இந்திய தயாரிப்புகளை எல்லாம் பெருமைப்படுத்திடுச்சு!! உலகளவில் பாதுகாப்பான இந்திய காராக மஹிந்திரா எக்ஸ்யூவி700!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு உலகளாவிய என்சிஏபி (GNCAP) அமைப்பு 'பாதுகாப்பான தேர்வு' விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. இதுகுறித்தும், மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் குறித்தும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய தயாரிப்புகளை எல்லாம் பெருமைப்படுத்திடுச்சு!! உலகளவில் பாதுகாப்பான இந்திய காராக மஹிந்திரா எக்ஸ்யூவி700!

மிகவும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து வெளியான எக்ஸ்யூவி700, அதன் மீதான எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளதா? என்றால், ஆம் என்று தான் சொல்ல வேண்டும். மஹிந்திரா பிராண்டின் புதிய லோகோ உடன் வெளிவந்த இந்த 7-இருக்கை எஸ்யூவி காரில் ADAS உள்பட ஏகப்பட்ட அதிநவீன தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய தயாரிப்புகளை எல்லாம் பெருமைப்படுத்திடுச்சு!! உலகளவில் பாதுகாப்பான இந்திய காராக மஹிந்திரா எக்ஸ்யூவி700!

இவற்றினாலேயே உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில் எக்ஸ்யூவி700 காரால் முழு ஐந்து நட்சத்திரங்களை பெற முடிந்தது. அளவில்-சிறிய எக்ஸ்யூவி300-க்கு அடுத்து மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் முழு ஐந்து நட்சத்திரங்களையும் பெற்ற பயணிகள் கார் எக்ஸ்யூவி700 ஆகும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் டாடா மோட்டார்ஸின் தயாரிப்புகளே அதிகளவில் 5-ஸ்டார்களை பெற்றுள்ளன.

டாடா மோட்டார்ஸுக்கு அடுத்த இடத்தில் மஹிந்திரா உள்ளது. இந்த நிலையில்தான், உலகளாவிய என்சிஏபி அமைப்பு மஹிந்திரா எக்ஸ்யூவி700-க்கு பாதுகாப்பான தேர்வு விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. இந்த விருதினை பயணிகள் மற்றும் வாகன பாதுகாப்பு செயல்படுதிறன்களில் புதிய உச்சங்களை தொட்டதற்காக மஹிந்திரா நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்திய தயாரிப்புகளை எல்லாம் பெருமைப்படுத்திடுச்சு!! உலகளவில் பாதுகாப்பான இந்திய காராக மஹிந்திரா எக்ஸ்யூவி700!

கடந்த 2021 நவம்பர் மாதத்தில் உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் உட்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி700 பெரியவர்கள் பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களையும், குழந்தை பயணிகள் பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும் பெற்றது. அதன்பின்பும் காரின் பாதசாரிகளுக்கான பாதுகாப்பு மற்றும் எலக்ட்ரானிக் நிலைப்பாட்டு கண்ட்ரோல் (ESC))-ஐ சோதிக்கும் சோதனைகளிலும் மஹிந்திரா நிறுவனம் தாமாக முன்வந்து உட்படுத்தியது.

இந்திய தயாரிப்புகளை எல்லாம் பெருமைப்படுத்திடுச்சு!! உலகளவில் பாதுகாப்பான இந்திய காராக மஹிந்திரா எக்ஸ்யூவி700!

உலகளாவிய என்சிஏபி அமைப்பின் பாதுகாப்பான தேர்வு விருதுக்கு தகுதி பெற, அமைப்பின் தற்கால மோதல் சோதனைகளில் பெரியவர்கள் பாதுகாப்பில் நிச்சயமாக முழு ஐந்து மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் அமைப்பின் தற்போதைய மோதல் சோதனைகளில் குழந்தைகள் பாதுகாப்பில் குறைந்தப்பட்சம் 4 நட்சத்திரங்களை பெற்றிருக்க வேண்டும்.

இந்திய தயாரிப்புகளை எல்லாம் பெருமைப்படுத்திடுச்சு!! உலகளவில் பாதுகாப்பான இந்திய காராக மஹிந்திரா எக்ஸ்யூவி700!

