எக்ஸ்யூவி700 vs ஸ்கார்பியோ என் எந்த காரை வாங்கலாம்? எது பெஸ்ட்?

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 700 மற்றும் ஸ்கார்பியோ என் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த இரண்டு கார்களுக்கும் என்ன வித்தியாசம்? யார் யார் என்னென்ன கார்களை வாங்கலாம் ? முழு விபரங்களைக் கீழே காணலாம் வாருங்கள்.

எக்ஸ்யூவி 700 v s ஸ்கார்பியோ என் எந்த காரை வாங்கலாம் . . . எது பெஸ்ட் . . .

மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் தற்போது மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி வருகிறது. பலர் இந்நிறுவன கார்களை அதிகம் விரும்பத் துவங்கி வருகின்றனர். இந்நிறுவனம் கடந்தாண்டு மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய எக்ஸ்யூவி 700 காரை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் ஸ்கார்பியோ-என் காரை இந்தாண்டும் அதே எதிர்பார்ப்போடு அறிமுகப்படுத்தியது.

எக்ஸ்யூவி 700 v s ஸ்கார்பியோ என் எந்த காரை வாங்கலாம் . . . எது பெஸ்ட் . . .

தற்போது மக்கள் மத்தியில் இந்த இரண்டு கார்களும் பிரிமியம் எஸ்யூவி கார்கள் தான் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? எந்த கார்களும் எந்தெந்த இடத்தில் சிறப்பாகச் செயல்படும்? என விரிவாகக் காணலாம். அதற்கு முன்னர் இதில் எந்த காரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என முடிவு செய்யும் முன்பு உங்கள் பயன்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப தான் வாகனத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

எக்ஸ்யூவி 700 v s ஸ்கார்பியோ என் எந்த காரை வாங்கலாம் . . . எது பெஸ்ட் . . .

ரக்கட் எஸ்யூவி

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என் கார் ஒரு ரக்கட் எஸ்யூவி காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் எக்ஸ்யூவி 700 காரில் உள்ளது போல பல எலெக்ட்ரானிக்ஸ் கருவிகள் எல்லாம் கிடையாது. இந்த காரை வடிவமைக்கும் போதே எக்ஸ்யூவி 700 காரை விட ரக்கட் காராக இருக்க வேண்டும் என்ற நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் உங்களுக்கு ரக்கட் லுக்கில் கார் வேண்டும் என்றால் ஸ்கார்பியோ என் தான் சிறந்தது.

எக்ஸ்யூவி 700 v s ஸ்கார்பியோ என் எந்த காரை வாங்கலாம் . . . எது பெஸ்ட் . . .

ஆஃப் ரோடிங்

நாம் முன்பு சொன்ன ரக்கட் என்ற பாயிண்ட் வந்த உடனேயே உங்களுக்குத் தோன்றுவது ஆஃப் ரோடிங் தான். அதற்குத் தகுந்தார் போல் ஸ்கார்பியோ- என் கார்தான் சிறந்த ஆஃப்ரோடிங் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. எக்ஸ்யூவி 700 காரை விட ஸ்கார்பியோ என் காரில் AWD சிஸ்டம் சிறப்பாக இருக்கிறது.

எக்ஸ்யூவி 700 v s ஸ்கார்பியோ என் எந்த காரை வாங்கலாம் . . . எது பெஸ்ட் . . .

எக்ஸ்யூவி 700 காரில் லைட் ஆஃப் ரோடிற்கானAWD சிஸ்டம் மட்டுமே இருக்கிறது. இது போக ஸ்கார்பியோ என் காரில் 4XPLOR சிஸ்டம் உள்ளது. இது குறைந்த ரேஷியோ டிரான்ஸ்பர் கேஸ் ஆப்ஷன் கொண்டது. மேலும் இதில் 4 விதமான ஆஃப் ரோடிங் மோட்கள் உள்ளன. நார்மல், புல்/கிரேவல்/ ஸ்னோ, மட்/ரட் மற்றும் மணல் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. ஸ்கார்பியோ என் காரில் தான் MLD மற்றும் BLD சஸ்பென்சன்கள் சிறப்பான ஆஃப் ரோடிங் பெர்ஃபாமென்ஸ்ளுக்காக டியூன் செய்யப்பட்டுள்ளது.

எக்ஸ்யூவி 700 v s ஸ்கார்பியோ என் எந்த காரை வாங்கலாம் . . . எது பெஸ்ட் . . .

டெக்னிக்கல் கார்

நீங்கள் உங்கள் கார் பல டெக்னிக்கல் அம்சங்கள் கொண்ட காராக இருக்க வேண்டும் என விரும்பினால் உங்களுக்கு எஸ்யூவி700 கார்தான் சிறந்த தேர்வு. இந்த காரில் ஆட்டோனமஸ் டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டம் லெவல் -2 அம்சம் இருக்கிறது. இந்த அம்சம் கார் ஓட்டும் போது ஒரு மார்டன் கார் என்ற அனுபவத்தை வழங்குகிறது. ஸ்கார்பியோ என் காரில் இந்த அனுபவம் இருக்காது. கேபினும் ஸ்கார்பியோ என் காரை விட எக்ஸ்யூவி 700 காரில் தான் சிறப்பான வசதிகள் இருக்கிறது.

