கரெக்ட்டான செலக்ஸன்... 'இந்தியன் கார் ஆஃப் தி இயர்' விருதை வென்ற மஹிந்திரா தயாரிப்பு... எந்த கார்னு தெரியுமா?

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு மிகச்சிறந்த கௌரவம் ஒன்று கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கரெக்ட்டான செலக்ஸன்... 'இந்தியன் கார் ஆஃப் தி இயர்' விருதை வென்ற மஹிந்திரா தயாரிப்பு... எந்த கார்னு தெரியுமா?

இந்தியன் கார் ஆஃப் தி இயர் 2022 (Indian Car Of The Year 2022 - ICOTY 2022) விருதை மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) கார் தட்டி சென்றுள்ளது. எம்ஜி அஸ்டர், ஸ்கோடா ஆக்டேவியா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ரெனால்ட் கைகர், டாடா பன்ச், ஃபோர்ஸ் கூர்கா, மாருதி சுஸுகி செலிரியோ, சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் போன்ற கார்கள் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருடன் போட்டியிட்டன.

கரெக்ட்டான செலக்ஸன்... 'இந்தியன் கார் ஆஃப் தி இயர்' விருதை வென்ற மஹிந்திரா தயாரிப்பு... எந்த கார்னு தெரியுமா?

ஆனால் இந்த போட்டியாளர்களை எல்லாம் வீழ்த்தி, இந்தியன் கார் ஆஃப் தி இயர் 2022 விருதை மஹிந்திரா எக்ஸ்யூவி700 வென்றுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் 101 புள்ளிகளை ஸ்கோர் செய்துள்ளது. அதே நேரத்தில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 89 புள்ளிகளை ஸ்கோர் செய்ததன் மூலம் ஃபோக்ஸ்வேகன் டைகுன் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

கரெக்ட்டான செலக்ஸன்... 'இந்தியன் கார் ஆஃப் தி இயர்' விருதை வென்ற மஹிந்திரா தயாரிப்பு... எந்த கார்னு தெரியுமா?

அதே நேரத்தில் டாடா பன்ச் (Tata Punch) கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 71 புள்ளிகளை ஸ்கோர் செய்ததன் மூலம் டாடா பன்ச் கார் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள கார்கள் அனைத்துமே எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவை என்பது இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும்.

கரெக்ட்டான செலக்ஸன்... 'இந்தியன் கார் ஆஃப் தி இயர்' விருதை வென்ற மஹிந்திரா தயாரிப்பு... எந்த கார்னு தெரியுமா?

இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய இரண்டு கார்களும், மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவை. அதே சமயம் டாடா பன்ச் காரானது, மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. அத்துடன் இந்த மூன்று கார்களில் இரண்டு கார்கள், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கரெக்ட்டான செலக்ஸன்... 'இந்தியன் கார் ஆஃப் தி இயர்' விருதை வென்ற மஹிந்திரா தயாரிப்பு... எந்த கார்னு தெரியுமா?

மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் டாடா பன்ச் ஆகிய இரண்டும்தான் அந்த கார்கள். இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார், கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

கரெக்ட்டான செலக்ஸன்... 'இந்தியன் கார் ஆஃப் தி இயர்' விருதை வென்ற மஹிந்திரா தயாரிப்பு... எந்த கார்னு தெரியுமா?

இந்த கார்களுக்கு பிறகுதான் டாடா பன்ச் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. டாடா பன்ச் கார் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 3 கார்களுக்குமே இந்திய சந்தையில் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகிறது. எனவே 3 கார்களின் விற்பனையும் சிறப்பாக இருந்து வருகிறது.

கரெக்ட்டான செலக்ஸன்... 'இந்தியன் கார் ஆஃப் தி இயர்' விருதை வென்ற மஹிந்திரா தயாரிப்பு... எந்த கார்னு தெரியுமா?

இந்த 3 கார்களில் குறிப்பாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்தான் பலரின் முதல் தேர்வாகும். மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. இந்த காரை வாடிக்கையாளர்கள் எவ்வளவு விரும்புகின்றனர்? என்பதற்கு இந்த முன்பதிவு எண்ணிக்கை ஒரு சாட்சி மட்டுமே.

கரெக்ட்டான செலக்ஸன்... 'இந்தியன் கார் ஆஃப் தி இயர்' விருதை வென்ற மஹிந்திரா தயாரிப்பு... எந்த கார்னு தெரியுமா?

நிறைய பேர் முன்பதிவு செய்துள்ளதால் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு மிக நீண்ட காத்திருப்பு காலம் நிலவுகிறது. அத்துடன் செமி கண்டக்டர் சிப்களுக்கு தற்போது நிலவி வரும் பற்றாக்குறையும், இந்த நீண்ட காத்திருப்பு காலத்திற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மஹிந்திரா நிறுவனம் வரும் மாதங்களில் காத்திருப்பு காலத்தை குறைக்கும் என நம்பலாம்.

கரெக்ட்டான செலக்ஸன்... 'இந்தியன் கார் ஆஃப் தி இயர்' விருதை வென்ற மஹிந்திரா தயாரிப்பு... எந்த கார்னு தெரியுமா?

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 12.95 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 23.79 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

கரெக்ட்டான செலக்ஸன்... 'இந்தியன் கார் ஆஃப் தி இயர்' விருதை வென்ற மஹிந்திரா தயாரிப்பு... எந்த கார்னு தெரியுமா?

இந்த காருக்கு இது மிகவும் சிறப்பான விலை நிர்ணயமாக கருதப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு கிடைத்துள்ள மிக பிரம்மாண்டமான வரவேற்பிற்கு இந்த சவாலான விலை நிர்ணயம் நிச்சயமாக ஒரு காரணம். மஹிந்திரா நிறுவனம் அடுத்ததாக புதிய தலைமுறை ஸ்கார்பியோ காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 11, 2022, 23:45 [IST]
English summary
Mahindra xuv700 wins icoty 2022 check details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+