அளவில் சிறிய சக்கரங்களை புதியதாக பெற்றுள்ள 2022 மஹிந்திரா எக்ஸ்யூவி300!! டாப் வேரியண்ட்களுக்கு மட்டும்தானாம்!

நடப்பு 2022இல் தயாரிக்கப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் புதியதாக 16-இன்ச் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், எக்ஸ்யூவி300 காரில் கொண்டுவரப்பட்டுள்ள மேலும் சில மாற்றங்களையும் பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அளவில் சிறிய சக்கரங்களை புதியதாக பெற்றுள்ள 2022 மஹிந்திரா எக்ஸ்யூவி300!! டாப் வேரியண்ட்களுக்கு மட்டும்தானாம்!

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகக்கூடிய காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் மஹிந்திராவின் எக்ஸ்யூவி300 மாடலும் ஒன்றாகும். மஹிந்திரா நிறுவனம் முதன்முதலாக 2019இல் எக்ஸ்யூவி300 காரை அறிமுகப்படுத்தியது. அதன்பின் இந்த எஸ்யூவி காருக்கு பெரியதாக எந்தவொரு அப்டேட்டும் வழங்கப்படாமல் இருந்த நிலையில், விரைவில் இந்த மஹிந்திரா கார் சந்தையில் ஆயுட்காலத்தை சற்று அதிகரிக்கும் வகையில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினை பெறவுள்ளது.

அளவில் சிறிய சக்கரங்களை புதியதாக பெற்றுள்ள 2022 மஹிந்திரா எக்ஸ்யூவி300!! டாப் வேரியண்ட்களுக்கு மட்டும்தானாம்!

இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300க்கு டாடா மோட்டார்ஸின் நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ மற்றும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன. இதில் நெக்ஸானுக்கு கடந்த 2020ஆம் ஆண்டிலேயே டாடா மோட்டார்ஸ் அப்டேட்டை வழங்கி இருந்தது. இவ்வாறு தொடர்ந்து புத்துணர்ச்சியானதாக வைக்கப்பட்டிருப்பதால்தான் தற்சமயம் அதிகளவில் விற்பனையாகும் எஸ்யூவி காராக நெக்ஸான் முதலிடத்தில் உள்ளது.

அளவில் சிறிய சக்கரங்களை புதியதாக பெற்றுள்ள 2022 மஹிந்திரா எக்ஸ்யூவி300!! டாப் வேரியண்ட்களுக்கு மட்டும்தானாம்!

ஹூண்டாய் நெக்ஸானும், மாருதி சுஸுகியின் விட்டாரா பிரெஸ்ஸாவும் விரைவில் அப்டேட்டை பெறவுள்ளன. ஆதலால் எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் காரை மஹிந்திரா அறிமுகப்படுத்துவதற்கு இது சரியான நேரமே ஆகும். இதற்கிடையில் தற்போது எக்ஸ்யூவி300-இன் டபிள்யூ8 வேரியண்ட்களுக்கு சைலண்ட்டாக அப்டேட் ஒன்றினை மஹிந்திரா வழங்கியுள்ளது.

அளவில் சிறிய சக்கரங்களை புதியதாக பெற்றுள்ள 2022 மஹிந்திரா எக்ஸ்யூவி300!! டாப் வேரியண்ட்களுக்கு மட்டும்தானாம்!

அதாவது, எக்ஸ்யூவி300 மாடலின் டாப் வேரியண்ட்டான டபிள்யூ8-க்கு புதியதாக, அளவில் சற்று சிறிய 16-இன்ச் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அப்டேட்டினை பெற 2022இல் தயாரிக்கப்பட்ட எக்ஸ்யூவி300 டபிள்யூ8 காரினை வாங்க வேண்டுமாம். முன்பு எக்ஸ்யூவி300 டபிள்யூ8 வேரியண்ட்டிற்கு 17-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டு வந்தன. இத்தகைய சிறிய சக்கரங்கள் பொதுவாக சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களில்தான் வழங்கப்பட்டு வருகின்றன.

அளவில் சிறிய சக்கரங்களை புதியதாக பெற்றுள்ள 2022 மஹிந்திரா எக்ஸ்யூவி300!! டாப் வேரியண்ட்களுக்கு மட்டும்தானாம்!

