வரிசைக்கட்டி நிற்கும் புதிய கார் அறிமுகங்கள்!! இந்த தீபாவளி செம்மையா இருக்க போகுது!

நம் இந்தியாவை பொறுத்தவரையில், மக்களுக்கு மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் அளிக்கக்கூடிய தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. பெரும்பாலானோர் தீபாவளி பண்டிகை காலத்திலேயே புதிய வாகனங்களை வாங்க விரும்புகின்றனர்.

வரிசைக்கட்டி நிற்கும் புதிய கார் அறிமுகங்கள்!! இந்த தீபாவளி செம்மையா இருக்க போகுது!

இதனை நன்கு புரிந்துக்கொண்ட கார் தயாரிப்பு நிறுவனங்களும் ஒவ்வொரு வருடமும் சரியாக தீபாவளி பண்டிகை காலம் பார்த்து புதிய கார்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றன. இந்த வகையில் இந்த வருடமும் பல புதிய கார்கள் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகமாக உள்ளன. அவை என்னென்ன என்பதை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

வரிசைக்கட்டி நிற்கும் புதிய கார் அறிமுகங்கள்!! இந்த தீபாவளி செம்மையா இருக்க போகுது!

புதிய மாருதி சுஸுகி கார்கள்

மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து அடுத்த சில மாதங்களில் புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி, பிரெஸ்ஸா சிஎன்ஜி, பலேனோ சிஎன்ஜி மற்றும் புதிய தலைமுறை ஆல்டோ என நான்கு மாடல்கள் அறிமுகமாக உள்ளன. இதில், விட்டாரா என சந்தைக்கு பழக்கமான பெயரில் வெளிவரவுள்ளதாக கூறப்படும் புதிய மாருதி நடுத்தர-அளவு எஸ்யூவி கார் வருகிற ஜூலை 20ஆம் தேதி வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் (அ) செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரிசைக்கட்டி நிற்கும் புதிய கார் அறிமுகங்கள்!! இந்த தீபாவளி செம்மையா இருக்க போகுது!

இதனை தொடர்ந்து, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிக சமீபத்தில் விற்பனைக்கு வந்த பிரெஸ்ஸா மற்றும் மாருதியின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோ மாடல்கள் சிஎன்ஜி தேர்வை பெறவுள்ளன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் மாருதியின் விலை குறைவான ஹேட்ச்பேக் காரான ஆல்டோ புதிய தலைமுறை அப்கிரேடை ஏற்கவுள்ளது.

வரிசைக்கட்டி நிற்கும் புதிய கார் அறிமுகங்கள்!! இந்த தீபாவளி செம்மையா இருக்க போகுது!

புதிய ஹூண்டாய் கார்கள்

புதிய தலைமுறை டக்ஸன், வென்யூ என்-லைன் மற்றும் ஐயோனிக் 5 மாடல்களின் அறிமுகங்கள் இன்னும் சில மாதங்களில் ஹூண்டாய் நிறுவனத்தில் நடக்கவுள்ளதாக தற்போதைக்கு தகவல்கள் கூறுக்கின்றன. இதில் ஹூண்டாயின் விலைமிக்க காராக விளங்கும் டக்ஸனின் புதிய தலைமுறை மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. விலைகள் வரும் ஜூலை 13இல் அறிவிக்கப்பட உள்ளன.

வரிசைக்கட்டி நிற்கும் புதிய கார் அறிமுகங்கள்!! இந்த தீபாவளி செம்மையா இருக்க போகுது!

இதற்கடுத்து வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி காரின் வரிசையை விரிவுப்படுத்தும் நோக்கில் வென்யூ என்-லைன் காரை ஹூண்டாய் இந்திய சந்தையில் களமிறக்குகிறது. பிறகு இந்தியாவிற்கான மற்றொரு எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் காராக ஐயோனிக் 5-ஐ ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் அறிமுகத்தை அக்டோபர் அல்லது நவம்பரில் எதிர்பார்க்கிறோம்.

வரிசைக்கட்டி நிற்கும் புதிய கார் அறிமுகங்கள்!! இந்த தீபாவளி செம்மையா இருக்க போகுது!

புதிய டாடா கார்கள்

இதுவரையில் கிடைத்துள்ள தகவலின்படி, டாடா மோட்டார்ஸ் இந்த தீபாவளி பண்டிகை காலத்தில், பெட்ரோல் & இவி வெர்சன்களை தொடர்ந்து நெக்ஸானில் சிஎன்ஜி வெர்சனையும், அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எலக்ட்ரிக் வெர்சனையும் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. ஆனால் இவற்றின் அறிமுக தேதி எதுவும் தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை.

வரிசைக்கட்டி நிற்கும் புதிய கார் அறிமுகங்கள்!! இந்த தீபாவளி செம்மையா இருக்க போகுது!

புதிய மஹிந்திரா கார்கள்

மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ என் காரை அறிமுகப்படுத்தி இருப்பினும், இந்த காருக்கான முன்பதிவுகள் வருகிற ஜூலை 30இல்தான் துவங்கவுள்ளன. மேலும், ஸ்கார்பியோ என் ஆட்டோமேட்டிக் கார்களின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த அறிவிப்பினை வருகிற ஜூலை 21ஆம் தேதியில் மஹிந்திரா வெளியிட உள்ளது. டெலிவிரிகள் தீபாவளி பண்டிகை சமயத்தில் துவங்கப்படலாம்.

வரிசைக்கட்டி நிற்கும் புதிய கார் அறிமுகங்கள்!! இந்த தீபாவளி செம்மையா இருக்க போகுது!

இந்த நிலையில் ஸ்கார்பியோ என் காரினை முன்பதிவு செய்ய விரும்புவோர் காரின் வேரியண்ட், என்ஜின் உள்ளிட்ட தேர்வுகளை தேர்வு செய்து வைத்து கொள்ளலாம் என ‘ஆட் டூ கார்ட்' வசதியை சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பொலிரோ நியோ மாடலின் அப்டேட் வெர்சன் பொலிரோ நியோ ப்ளஸ் என்கிற பெயரில் களமிறக்கப்படவுள்ளது.

வரிசைக்கட்டி நிற்கும் புதிய கார் அறிமுகங்கள்!! இந்த தீபாவளி செம்மையா இருக்க போகுது!

புதிய டொயோட்டா கார்கள்

டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் வெளியீடு செய்த இந்திய சந்தைக்கான அர்பன் க்ரூஸர் ஹைரைடர் நடுத்தர-அளவு எஸ்யூவி காரை அடுத்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுப்பக்கம் அர்பன் க்ரூஸர் காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை வழங்கும் திட்டத்திலும் டொயோட்டா உள்ளது.

வரிசைக்கட்டி நிற்கும் புதிய கார் அறிமுகங்கள்!! இந்த தீபாவளி செம்மையா இருக்க போகுது!

புதிய சிட்ரோன் கார்கள்

இந்தியாவில் பிரெஞ்சு கார் பிராண்டான சிட்ரோனின் 2வது மாடலாக சி3 காம்பெக்ட் எஸ்யூவி வருகிற ஜூலை 20இல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், இந்திய சந்தையில் சோபிக்காவிடினும், சி5 ஏர்க்ராஸிற்கு நடப்பு 2022ஆம் ஆண்டிற்குள் மத்திய-ஆயுள் அப்டேட்டை வழங்கும் எண்ணத்திலும் சிட்ரோன் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 6, 2022, 11:42 [IST]
English summary
Major car launches to take place before diwali season in india in 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+