டாடா எலக்ட்ரிக் கார்களை எல்லாம் ஓரங்கட்ட போகுது... புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எந்தெந்த விதத்தில் சிறந்தது?

மஹிந்திரா சமீபத்தில் அறிமுகப்படுத்திய முற்றிலும் புதிய எலக்ட்ரிக் காரான எக்ஸ்யூவி400-க்கு விற்பனையில் டஃப் கொடுக்க டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் இவி தயாராக உள்ள நிலையில், எலக்ட்ரிக் கார்களான இவற்றிற்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா எலக்ட்ரிக் கார்களை எல்லாம் ஓரங்கட்ட போகுது... புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எந்தெத்த விதத்தில் சிறந்தது?

இந்தியாவின் சிறந்த விற்பனை எலக்ட்ரிக் காராக விளங்கும் டாடா நெக்ஸான் இவி 2019ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நெக்ஸான் இவி மாடலின் நீண்ட ரேஞ்ச் வெர்சன் நெக்ஸான் இவி மேக்ஸ் என்கிற பெயரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் களமிறக்கப்பட்டது. இதன் அறிமுகத்திற்கு பிறகு வழக்கமான நெக்ஸான் இவி காரின் பெயர் நெக்ஸான் இவி பிரைம் என மாற்றி கொள்ளப்பட்டது.

டாடா எலக்ட்ரிக் கார்களை எல்லாம் ஓரங்கட்ட போகுது... புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எந்தெத்த விதத்தில் சிறந்தது?

இந்த இரு டாடா எலக்ட்ரிக் கார்களுடன் தான் விரைவில் மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி400 விற்பனையில் மல்லுக்கட்ட உள்ளது. பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், இவை மூன்றும் காம்பெக்ட் எஸ்யூவி கார்களாக விளங்கினாலும், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 ஆனது டாடாவின் நெக்ஸான் எலக்ட்ரிக் கார்களை காட்டிலும் நீளம், அகலம், உயரம் என அனைத்திலும் பெரியதாக உள்ளது.

டாடா எலக்ட்ரிக் கார்களை எல்லாம் ஓரங்கட்ட போகுது... புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எந்தெத்த விதத்தில் சிறந்தது?

மஹிந்திரா எக்ஸ்யூவி400-இன் நீளம் 4200மிமீ, அகலம் 1812மிமீ மற்றும் உயரம் 1634மிமீ ஆகும். இதனை காட்டிலும் டாடா நெக்ஸான் இவி பிரைம் மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் கார்கள் கிட்டத்தட்ட 207மிமீ-கள் நீளம் குறைவானவைகளாகவும், 1 மிமீ (பெரியதாக வித்தியாசம் தெரியாது) அகலம் குறைந்தவைகளாகவும் உள்ளன. ஏனெனில் இந்த டாடா எலக்ட்ரிக் கார்களின் நீளம் & அகலம் முறையே 3993மிமீ மற்றும் 1811 மிமீ ஆகும்.

Dimensions Mahindra XUV400 Tata Nexon EV
Length 4200 mm 3993 mm
Width 1821 mm 1811 mm
Height 1634 mm 1616 mm
Wheelbase 2600 mm 2498 mm
டாடா எலக்ட்ரிக் கார்களை எல்லாம் ஓரங்கட்ட போகுது... புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எந்தெத்த விதத்தில் சிறந்தது?

உயரத்தில் நெக்ஸான் இவி பிரைம் & நெக்ஸான் இவி மேக்ஸ் என இவை இரண்டிற்கு இடையேயும் வித்தியாசம் உள்ளது. பிரைம் மாடல் 1606மிமீ-லும், மேக்ஸ் மாடல் 1616மிமீ-லும் உயரத்தை கொண்டுள்ளன. நீளம் ஏறக்குறைய 200மிமீ அதிகமாக உள்ளதால், புதிய எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரின் வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) அளவும் டாடாவின் நெக்ஸான் இவி கார்களை காட்டிலும் 100மிமீ அதிகமாக உள்ளது.

