வாடிக்கையாளர்களிடம் வழங்கப்பட்ட கார்களில் பிரச்னையாம்! எக்ஸ்யூவி700 காருக்கு மறு அழைப்பு விடுக்கும் மஹிந்திரா!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அண்மையில் விற்பனைச் செய்யப்பட்ட எக்ஸ்யூவி 700 (XUV700) காரை திருப்பிக் கொண்டு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய பாகத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறை சரி செய்யும் விதமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் மிக அமோகமான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV700)-ம் ஒன்று. இதுவரை 1.50 லட்சத்திற்கும் அதிகமானோர் இக்காரை முன் பதிவு செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சூப்பரான காரையே மஹிந்திரா நிறுவனம் தற்போது ரீ-கால் செய்திருக்கின்றது.

இதுபோன்று மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 700 மாடலை ரீ-கால் செய்வது முதல் முறையல்ல. ஏற்கனவே கோளாறு காரணமாக இக்கார் அழைக்கப்பட்டநிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக எக்ஸ்யூவி 700 கார் ரீ-கால் செய்யப்பட்டிருக்கின்றது. இம்முறையும் அனைத்து வீல் இயக்கம் கொண்ட தேர்விற்கே மறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பின் பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சஸ்பென்ஷனில் ஏற்பட்டிருக்கும் கோளாறு காரணமாக எக்ஸ்யூவி700 காருக்கு மறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது, 8 ரிங்குகள் கொண்ட ஷாக் அப்சார்பரே எக்ஸ்யூவி 700 காரின் பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை நீக்கி 9 ரிங்குகள் இருக்கும் சஸ்பென்ஷனே எக்ஸ்யூவி 700 காரில் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

இந்த மாற்றத்தை மேற்கொள்ளவே மறு அழைப்பு தற்போது விடுக்கப்பட்டிருக்கின்றது. முன்னதாக புரபெல்லர் ஷாஃப்டுகளில் கோளாறு இருந்ததன் காரணத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பும் அனைத்து வீல்கள் இயக்கம் கொண்ட தேர்வை சார்ந்தே விடுக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே மீண்டும் சஸ்பென்ஷனில் பிரச்னை என கூறி மஹிந்திரா நிறுவனம் மீண்டும் ஒரு முறை ஆல் வீல் டிரைவ் வசதிக் கொண்ட எக்ஸ்யூவி 700 காரை ரீ-கால் செய்திருக்கின்றது. ஏஎக்ஸ் 7 டீசல் ஏடி ஏடபிள்யூடி 7 எஸ்டிஆர் (AX 7 Diesel AT AWD 7 STR) மற்றும் ஏஎக்ஸ்7 டீசல் ஏடி ஏடபிள்யூடி லக்சூரி பேக் 7 எஸ்டிஆர் (AX 7 Diesel AT AWD Luxury Pack 7 STR) ஆகிய வேரியண்டுகளை மையப்படுத்தியே இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

மஹிந்திரா நிறுவனம் ரீ-கால் குறித்த அறிவிப்பை அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக மேற்கொண்டு வருகின்றது. அதேநேரத்தில், தங்களுடைய வாகனத்தில் சிக்கல் இருப்பதாக உணரும் வாடிக்கையாளர்கள் சர்வீஸ் மையங்களை வாகனங்களுடன் வந்து நேரடியாக தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், எத்தனை அலகு எக்ஸ்யூவி 700 கார்களில் கோளாறு ஏற்பட்டிருக்கின்றது என்பது பற்றிய விபரத்தை நிறுவனம் தெளிவாக வெளியிடவில்லை. ஜுன் மாத நிலவரப்படி 41,846 எக்ஸ்யூவி 700 கார்களை மஹிந்திரா நிறுவனம் டெலிவரிக் கொடுத்திருக்கின்றது. இன்னும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இக்காரை டெலிவரி பெறுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆகையால், இந்த டெலிவரியின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலை நீடிக்கின்றபோதிலும் பலர் எக்ஸ்யூவி700 கார்களைத் தொடர்ச்சியாக புக் செய்த வண்ணம் இருக்கின்றனர். ஆகையால், இக்காருக்கான காத்திருப்பு காலம் நீடித்த வண்ணம் இருக்கின்றது. இப்போதே நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் குறிப்பிட்ட சில எக்ஸ்யூவி 700 தேர்வுகளுக்கு வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகின்றது.

இத்தகைய சூழலை அறிந்தும் பலர் இக்காரை புக் செய்துக் கொண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் டிமாண்ட் அதிகரித்துக் கொண்டிருப்பதனால் உற்பத்தியை அதிகரித்துள்ளது. ஆகையால், எக்ஸ்யூவி 700 காருக்காக காத்திருப்போரின் கைகளுக்கு விரைவில் அக்கார் டெலிவரி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மக்கள் மத்தியில் இக்காருக்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, குறைவான விலையில் பல மடங்கு அதி-நவீன சொகுசு வசதிகளுடன் அக்கார் கிடைத்துக் கொண்டிருப்பதனாலயே பலர் எக்ஸ்யூவி700 காரை தேர்வு செய்வதற்கு காரணமாக இருக்கின்றது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 எஸ்யூவி காரில் லெவல் 2 செமி அட்டானமஸ் டிரைவிங் வசதிக் கொண்ட அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக, ஆட்டோமேட்டிக் அவசர கால பிரேக்கிங், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், பைலட் அசிஸ்ட், டிரவுசினஸ் அலர்ட், பிளைன்ட் ஸ்பாட்ட டிடெக்சன் சிஸ்டம், லேன் கீப் அசிஸ்டன்ஸ் உட்பட பல்வேறு வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

Source: Team BHP
மஹிந்திரா நிறுவனம் இந்த காரை இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்குகின்றது. 2.0 லிட்டர் டர்போசார்ஜட், 4 சிலிண்டர் மோட்டார் மற்றும் 2.2 லிட்டர் ட்போசார்ஜட் மோட்டார் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலே எக்ஸ்யூவி 700 விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதே மோட்டார் தேர்வே புதிய ஸ்கார்பியோ என் காரிலும் மஹிந்திரா வழங்குகின்றது.


Click it and Unblock the Notifications








