தட்டி தூக்கிய வடநாட்டு மாநிலம்! ரூ10 ஆயிரம் கோடி செலவில் பிரத்தியேக இவி கார் ஆலை
மஹிந்திரா நிறுவனம் ரூ10 ஆயிரம் கோடி முதலீட்டில் எலெக்ட்ரிக் காருக்கான தயாரிப்பு ஆலையை புனோவில் அமைக்க முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசின் தொழிற்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான செய்தியைக் கீழே காணலாம் வாருங்கள்.
சமீபகாலமாக ஆட்டோமொபைல் துறை புதிய பரிணாமத்தை அடைந்து வருகிறது. பெட்ரோல், டீசல் கார்கள் எல்லாம் மாறி எல்லோரும் எலெக்ட்ரிக் காரை நோக்கி மாறி வருகின்றனர். பெரிய பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூட எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த முயற்சியில் டாடா நிறுவனம் வெற்றி பெற்று இந்தியாவில் அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது.

மாருதி, டொயோட்டா போன்ற நிறுவனங்கள் எல்லாம் எலெக்ட்ரிக்கிற்கு பதிலாக ஹைபிரிட் வாகனங்களைத் தயாரிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடாவிற்கு கடும் போட்டியை கொடுக்க மஹிந்திரா நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக பல ஆய்வுகளை செய்தது. இந்நிலையில் எலெக்ட்ரிக் காருக்கான தனி பிளாட்ஃபார்மையே உருவாக்கியது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி இந்நிறுவனம் லண்டனில் பிஇ என்ற பிராண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கி அறிமுகப்படுத்தினர். அந்த வாகனங்களும் மஹிந்திராவின் இங்குலோ இவி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டது தான். இனி பிஇ பிராண்டில் உருவாக்க உள்ள கார்களும் இந்த காரில் தான் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் எக்ஸ்யூவி பிராண்ட் காரும் இதே பிளாட்பார்மில்தான் உருவாக்கப்படுகிறது.
தற்போது மஹிந்திரா நிறுவனம், ஜெய்பூர், நாக்பூர், நாசிக், மும்பை என 4 இடங்களில் தங்கள் தயாரிப்பு ஆலையை நடத்தி வருகிறது. இந்த ஆலைகளிலிருந்து தங்கள் வாகனங்களைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வருகிறது. தற்போது தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க பிரத்தியேகமாக புனேவில் ஒரு ஆலையை நிறுவ முடிவு செய்துள்ளது. இந்த ஆலையில் எதிர்காலத்தில் அந்நிறுவனம் தயாரிக்கும் எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் தயாரிக்கப்படவுள்ளன.
இதற்கான புதிதாக உருவாக்கப்படவுள்ள ஆலையில் அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன பிளாட்ஃபார்மான இங்குலோ பிளாட்ஃபார்ம் நிறுவப்படவுள்ளது. இந்த ஆலைக்காக மஹிந்திரா நிறுவனம் ரூ10 ஆயிரம் கோடி பணத்தைச் செலவு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த ஆலையின் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகவுள்ளன. இந்த ஆலை எப்பொழுது தயாராகும் என்ற தகவல்கள் எல்லாம் இதுவரை வெளியாகவில்லை.
மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்களுக்கு பிரத்தியேகமான இவி ஆலைகளை உருவாக்க முடிவு செய்துள்ளதால் தற்போது எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் உச்சத்தில் இருக்கும் டாடா நிறுவனத்திற்கு மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியால் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் இந்திய நிறுவனங்களான டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் மட்டும் அதிக அளவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








