டுதல்!

நிறுவனத்தின் இந்த செயல் வாடிக்கையாளர்களைக் குவியச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இன்று காலை 11.00 மணியளவில் இருந்து ஸ்கார்பியோ என் காருக்கான புக்கிங்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையே நாம் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்க்க உள்ளோம். அதாவது, மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை ஸ்டெப்-பை-ஸ்டெப் புக் செய்வது எப்படி என்கிற தகவலை வழங்கியிருக்கின்றோம்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ என் காருக்கு புக்கிங் தொடங்கியது... எப்படி புக் செய்வது? இதோ வழிக்காட்டுதல்!
  • முதலில் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தில் உள் நுழைய வேண்டும்.
  • அங்கு மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை புக் செய்வதற்கென பிரத்யேக பேஜ் நிறுவப்பட்டுள்ளது.
  • அதில் புக் நவ் என்ற பட்டனை க்ளிக் செய்வதன் வாயிலாக அடுத்த பக்கத்திற்கு கட்டத்திற்கு அது நம்மை அழைத்துச் செல்லும்.
  • அவ்வாறு சென்ற பின்னர், செல்போன் எண்ணை உள்ளீடு செய்து ஓடிபி-யை பெற அந்த பேஜ் கூறும்.
  • பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ என் காருக்கு புக்கிங் தொடங்கியது... எப்படி புக் செய்வது? இதோ வழிக்காட்டுதல்!
    • ஓடிஐ பெற்று, அதை உள்ளீடு செய்த பிறகு மற்றொரு பேஜுக்கு அந்த தளம் நம்மை அழைத்துச் செல்லும். அங்கு வாடிக்கையாளரின் பெயர், முகவரி, மாநிலம் மற்றும் நகரம் உள்ளிட்ட முக்கிய தரவுகள் கேட்கப்படும். அவற்றை நாம் வழங்க வேண்டியிருக்கும்.
    • இதை செய்த பின்னர், உங்களுக்கு பெட்ரோலில் இயங்கும் ஸ்கார்பியோ என் வேண்டுமா அல்லது டீசலில் இயங்கும் ஸ்கார்பியோ என் வேண்டுமா என அந்த தளம் கேட்கும். இதை தேர்வு செய்த பின்னர் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷனை தேர்வு செய்ய வேண்டும். இதை அடுத்து, 6 சீட்டர் அல்லது 7 சீட்டர் இருக்கை தேர்வை நாம் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்.
    • பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ என் காருக்கு புக்கிங் தொடங்கியது... எப்படி புக் செய்வது? இதோ வழிக்காட்டுதல்!

      இந்த தேர்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர் நிறம். ஒட்டுமொத்தமாக ஏழு நிற தேர்வுகளில் ஸ்கார்பியோ என் கார் கிடைக்கும். வேரியண்டிற்கு ஏற்ப இந்த நிற தேர்வுகள் மாறுபடுகின்றன. உதாரணமாக பெட்ரோல், மேனுவல் மோட்டார், 6 சீட்டர் ஸ்கார்பியோ என் காரை தேர்வு செய்கிறீர்கள் என வைத்துக் கொண்டால், இந்த தேர்விற்கு ஏழு விதமான நிற தேர்வுகளை மஹிந்திரா வழங்கும். அதேவேலையில், பெட்ரோல், மேனுவல், 7 சீட்டர் ஸ்கார்பியோ என் காரை தேர்வு செய்தால் உங்களுக்கு மூன்று விதமான நிற தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.

      பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ என் காருக்கு புக்கிங் தொடங்கியது... எப்படி புக் செய்வது? இதோ வழிக்காட்டுதல்!

      இந்த தேர்வுகளுக்கு பின்னர் டீலர் தேர்வு. உங்களுக்கு அருகாமையில் இருக்கும் டீலர்களின் பட்டியலை அந்த தளம் வரிசைப்படுத்திக் காண்பிக்கும். அவர்களில் யார் உங்களுக்கு அருகாமையில் இருக்கின்றார்களோ அவர்களைத் தேர்வு செய்துக் கொள்ளலாம். அவர்கள் மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு உங்களுக்கான காரை டெலிவரி செய்வர். குறிப்பாக, தேர்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர் கடைசியாக புக்கிங்கிற்கான தொகை ரூ. 21 செலுத்த வேண்டும். இதைச் செய்தால் மட்டுமே உங்களுக்கான ஸ்கார்பியோவை நீங்கள் புக் செய்தது உறுதியாகும்.

      பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ என் காருக்கு புக்கிங் தொடங்கியது... எப்படி புக் செய்வது? இதோ வழிக்காட்டுதல்!

      மஹிந்திரா நிறுவனம் வரும் பண்டிகைக் காலத்தில் ஸ்கார்பியோ என் காரை டெலிவரி வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. ஆகையால், ஆகஸ்டு இறுதி அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் இக்காரின் டெலிவரி எதிர்பார்க்கலாம். அதேவேலையில், நிறுவனம் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் 20 ஆயிரம் யூனிட் ஸ்கார்பியோ என் கார்களை அதன் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரிக் கொடுக்க திட்டமிட்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 30, 2022, 14:12 [IST]
English summary
Mahindra starts scorpio n bookings
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+