டாடாவின் கோட்டையில் ஓட்டை போட வருகிறது மஹிந்திராவின் புது எலெக்ட்ரிக் கார்... நாளைக்கு லான்ச்! விலை இவ்ளோதானா!

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடாவின் கோட்டையில் ஓட்டை போட வருகிறது மஹிந்திராவின் புது எலெக்ட்ரிக் கார்... நாளைக்கு லான்ச்! விலை இவ்ளோதானா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400). இது எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மஹிந்திரா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தற்போது முழுமையாக தயார் ஆகி விட்டது.

டாடாவின் கோட்டையில் ஓட்டை போட வருகிறது மஹிந்திராவின் புது எலெக்ட்ரிக் கார்... நாளைக்கு லான்ச்! விலை இவ்ளோதானா!

ஆம், இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் நாளை (செப்டம்பர் 8) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போது மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் காரான டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருடன் (Tata Nexon EV), மஹிந்திரா எக்ஸ்யூவி400 போட்டியிடவுள்ளது.

டாடாவின் கோட்டையில் ஓட்டை போட வருகிறது மஹிந்திராவின் புது எலெக்ட்ரிக் கார்... நாளைக்கு லான்ச்! விலை இவ்ளோதானா!

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் வருகைக்கு பின்னர், இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் ஆதிக்கம் சற்று குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஏற்கனவே விற்பனையில் உள்ள தனது எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் அடிப்படையில்தான் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரை உருவாக்கியுள்ளது.

டாடாவின் கோட்டையில் ஓட்டை போட வருகிறது மஹிந்திராவின் புது எலெக்ட்ரிக் கார்... நாளைக்கு லான்ச்! விலை இவ்ளோதானா!

எனினும் எக்ஸ்யூவி300 ஐசி இன்ஜின் காரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில் மஹிந்திரா நிறுவனம் நிறைய மாற்றங்களை செய்துள்ளது. இதன்படி எக்ஸ்யூவி300 காருடன் ஒப்பிடும்போது எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் நீளமாகவும், பெரிதாகவும் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடாவின் கோட்டையில் ஓட்டை போட வருகிறது மஹிந்திராவின் புது எலெக்ட்ரிக் கார்... நாளைக்கு லான்ச்! விலை இவ்ளோதானா!

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் உட்புறத்தை பொறுத்தவரையில், அப்டேட் செய்யப்பட்ட டேஷ்போர்டு லேஅவுட் மற்றும் புதிய கலர் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அப்டேட் செய்யப்பட்ட டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகிய வசதிகளும் இடம்பெறலாம்.

டாடாவின் கோட்டையில் ஓட்டை போட வருகிறது மஹிந்திராவின் புது எலெக்ட்ரிக் கார்... நாளைக்கு லான்ச்! விலை இவ்ளோதானா!

இதுதவிர கனெக்டட் கார் தொழில்நுட்பம், பெரிய சன்ரூஃப் மற்றும் கூல்டு க்ளவ்பாக்ஸ் ஆகிய வசதிகளும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் அடாஸ் பாதுகாப்பு வசதிகளையும் மஹிந்திரா நிறுவனம் புதிய எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில் வழங்கலாம்.

டாடாவின் கோட்டையில் ஓட்டை போட வருகிறது மஹிந்திராவின் புது எலெக்ட்ரிக் கார்... நாளைக்கு லான்ச்! விலை இவ்ளோதானா!

செயல்திறனை பொறுத்தவரையில், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில் 2 வகையான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி அதிக சக்தி வாய்ந்த வெர்ஷனின் ரேஞ்ச் (ஒரு முறை பேட்டரியை முழுமையாக நிரப்பினால் பயணிக்கும் தொலைவு) 400-450 கிலோ மீட்டர்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடாவின் கோட்டையில் ஓட்டை போட வருகிறது மஹிந்திராவின் புது எலெக்ட்ரிக் கார்... நாளைக்கு லான்ச்! விலை இவ்ளோதானா!

இதுதவிர ஒரு முறை பேட்டரியை முழுமையாக நிரப்பினால் 300 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்க கூடிய வெர்ஷனும் விற்பனைக்கு கொண்டு வரும் என கூறப்படுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில், தங்கள் தேவைகளுக்கு ஏற்ற பேட்டரி ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள முடியும்.

டாடாவின் கோட்டையில் ஓட்டை போட வருகிறது மஹிந்திராவின் புது எலெக்ட்ரிக் கார்... நாளைக்கு லான்ச்! விலை இவ்ளோதானா!

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் விலையை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையை மஹிந்திரா நிறுவனம் 14 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், டாடாவின் கோட்டையில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 ஓட்டை போடக்கூடும்.

டாடாவின் கோட்டையில் ஓட்டை போட வருகிறது மஹிந்திராவின் புது எலெக்ட்ரிக் கார்... நாளைக்கு லான்ச்! விலை இவ்ளோதானா!

அதிகாரப்பூர்வமான விலை உள்பட மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரை பற்றிய அனைத்து தகவல்களும் நமக்கு நாளை கிடைத்து விடும். ஒருவேளை மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் விலைகளை நாளை அறிவிக்காவிட்டாலும் கூட, டிசைன் மற்றும் தொழில்நுட்ப விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடாவின் கோட்டையில் ஓட்டை போட வருகிறது மஹிந்திராவின் புது எலெக்ட்ரிக் கார்... நாளைக்கு லான்ச்! விலை இவ்ளோதானா!

மஹிந்திரா நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N) ஆகிய கார்கள் இதற்கு உதாரணம். இந்த 2 கார்களுக்கும் மிகப்பெரிய எண்ணிக்கையில் முன்பதிவுகள் குவிந்துள்ளன. இதேபோல் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கும் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 7, 2022, 13:52 [IST]
English summary
Mahindra xuv400 electric suv india launch tomorrow tata nexon ev rival
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+