பாகங்களின் விலை அதிகரிப்பு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக அமைத்து வருகின்றன. இதன் வெளிப்பாடாகவே கார்களின் விலைகள் ஒவ்வொரு வருடத்திலும் அதிகரிக்கப்படுகின்றன. இவ்வாறு சக்கரங்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளதினால் மஹிந்திராவிற்கு உற்பத்தி செலவு சற்று குறையும் என நம்புகிறோம். அத்துடன் சக்கரங்களின் அளவு ஒரு இன்ச் குறைந்துள்ளதால் எக்ஸ்யூவி300 காரின் வழக்கமான தோற்றத்தில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

அளவில் சிறிய சக்கரங்களை புதியதாக பெற்றுள்ள 2022 மஹிந்திரா எக்ஸ்யூவி300!! டாப் வேரியண்ட்களுக்கு மட்டும்தானாம்!

ஆனால் இந்த மாற்றத்தால், சக்கரங்களில் பொருத்தப்படும் டயர்களின் அகலம் 215இல் இருந்து 205 ஆக குறைந்துள்ளது. இந்த அப்டேட்கள் காரின் எரிபொருள் திறனை சற்று அதிகரிக்கும் என கூறப்படுகிறது. டபிள்யூ8 வேரியண்ட் மட்டுமின்றி, எக்ஸ்யூவி300-இன் டபிள்யூ8 (O) வேரியண்ட்டும் இந்த அப்டேட்களை பெற்றுள்ளது. இதில் டாப் டபிள்யூ8 (O) வேரியண்ட்டிற்கு ஸ்டைலிஷான இரட்டை-நிற டைமண்ட்-கட் அலாய் சக்கரங்களும், டபிள்யூ8 வேரியண்ட்டில் சில்வர் நிறத்தில் 16-இன்ச் அலாய் சக்கரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அளவில் சிறிய சக்கரங்களை புதியதாக பெற்றுள்ள 2022 மஹிந்திரா எக்ஸ்யூவி300!! டாப் வேரியண்ட்களுக்கு மட்டும்தானாம்!

இந்த ட்ரிம் நிலைகளை தவிர்த்து, மற்ற ட்ரிம் நிலைகளின் சக்கரங்களில் மாற்றமில்லை. இந்த அலாய் சக்கர அப்டேட்டுடன் எக்ஸ்யூவி300-இன் டாப் வேரியண்ட்களில் வேறு சில அப்டேட்களும் கொண்டுவரப்பட்டுள்ளதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பயணிகள்-பக்க சாவி இல்லா நுழைவு, பின்பக்க மைய ஆர்ம்ரெஸ்ட் மற்றும் கப் ஹோல்டர்கள் உள்ளிட்டவை டாப் ட்ரிம்-இல் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

அளவில் சிறிய சக்கரங்களை புதியதாக பெற்றுள்ள 2022 மஹிந்திரா எக்ஸ்யூவி300!! டாப் வேரியண்ட்களுக்கு மட்டும்தானாம்!

இருப்பினும் இந்த அப்டேட்களுக்கு ஏற்ப எக்ஸ்யூவி300-இன் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மஹிந்திரா காம்பெக்ட் எஸ்யூவி கார் டபிள்யூ4, டபிள்யூ6, டபிள்யூ8 மற்றும் டபிள்யூ8 (O) என்கிற 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் தற்போது அப்டேட்டை பெற்றுள்ள டபிள்யூ8 ட்ரிம் நிலையானது பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

அளவில் சிறிய சக்கரங்களை புதியதாக பெற்றுள்ள 2022 மஹிந்திரா எக்ஸ்யூவி300!! டாப் வேரியண்ட்களுக்கு மட்டும்தானாம்!

எக்ஸ்யூவி300-இல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 109 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

அளவில் சிறிய சக்கரங்களை புதியதாக பெற்றுள்ள 2022 மஹிந்திரா எக்ஸ்யூவி300!! டாப் வேரியண்ட்களுக்கு மட்டும்தானாம்!

மஹிந்திராவின் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.95 லட்சங்களில் இருந்து ரூ.13.46 லட்சங்கள் வரையில் உள்ளன. எக்ஸ்யூவி300-இன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் மட்டுமின்றி, எக்ஸ்யூவி300-இன் எலக்ட்ரிக் வெர்சனை தயாரிப்பதிலும் மஹிந்திரா ஈடுப்பட்டு வருகிறது. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முதலாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்த எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் காரின் சோதனை மாதிரிகளையும் சோதனை ஓட்டங்களின்போது சாலையில் பார்த்துள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 10, 2022, 19:45 [IST]
English summary
2022 Mahindra XUV300 Updated With New 16 Inch Alloys
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+