சூறாவளியாய் சுழன்றடிக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்... உண்மை என்னனு தெரிந்தும் 1.50 லட்சம் பேர் புக்கிங்!
உண்மை என்ன என்பது தெரிந்தும், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பல ஆண்டுகள் ஆராய்ச்சியும், விடாமுயற்சியும் மஹிந்திரா நிறுவனத்திற்கு நன்றாக பலன் அளிக்க தொடங்கியுள்ளன. கடந்த 2020ம் ஆண்டு மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை தார் எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காரை விற்பனைக்கு கொண்டு வந்தது.

வெகு சமீபத்தில் புதிய ஸ்கார்பியோ-என் காரை மஹிந்திரா நிறுவனம் நமக்கு வழங்கியது. இதில், மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காருக்கு இன்னும் முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. ஆனால் முதல் 2 கார்களும், அதாவது மஹிந்திரா தார் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆகிய 2 கார்களும் உருவாக்கியுள்ள வெற்றி கதை நமக்கு நன்றாக தெரியும்.

இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் புயல் போல் நுழைந்து, போட்டியாளர்களை நிலைகுலைய செய்துள்ளது. எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி போன்ற கார்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் போட்டியிட்டு வருகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து 2021ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கியது. புக்கிங் தொடங்கப்பட்ட முதல் நாளில் முதல் ஒரு மணி நேரத்திலேயே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்து விட்டனர். அடுத்த நாளில் வெறும் 2 மணி நேரத்தில் மேலும் 25 ஆயிரம் பேர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை முன்பதிவு செய்தனர்.

ஆக மொத்தத்தில் வெறும் 3 மணி நேரத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் 50 ஆயிரம் முன்பதிவுகளை குவித்து விட்டது. இவையெல்லாம் ஆரம்பத்தில் கிடைக்க கூடிய வரவேற்பு மட்டுமே என பலரும் சாதாரணமாக நினைத்தனர். அத்துடன் நாட்கள் செல்ல செல்ல வரவேற்பு குறைந்து விடும் என்றும் பலர் கருதினர். ஆனால் நடந்ததோ வேறு.

ஆம், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இத்தனைக்கும் மிகப்பெரிய வரவேற்பு காரணமாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு மிக நீண்ட காத்திருப்பு காலம் நிலவி வருகிறது. இந்த காரின் ஒரு சில வேரியண்ட்களுக்கு 2 ஆண்டுகள் வரை காத்திருப்பு காலம் நிலவி கொண்டுள்ளது.

இருந்தபோதிலும் வாடிக்கையாளர்கள் பலர் இதனை பொருட்படுத்தாமல் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை தொடர்ந்து முன்பதிவு செய்து கொண்டே இருக்கின்றனர். இந்த சூழலில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கான ஒட்டுமொத்த முன்பதிவு எண்ணிக்கை தற்போது 1.50 லட்சத்தை கடந்துள்ளது. இது போட்டியாளர்களை மட்டுமல்லாது வாடிக்கையாளர்களையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

அக்டோபர் மாதம் புக்கிங் தொடங்கப்பட்ட நிலையில், சுமார் 9 மாதங்களிலேயே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை இவ்வளவு பேர் முன்பதிவு செய்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் காத்திருப்பு காலத்தை பற்றி ஏற்கனவே கூறி விட்டோம். டெலிவரி பெறுவதற்கு நீண்ட காலம் ஆகும் என்ற உண்மை நன்கு தெரிந்திருந்தும் கூட வாடிக்கையாளர்கள் பலர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை தொடர்ச்சியாக முன்பதிவு செய்து கொண்டே உள்ளனர்.

1.50 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜூன் மாத இறுதி நிலவரப்படி, 41,846 எக்ஸ்யூவி700 கார்களை மட்டுமே டெலிவரி செய்துள்ளது. அதாவது மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை டெலிவரி பெறுவதற்கு இன்னும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் காத்து கொண்டுள்ளனர்.

மஹிந்திரா நிறுவனம் தற்போது எக்ஸ்யூவி700 காரின் உற்பத்தியை அதிகரித்துள்ளது. எனவே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை டெலிவரி பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் உயர தொடங்கியுள்ளது. வரும் காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் வேகத்தை மஹிந்திரா நிறுவனம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

செமி கண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதும், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதும்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருப்பதற்கான முக்கியமான காரணம். மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