அதுமட்டுமின்றி, எலக்ட்ரானிக் நிலைப்பாட்டு கண்ட்ரோலை வழங்கக்கூடியதாகவும், யுஎன்13எச், யுஎன்140 அல்லது ஜிடிஆர்8 என்ற ஐக்கிய தேசிய நாடுகளின் விதிமுறைகளை பூர்த்தி செய்ததாகவும் இருக்க வேண்டும். இதில் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் ஆனது கூடுதல் தேர்வாக வழங்கப்பட்டாலும் பரவாயில்லை, ஆனால் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட வேண்டும்.

இந்திய தயாரிப்புகளை எல்லாம் பெருமைப்படுத்திடுச்சு!! உலகளவில் பாதுகாப்பான இந்திய காராக மஹிந்திரா எக்ஸ்யூவி700!

அத்துடன் விருதுக்கு தகுதி பெறும் மாடலின் கடந்த 2 வருட விற்பனையில் குறைந்தப்பட்சம் 20% யூனிட்களில் இஎஸ்சி ஆனது நிலையான தேர்வாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். மஹிந்திரா எக்ஸ்யூவி700 கடந்த 2021 அக்டோபர் மாதத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும், இதற்கு முந்தைய தலைமுறை எக்ஸ்யூவி500 மாடலிலும் எலக்ட்ரானிக் நிலைப்பாட்டு கண்ட்ரோல் நிலையான தேர்வாக வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய தயாரிப்புகளை எல்லாம் பெருமைப்படுத்திடுச்சு!! உலகளவில் பாதுகாப்பான இந்திய காராக மஹிந்திரா எக்ஸ்யூவி700!

இத்துடன் நிபந்தனைகள் நிற்கவில்லை, தகுதி செய்யப்படும் மாடல் ஐக்கிய தேசிய நாடுகளின் விதிமுறைகளான யுஎன்127 அல்லது ஜிடிஆர்9-இன்படி பாதசாரிகளுக்கான பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இந்த அனைத்து நிபந்தனைகளும் உலகளாவிய என்சிஏபி-இன் சோதனை ஆய்வகத்தில், சந்தையில் பொது விற்பனைக்கு விற்கப்படும் அந்த காரின் மாதிரிகளில் இருந்து சரிப்பார்க்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்திய தயாரிப்புகளை எல்லாம் பெருமைப்படுத்திடுச்சு!! உலகளவில் பாதுகாப்பான இந்திய காராக மஹிந்திரா எக்ஸ்யூவி700!

மேலும், இந்த சரிப்பார்ப்புகளுக்கான முறையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களையும் விருதுக்கு தகுதி பெறும் மாடல் பெற்றிருக்க வேண்டும். இவை அனைத்தையும் பூர்த்தி செய்த மாடல்கள் தான் உலகளாவிய என்சிஏபி அமைப்பின் பாதுகாப்பான தேர்வு விருதுக்கு பரிந்துரைக்கப்படும். பின்னர் அவற்றில் ஒன்றிற்கு விருது வழங்கப்படும். இந்த வகையில், இந்த நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்த ஒரே இந்திய காராக மஹிந்திரா எக்ஸ்யூவி700 விளங்குகிறது.

இந்திய தயாரிப்புகளை எல்லாம் பெருமைப்படுத்திடுச்சு!! உலகளவில் பாதுகாப்பான இந்திய காராக மஹிந்திரா எக்ஸ்யூவி700!

7 காற்றுப்பைகள், புதிய தலைமுறை எலக்ட்ரானிக் நிலைப்பாட்டு கண்ட்ரோல், அதிநவீன ஓட்டுனர் உதவி வசதிகள் (முன்பக்க மோதல் எச்சரிப்பான், ஆட்டோமேட்டிக் அவசரகால பிரேக், ஒரே பாதையை கடைப்பிடிப்பதற்கான உதவி & பாதை மாறுவதை எச்சரிப்பான், ஸ்மார்ட் ஓட்டுனர் உதவி, ஹை பீம் உதவி), ஓட்டுனரின் சோர்வை கண்டறிவான், 360-கோண முழு பார்வை, ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிப்பான், எலக்ட்ரானிக் பார்க் பிரேக், டயரின் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு உள்ளிட்டவை மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் முக்கியமான பாதுகாப்பு அம்சங்களாகும்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra xuv700 gets safer choice award from global ncap details
Story first published: Friday, June 24, 2022, 11:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X