டாடா எலக்ட்ரிக் கார்களை எல்லாம் ஓரங்கட்ட போகுது... புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எந்தெத்த விதத்தில் சிறந்தது?

அதேபோல் பூட் ஸ்பேஸ் எனப்படும் பின்பக்கத்தில் பொருட்களை வைப்பதற்கு தேவையான பகுதியும் எக்ஸ்யூவி400 காரில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது. எக்ஸ்யூவி400 காரின் எடை குறித்த விபரங்களை மஹிந்திரா தற்போதைக்கு வெளியிடவில்லை. பரிணாம அளவுகளை போன்று எக்ஸ்யூவி400 காரின் செயல்படுதிறனையும் டாடா மாடல்களுக்கு சவால் அளிக்கும் வகையில் மஹிந்திரா வடிவமைத்துள்ளது.

டாடா எலக்ட்ரிக் கார்களை எல்லாம் ஓரங்கட்ட போகுது... புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எந்தெத்த விதத்தில் சிறந்தது?

குறிப்பாக, எலக்ட்ரிக் மோட்டார் & அதில் பொருத்தப்படும் பேட்டரியின் திறன் மற்றும் ரேஞ்ச்சில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 பலரது கவனத்தை ஈர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. எக்ஸ்யூவி400-இல் பி5எம் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரியின் திறன் நெக்ஸான் இவி மேக்ஸ் உடன் ஒப்பிடுகையில் எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரில் சற்று குறைவு தான்.

Specs Mahindra XUV400 Tata Nexon EV Prime / EV Max

Motor 4200 mm Permanent Magnet Synchronous
Power 150 PS 129 PS / 143 PS
Torque 310 Nm 245 Nm / 250 Nm
Acceleration (0 to 100 kmph) 8.3 seconds 9.9 seconds / 9 seconds
டாடா எலக்ட்ரிக் கார்களை எல்லாம் ஓரங்கட்ட போகுது... புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எந்தெத்த விதத்தில் சிறந்தது?

இருந்தாலும், கிடைக்க பெறும் அதிகப்பட்ச இயக்க ஆற்றலில் எக்ஸ்யூவி400 டாடா நெக்ஸான் இவி மேக்ஸையே முந்தியுள்ளது. புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 456கிமீ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எக்ஸ்யூவி400 காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 456கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். நெக்ஸான் இவி மேக்ஸின் ரேஞ்ச் 437கிமீ தான்.

டாடா எலக்ட்ரிக் கார்களை எல்லாம் ஓரங்கட்ட போகுது... புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எந்தெத்த விதத்தில் சிறந்தது?

இவையாவது பரவாயில்லை, நெக்ஸான் இவி பிரைம் மாடலின் ரேஞ்ச் 312கிமீ என்ற அளவிலேயே கிடைக்க பெறுகிறது. புதிய எக்ஸ்யூவி400 காரின் விலைகளை தற்போதைக்கு மஹிந்திரா வெளியிடவில்லை. டாடா நெக்ஸான் இவி பிரைம் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.14.99 லட்சம் - ரூ.17.50 லட்சம் வரையிலும், நெக்ஸான் இவி மேக்ஸின் விலைகள் இதனை காட்டிலும் சற்று அதிகமாக ரூ.18.34 லட்சம் - ரூ.20.04 லட்சம் வரையிலும் உள்ளன.

Mahindra XUV400 Tata Nexon EV

Ex-Showroom Price

TBA ₹14.99 lakh - ₹17.50 lakh (Prime)
₹18.34 lakh - ₹20.04 lakh (Max)

More from DriveSpark

Article Published On: Friday, September 9, 2022, 11:49 [IST]
English summary
Mahindra xuv400 vs tata nexon ev prime vs tata nexon ev max
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+