மாஸ் டீசரை வெளியிட்ட மஹிந்திரா... விரைவில் வருகிறது புதிய ஸ்கார்ப்பியோ?

மஹிந்திரா நிறுவனம் புதிய எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஒரு டீசரை வெளியிட்டுள்ளது. இது பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த எஸ்யூவி கார் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவாக இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. இது குறித்த முழு தகவல்களை கீழே காணலாம்

மாஸ் டீசரை வெளியிட்ட மஹிந்திரா. . . விரைவில் வருகிறது புதிய ஸ்கார்ப்பியோ ?

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் கார்கள் தயாரிப்பில் ஒரு முக்கியமான நிறுவனம் இந்நிறுவனம் தயாரிக்கும் பல கார்கள் மார்கெட்டில் ஹிட்டடித்து பட்டையை கிளப்பி வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனம் தயாரிக்கும் எஸ்யூவி கார்களுக்கு மார்கெட்டில் தனி மவுசு இருக்கிறது.

மாஸ் டீசரை வெளியிட்ட மஹிந்திரா. . . விரைவில் வருகிறது புதிய ஸ்கார்ப்பியோ ?

அந்த வகையில் இந்த நிறுவனம் தயாரித்து விற்பனையாகி வரும் கார்களில் முக்கியமானது மஹிந்திரா ஸ்கார்ப்பியோ என்ற கார் தான். இந்த கார் இந்தியா மார்கெட்டில் கடந்த 20 ஆண்டுகளாக பரபரப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த கார்களை பிடிக்காதவர்களே இருக்க முடியாது என சொல்லலாம். அரசியல்வாதிகள் முதல் பிஸ்னஸ்மேன் வரை இந்த காரை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மாஸ் டீசரை வெளியிட்ட மஹிந்திரா. . . விரைவில் வருகிறது புதிய ஸ்கார்ப்பியோ ?

இதற்கு முக்கியமான காரணம் இந்த காரின் தரும் கம்பீரமான லுக் தான். இந்த காரின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த காரை பார்த்தாலே அதில் வரும் மனிதர்களுக்கு தனி மரியாதை மற்றவர்களுக்கு ஏற்படும் அப்படியான பெயரை பெற்ற இந்த கார் கடந்த 1.5 ஆண்டுகளாக எந்த வித அப்டேட்டும் இல்லாமல் இருந்தது.

மாஸ் டீசரை வெளியிட்ட மஹிந்திரா. . . விரைவில் வருகிறது புதிய ஸ்கார்ப்பியோ ?

இந்நிலையில் சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் ஒரு டீசர் ஒன்றை வெளியிட்டது. அந்த டீசரின் படி மஹிந்திரா நிறுவனம் ஏதோ ஒரு விஷயத்தை பெரியதாகவும், போல்டாகவும் செய்யப்போவதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் பேசிக்கொள்வது போல உள்ளது. பின்னர் Big-daddy of all SUVs என இந்த வீடியோவில் முடிவில் விளக்கமும் உள்ளது.

இந்த வீடியோ ஏதோ புரோமோஷன் வீடியோ என்பது மட்டுமே தற்போது உறுதியாக தெரிந்தாலும் இந்த வீடியோ மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரின் டீசர் என பேசப்படுகிறது. கடந்த 1.5 ஆண்டுகளாக ஸ்கார்ப்பியோ கார் மாற்றம் பெற்றாததற்கு முக்கியமான காரணம் அந்த காரை அந்நிறுவனம் முழுவதுமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறுப்படுகிறது.

மாஸ் டீசரை வெளியிட்ட மஹிந்திரா. . . விரைவில் வருகிறது புதிய ஸ்கார்ப்பியோ ?

அந்த காரின் பிளாட்மார்பில் துவங்கி இன்ஜின், டிசைன், என பல மாற்றங்களை பெறப்போவதாக தெரிகிறது. இந்த புதிய காரின் முக்கிய பல அம்சங்கள் ஸ்பை புகைப்படங்களாவும், லீக்களாவும் வெளியாகியுள்ளன. இந்த காரின் வெளிப்புறத்தை பொறுத்தவரை வெர்டிக்கல் ஸ்லாட் கிரில், ஷார்ப்பர் எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட், ஃபாக் லைட் ஹவுசிங், பானேட்டில் மாற்றம், புதிதாக டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்கள், பின் பக்க பங்ம் மாற்றம் முன்பக்கள் Cவடிவிலான எல்இடி லைட்,

மாஸ் டீசரை வெளியிட்ட மஹிந்திரா. . . விரைவில் வருகிறது புதிய ஸ்கார்ப்பியோ ?

இந்த காரின் உட்புறத்தை பொறுத்வரை புதியடேஷ் போர்டு, புதிய சென்டர் கன்சோல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்டியரிங் வீலேயே கண்ட்ரோல்கள், டூயல் டோன் லெதர் சீட்கள், புதிய ஏசி வென்ட் டிசைன், வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், நீள வாக்கிலா டச் ஸ்கிரீன் இன்போடெயிண்மெண்ட் சிஸ்டம், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட், ஆர்ம் ரெஸ்ட் ஆகிய வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

மாஸ் டீசரை வெளியிட்ட மஹிந்திரா. . . விரைவில் வருகிறது புதிய ஸ்கார்ப்பியோ ?

மேலும் இந்த காரின் 3 வரிசை சீட்களுகம் முன்பக்கம் பார்த்தபடியே டிசைன் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய கார்களில் கடைசி வரிசை சீட் பக்கவாட்டில் இருப்பது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. புதிய காரில் நீக்கப்படும் என தெரிகிறது

மாஸ் டீசரை வெளியிட்ட மஹிந்திரா. . . விரைவில் வருகிறது புதிய ஸ்கார்ப்பியோ ?

இந்த கார்2.2 லிட்டர் 4 சிலிண்டர் mHawk டீசல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் mStallion பெட்ரோல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உடன் வரும் என கூறப்படுகிறது.

மாஸ் டீசரை வெளியிட்ட மஹிந்திரா. . . விரைவில் வருகிறது புதிய ஸ்கார்ப்பியோ ?

இந்த புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார் விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என தெரியவந்துள்ளது. இதன் காரின் அறிமுகத்திற்காக பலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது உள்ள மக்களின் ரசனையின்படி முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட இந்த கார் விற்பனைக்கு வந்தால் இந்த வாடிக்கையாளர்களை கவர்ந்து விற்பனையில் புதிய சாதனை படைக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 6, 2022, 20:56 [IST]
English summary
Mahindra teased big daddy SUV it may be new gen Scorpio
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+