எக்ஸ்யூவி 700 v s ஸ்கார்பியோ என் எந்த காரை வாங்கலாம் . . . எது பெஸ்ட் . . .

எக்ஸ்யூவி 700 காரில் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்கார்பியோ என் காரில் வெறும் 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மெயண்ட் சிஸ்டம் தான் இருக்கிறது. எக்ஸ்யூவி 700 காரில் முழுமையாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பியோ என் காரில் அனலாக் மற்றும் டிஜிட்டல் கிளஸ்டர்கள் சேர்ந்தே கொடுக்கப்பட்டுள்ளன.

எக்ஸ்யூவி 700 v s ஸ்கார்பியோ என் எந்த காரை வாங்கலாம் . . . எது பெஸ்ட் . . .

அதிகமான அம்சங்கள்

கார்களில் உள்ள அம்சங்களின் பட்டியல்களைப் பார்த்தால் எக்ஸ்யூவி 700 காருக்கான பட்டியல் தான் மிகவும் பெரியது. ஸ்கார்பியோ என் காரில் இந்த அளவிற்கு அம்சங்கள் இல்லை. இந்த எக்ஸ்யூவி 700 காரில் முக்கிய அம்சமாக பானரோமிக் சன்ரூப், டிரைவருக்கான மெமரி சீட், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி கேமரா, ADAS ஆகிய அம்சங்கள் உள்ளன.

எக்ஸ்யூவி 700 v s ஸ்கார்பியோ என் எந்த காரை வாங்கலாம் . . . எது பெஸ்ட் . . .

ஹைவே கார்

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை பொருத்தவரை மோனோக்யூ சேஸிசில் தயாரிக்கப்பட்டது. ஸ்கார்பியோ என் கார் லேடர் ஃபிரேமில் தயாரித்துள்ளனர். ஹைவே க்ரூஸிங் மற்றும் வேகமான பயணத்திற்கு மோனோக்யூ சேஸிசிஸ் சிறப்பாகச் செயல்படும். இது லேடர் ஃபிரேமை விட லைட்டாக இருக்கும். அதனால் நீங்கள் நெடுஞ்சாலையில் அதிகம் பயணிக்கும் பயன்பாடு கொண்டவர் என்றால் உங்களுக்கு எக்ஸ்யூவி 700 பெஸ்ட்

எக்ஸ்யூவி 700 v s ஸ்கார்பியோ என் எந்த காரை வாங்கலாம் . . . எது பெஸ்ட் . . .

செயல்திறன்

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 700 மற்றும் ஸ்கார்பியோ என் காருக்கான இன்ஜின் மற்றும் கியர் ஆப்ஷன்களை ஒரே மாதிரியாக வைத்திருக்கின்றனர். இருந்தாலும் எக்ஸ்யூவி700 கார் மோனோக்யூவில் தயாரிக்கப்பட்டுள்ளதால் எடை குறைவாக இருக்கும். அதனால் இந்த இரண்டிற்கும் போட்டி வைத்தால் வேகத்தில் எக்ஸ்யூவி 700 காரை வெற்றி பெறும். ஒரே இன்ஜினாக இருந்தாலும் செயல் திறனில் நிச்சயம் வித்தியாசம் இருக்கும். நெடுஞ்சாலைகளில் எக்ஸ்யூவி 700 கார் பாதுகாப்பாகவும், சுலபமாகவும் கையாள முடியக்கூடிய கார்.

எக்ஸ்யூவி 700 v s ஸ்கார்பியோ என் எந்த காரை வாங்கலாம் . . . எது பெஸ்ட் . . .

கெத்தான கார்

ரோட்டில் நீங்கள் செல்லும் போது கெத்தாகத் தெரிய வேண்டும் என்றால் இந்த விஷயத்தில் ஸ்கார்பியோ என் கார் தான் வெற்றிபெறும். அதற்காக எக்ஸ்யூவி 700 காரை லேசாக மதிப்பிட்டுவிட வேண்டாம். புதிய ஸ்கார்பியோ என் கார் எக்ஸ்யூவி 700 காரை விட 27 மிமீ அகலம் மற்றும் 102 மிமீ உயரம் அதிகமானது அவ்வளவு தான். எக்ஸ்யூவி 700 கார் நீளத்தில் சற்று பெரிய கார். ஆனால் அகலமும் உயரமும் ஸ்கார்பியோ என் காருக்கு நல்ல லுக்கை கொடுக்கிறது. முக்கியமாக ரக்கட் லுக் காருக்கு கெத்தான தோன்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 25, 2022, 17:52 [IST]
English summary
Mahindra xuv 700 vs scorpio n car comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+